Posted on Friday 10 October 2008
அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
நமக்கு எந்த நபர்களைப் பிடிப்பது இல்லையோ, அந்த நபர்களின் அறிவுரைகளும் பிடிக்காமல் போவது பெரிய துரதிருஷ்டம். இவர்கள் அமிழ்தமும் வேப்பஞ்சாறாய்க் கசப்பது நம் அசட்டை செய்யும் குணத்தால் வந்ததுதான்.
யார் சொல்கிறார்கள் என்கிற அடிப்படையைவிட என்ன சொல்கிறார்கள் எனபதே முக்கியம்!
நம் சிறுவயதுக் குணம் இன்னுமா தொடர வேண்டும்? இன்னார் சொன்னால் அப்படியே கேட்பது; இன்னார் சொன்னால் அடியோடு மறுப்பது என்கிற இந்தக் குணம் பக்குவ வயதிலும் தொடர்வது எவ்வளவு பேதமை!
நாம் சிந்திக்காத கோணம் இவர் சொல்வதில் இருக்கிறது. நாம் பார்க்க மறந்த பார்வை இதில் ஒளிந்திருக்கிறது என்றெண்ணுவது புத்திசாலித்தனமா, இவன் வேண்டாதவன். எனவே, இவன் சொல்வதெல்லாம் நம் கெடுதலுக்கே என்று வாதப் பிரதிவாதிகளைச் செய்யாமலேயே தீர்ப்பு எழுதுவது புத்திசாலித்தனமா?
நான் எனும் அகந்தையும் ஒரு மனிதனைப் பிறர் சொல்வதைப் புறக்கணித்து மகிழ்கிறது. எனக்குத் தெரியாததையா இவன் சொல்ல வந்துவிட்டான்? இவன் தகுதி என்ன? என் தகுதி என்ன? என்று நபர்களின் அடிப்படையில் ஒன்றை எடை போடுவதை நிறுத்திவிட்டு, கருத்தின், கோணத்தின் அடிப்படையில் மதிப்பீடுகளை அமைப்பது நல்லது.
இவன் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்தால் இவனுக்கல்லவா பெருமைகள் போய்விடும்? நற் பெயரை இவனல்லவா தட்டிச் சென்றுவிடுவான் என்று எண்ணுவதைவிட, நன்மை நமக்கு; பெயர் அவனுக்கு! இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிற கோணத்திலும் பிறர் கருத்துக்குச் செவி சாய்ப்பதும், தராசிலிட்டு ஏற்பதும் புத்திசாலித்தனம்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?











































வலியின்றி வசந்தம் வருமா?
















ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!








