1926-இல் தேவகோட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர். பள்ளிக் காலத்திலேயே "தமிழ் மணம்" என்கிற சிற்றிதழ் ஒன்றைக் கையேடாக நடத்தி, தம் எழுத்து துறை ஆர்வத்தை 16 வயதில் உலகிற்குப் புலப்படுத்தியவர்...
எழுத்தாளர் தமிழ்வாணன் மூத்த புதல்வர், 1954இல் தேவகோட்டையில் பிறந்தவர். பள்ளி வாழ்வைத் தேவகோட்டையில் ஆரம்பித்து, இதன் தொடர்ச்சியை சென்னை ராமகிருஷ்ணா பள்ளியிலும், கல்லூாரி வாழ்க்கையைச் சென்னை பச்சையப்பனிலும் நிறைவு செய்தவர். எம்.ஏ.தமிழ் இலக்கியப் பட்டதாரி டெல்லிப் பல்கலையில் இதழியல் பட்டயப் படிப்புப் படித்தார்...
புரட்சி எழுத்தாளர் திரு.தமிழ்வாணனின் இளைய மகன். 1956இல் பிறந்தவர். பி.காம் பட்டத்தை சென்னை லயோலாவில் பயின்று, ஆடிட்டர் ஆகும் எண்ணத்தில் C.A படித்தவர். இது, முழுமை பெற இயலாதபடி தந்தையின் மரணம் நிகழவே, தந்தையின் நிறுவனமான மணிமேகலைப் பிரசுர நிர்வாகத்தை ஏற்று அதன் நிர்வாக இயக்குநரானார்...
தமிழகத்தின் மிக மூத்த பதிப்பகங்களுள், மணிமேகலைப் பிரசுரம் முன்னிலை வகிக்கும் பதிப்பமாகும். 1955இல் தமிழகத்தின் புகழ்மிகு எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்களால் தம் எழுத்துகளை தாமே பதிப்பித்து வெளியிடுவதற்காக இப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.