கூடுதல் விற்பனை நிலையம் தொடக்கம்!
Posted on October 26, 2020
மணிமேகலைப் பிரசுரம் கடந்த 56 ஆண்டுகளாக சென்னை தியாகராய நகரில்கதவு எண் 7 தணிகாசலம் சாலை யில் இயங்கி வருகிறது இப்பொழுது விரிவான விற்பனை நிலையம் ஒன்று தேவை என்கிற வகையில் தற்போது உள்ள கட்டடத்திலிருந்து ஐந்து கட்டிடங்கள் தள்ளி புதிதாக விற்பனை நிலையம் ஒன்றை திறந்து இருக்கிறோம்.
இதில் விற்பனையில் உள்ள 4200 தலைப்பு நூல்கள் துறைவாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட இந்த காட்சி அறையில் வாசகர்கள் அமைதியாகவும் விரிவாகவும் புத்தகங்களை பார்த்து வாங்குவதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது தமிழ்வாணன் எழுதியுள்ள பல்துறை நூல்கள் ;லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள வாழ்வு முன்னேற்ற நூல்கள்; நேர நிர்வாகம் பற்றிய நூல்கள் ;மொழி நூல்கள் ; மருத்துவம்; ஜோதிடம் ;ஜாதகம்; 1926லிருந்து 2030 வரையிலான 105 வருடங்களுக்கான திருக்கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம்; சங்கர்லால் துப்பறியும் நாவல்கள்; சிறுகதைகள்; கவிதைகள் ;சமையல்; தையல் ;பக்தி; புராண நூல்கள் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் புத்தகங்கள் உள்ளன எனவே இவற்றை நேரில் பார்த்து வாங்கிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.
புதிய எண் : 21, (பழைய எண் : 9) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017