Posted on Sunday 24 August 2008

விஜய்யின் வில்லு திரைப்படம் கிராமப்புற இளைஞர்களை கவரும் திரைப்படம் என்கிறது கோலிவுட். அதற்காக கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமியக் லைஞர்களை வைத்து பழனி அருகே பாட்டொன்றை காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா. அது முடிந்ததுதான் தாமதம். விஜய்யையும் நயன்தாராவையும் விமானத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார் பிரபுதேவா. அங்கே போனால்தான் டூயட்டுகளுக்கு அர்த்தமே கிடைக்கும்.




















































