Srilanka’s Tamils issue: Ramadoss supports Karunanidhi

Posted on Wednesday 8 October 2008

தமிழனத்தை காக்க தலைமை ஏற்றால் கருணாநிதிக்கு துணை நிற்போம்: ராமதாஸ்

சென்னை: தமிழினத்தை காக்க முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்றால், அவருக்கு தமிழகமே துணை நிற்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு விஷயத்திலாவது இங்குள்ள தமிழர்கள் ஒன்றுபட்டிருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்னையை அணுகுவோம் என்று முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை முழுமனதோடு வரவேற்கிறேன்.

முதல்வரின் இந்த வேண்டுகோள் பேச்சளவில் நின்றுவிடக் கூடாது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிரச்னையில் நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களை காக்கும் பிரச்னையில் இப்போது தமிழகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற வகையில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி இலங்கை மண்ணில் தமிழினத்தை ஒழித்துக்கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மூர்க்கத்தனமாக போரிட்டு வரும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் புகட்டுவதற்கான நடவடிக்கைகளை வகுத்து செயல்பட முதல்வர் முன் வர வேண்டும்.

தமிழர்கள் எங்கு செத்தாலும் அவர்களும் தமிழர்கள்தான். அந்த தமிழர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பு தமிழக முதல்வருக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் இருக்கிறது. முதல்வர் கருணாநிதி அந்த பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற முன்வந்திருக்கிறார் என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது. அதற்காக அவரை மனதார பாராட்டுகிறேன்.

இந்த பிரச்னையில் அதிகாரிகள் மட்டத்தில் பேசி பயனில்லை. பிரதமரே நேரடியாக இலங்கை அதிபரை தொடர்பு கொண்டு இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் நேரில் அறிந்து வர இங்கிருந்து நாடாளுமன்ற குழுவை அனுப்ப வேண்டும். தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அதில் இடம் பெற வேண்டும்.

தமிழர்களின் நிலையை அவர்கள் அறிந்து வர வேண்டும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மத்திய அரசு மனிதாபிமான உதவிகளை செய்ய வற்புறுத்த வேண்டும்.

தமிழனத்தை காக்கும் பணியில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி தலைமை ஏற்க முன் வர வேண்டும். இதில் தமிழகமே அவருக்கு துணை நிற்கும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 9:28 pm
Filed under: news
Srilankan Tamils issue: CM must meet PM, says Ramadoss

Posted on Tuesday 7 October 2008

s_ramadoss.jpgதமிழரைக் காக்க பிரதமரை கருணாநிதி நேரில் சந்திக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி முறையிட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தமிழர்கள் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி தமிழர்களை தினமும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக உயிருக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சொந்த வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ள இவர்கள் உண்ண உணவின்றியும், மருந்துகள் இன்றியும் வாடிக் கொண்டுள்ளனர்.

ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான படுகொலையை ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் சபதத்தை துணிந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இந்திய அரசு வாய் திறக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

இலங்கை தமிழர்களைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தமிழக அரசும் அந்தக் கடமையை செய்யவில்லை என்று உலக தமிழர்களெல்லாம் வேதனையோடு மூழ்கி நிற்கின்றனர். அவர்களது வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.

பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகளை அனுப்பி வையுங்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். அது வரவேற்கத்தக்க கோரிக்கைதான். ஆனால் இவை மட்டும் போதாது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகும், இந்திய அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கையில், இப்போது போர் நடவடிக்கைகளும், போர்ப்படையினரின் தாக்குதல்களும் தீவிரமாகி இருப்பதும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததும், இலங்கைத் தமிழர் பிரச்னையில் சட்டப்பேரவையும், தமிழக மக்களும் விரும்பிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் எங்கோ ஒரு மூலையில் பொதுக்கூட்டம் நடத்தி, நிலைமையை விளக்குவதாலும், தந்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதாலும் நாம் விரும்புகின்ற பயன் ஏற்படப் போவதில்லை.

முதல்வரும், அவரது தலைமையிலான அரசும் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில், கடந்த சில ஆண்டுகளாக இல்லாத ஒற்றுமை இப்போது தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது. இந்த நல்ல சூழ்நிலையை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்களப் போர்ப்படையினருக்கு எந்தவித உதவியும் வழங்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

admin @ 12:05 am
Filed under: news
Reservevation should give on society base only: Ramadoss

Posted on Sunday 5 October 2008

ramadoss.jpg27 சதவிகித இடஒதுக்கீடு சமூகரீதியில் அமையவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: இட ஒதுக்கீடு சலுகை என்பது சமூகரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதாரரீதியில் வழங்கப்படக் கூடாது என்று  ராமதாஸ் ‌‌கூறியுள்ளார். 

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி ‌நிறுவன‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற்றிட இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ. 2.50 லட்ச‌த்‌தி‌லிருந்து ரூ.4.50 லட்சமாக உயர்த்திட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இடஒதுக்கீடு சலுகை என்பது சமூகரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதாரரீதியில் வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது.

எனவே, தற்காலிக ஏற்பாடாக வருமான உச்சவரம்பை உயர்த்தியுள்ளதை வரவேற்கின்ற அதே நேரத்தில் அடுத்தகட்டமாக வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்கிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வற்புறுத்துகிறேன். இதற்காக தொடர்ந்து நாங்கள் போராடவும் தயங்கமாட்டோம்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 ‌சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு முதல்படியாக மிகக் குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை இல்லை என பெரும்பாலானவர்களை ஒதுக்கி வைத்துவிட்டதால், இந்த குறைந்த அளவிலான இடங்களைக் கூட நிரப்புவதற்கு தேவையான அளவுக்கு போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லி 400-க்கும் மேற்பட்ட இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற இருக்கும் ஆபத்தை மத்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள இந்த முடிவு தடுத்து நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இதுவே நிரந்தர பரிகாரமாக இருந்துவிட முடியாது. இனி அடுத்து வரும் ஆண்டுகளில் 27 ‌சதவிகிதம் அளவிற்கான இடங்களை முழுமையாக நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தேவையான அளவுக்கு போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக பெரும்பாலான இடங்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படும் ஆபத்து இருந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு கொல்லைப்புறமாக வர இருக்கும் ஆபத்தை நிரந்தரமாக தடுக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோர் என்ற தடையை முற்றிலுமாக தகர்த்தெறிய வேண்டும். வருமான வரம்பு இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் சலுகையை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் செயல்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் தமிழகத்திலிருந்து இதற்கான முயற்சி தொடங்கப்பட வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கையுடைய அனைத்து அரசியல் இயக்கங்களும் இதற்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்’ எ‌ன்று கூறியுள்ளார்.
 
 

admin @ 11:10 pm
Filed under: news
Arcot Veerasamy should quit, says PMK

Posted on Wednesday 17 September 2008

‌மி‌ன்வெ‌ட்டு: ஆற்காடு வீராசாமி பதவி விலகவேண்டும்: பா.ம.க. ஆர்ப்பாட்டம்

செ‌ன்னை: ‌மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து‌ம், அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி பத‌வி ‌விலக‌‌க் கோ‌ரியு‌ம் பா.ம.க. சா‌ர்‌பி‌ல் நேற்று மா‌‌நில‌ம் முழுவதும் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌ந்தது.

செ‌ன்னை, மதுரை, ‌திரு‌ச்‌சி‌ உ‌ள்‌ளி‌ட்ட மாவ‌ட்ட தலைநகரங்களிலும் ‌பிற இட‌ங்க‌ளிலு‌ம் இ‌ந்த க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நடைபெ‌ற்றது. இ‌‌தி‌ல் ஏராளமான பா.ம.க.‌வின‌ர் கல‌ந்து கொ‌ண்டு அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌க்கு எ‌திராக க‌ண்டன குர‌ல் எழு‌ப்‌பின‌ர்.

மேலு‌ம் த‌மிழக‌ம் இரு‌ளி‌ல் மூ‌ழ்‌கி உ‌ள்ளதை கு‌‌றி‌ப்பாக உண‌ர்‌த்து‌ம் பொரு‌ட்டு, மெழுகுவ‌ர்‌த்‌தி, ‌சி‌மி‌னி ‌விள‌க்குக‌ளை கொ‌ண்டு வ‌ந்து‌ம் அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌யி‌ன் செய‌ல்படாத ‌நிலையை‌க் க‌‌ண்டி‌த்து ஒ‌‌ட்ட‌ப்ப‌ட்ட சுவரொ‌ட்டிகளை ஏ‌ந்‌தியபடியு‌ம் ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் பா.ம.க. தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணி தலைமை‌யி‌ல் இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌ந்தது. ‌அ‌ப்போது அவ‌ர் பேசுகையில், ‌

”தமிழகதத்தில் வரலாறு காணாத வகையில் மின்வெட்டு நிலவுகிறது. மின்வெட்டே இல்லை என்று  சட்டசபையில் கூறினார் ஆற்காடு வீராசாமி. ஆனால் அப்போது அமலில் இருந்த 5 மணிநேர மின்வெட்டு இப்போது 8 மணிநேரமாக அதிகரித்துவிட்டது.

தி.மு.க. அரசு, தனியாரை மின் துறையில் ஈடுபடுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அதையும் இன்னும் அமல்படுத்தவில்லை. அரசாங்க நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளும் செய்யப்படவில்லை. அனல்மின் உற்பத்தியில் 500 மெகாவாட் குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்றோம். இப்போது அவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து முதல்வர் நீக்கவேண்டும்” என்றார்.

admin @ 1:17 am
Filed under: news
Advertisements to Tamil Osai, not stoped: TN govt.,

Posted on Saturday 13 September 2008

தமிழோசைக்கு விளம்பரம் நிறுத்தப்படவில்லை: அரசு

சென்னை: அரசு விளம்பரங்களை தொடர்ந்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழோசை நாளிதழ் தொடர்ந்த வழக்கை பைசல் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பா.ம.க. வின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழோசை நாளிதழ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழோசை சார்பில் அதன் பதிப்பாளரும், பா.ம.க. தலைவருமான ஜி.கே.மணி தாக்கல் செய்திருந்த மனுவில்,

‘தி.மு.க., பா.ம.க. வுடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர், ஜூன் 15ம் தேதி முதல் தமிழோசை நாளிதழுக்கு தரப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு விட்டது.

எனவே முன்பு போலவே தமிழோசை நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை தர உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில்,

‘இன்று வரை தமிழோசை நாளிதழுக்கு வழக்கம் போலவே விளம்பரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த காரணத்தைக் கொண்டும் விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை. இதுதொடர்பாக தமிழோசை கூறும் வாதம் தவறானது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், அரசின் வாதத்தை பதிவு செய்து கொள்வதாகக் கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.

admin @ 1:58 am
Filed under: news
Tamil Elam will establish when PMK rule TN: Ramadoss

Posted on Saturday 13 September 2008

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும்: ராமதாஸ்
 
சென்னை: பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ‌இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் பேசினார்.

பா.ம.க. சா‌ர்‌பி‌ல் தி.மு.க. கொள்கையும், பா.ம.க. கொள்கையும் என்ற தலைப்பில் செ‌ன்னை ‌வியாச‌ர்பாடி‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்துகொண்டு ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல்,

”பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்‌க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ம.க. போ‌ல் எந்தக் கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை.

தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினோம். அதை அவ‌ர்க‌ள் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளவி‌ல்லை.

பா.ம.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்கிறார்கள். பா.ம.க. கொள்கை உள்ள கட்சி. இங்கு ரவுடிகளுக்கு இடமில்லை. அவர்களை நாங்கள் சேர்ப்பதும் இல்லை. எங்கள் கட்சிகாரர்களுக்கு ரோஷம் உண்டு. தன்மான உணர்வு உண்டு. தன்மானத்தை மட்டும் விட்டுத்தர மாட்டார்கள்.

இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். அதை கொடுத்தாலே மக்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்கள். ரூ.1 அரிசி யாருக்கு வேண்டும்?

இலங்கையில் ஈழத்தமிழர்களை ராணுவம் அழித்து வருகிறது. அந்தத் தமிழர்களை காக்க வேண்டமா? நம் கண் முன்னே ஓர் இனம் அழிகிறது. தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள். அவர்களை காக்க வேண்டமா? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும். அதைபோல் 2011இல் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஒரு துளி மதுகூட இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” எ‌ன்று கூ‌றினா‌ர். 

admin @ 12:06 am
Filed under: news
PMK will stand with ADMK for public issues, Ramadoss says

Posted on Thursday 11 September 2008

ramadossமக்கள் பிரச்னை: அ.தி.மு.க. வுடன் பா.ம.க. துணை நிற்கும்!: ராமதாஸ்
 
தேனி: மக்கள் பிரச்னைக்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளோடு ஒருங்கிணைந்துப் போராட பா.ம.க. தயார் என்று ராமதாஸ் கூறினார்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தேனி வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில் இதை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

”அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் உயர்கல்வியில் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எத்தனை பேர்? வெளிமாநிலத்தினர் எத்தனை பேர் என்பதை உயர்கல்வி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

தேனி மாவட்டம் 4 முதல்வர்களை தந்துள்ளது. ஆனால் இங்கு ஒரு அரசுக் கல்லூரி கூட கிடையாது. இங்கு அரசுக் கலைக் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.

ஒரு ரூபாய் அரிசி வேண்டாம். கலர் டிவி வேண்டாம். மதுவை ஒழியுங்கள். இல்லை என்றால் ஒரு ரூபாய் அரிசி வாய்க்கரிசியாகத்தான் பயன்படும் என்று தமிழக தாய்மார்களே கூறுகிறார்கள். மின்வெட்டை கண்டித்தும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை பதவி விலக வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மக்கள் பிரச்னையில் அ.தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து போராடினால் பா.ம.க. துணை நிற்கும். அப்படி போராடுவதிலும் தவறில்லை” என்றார்.

admin @ 10:35 pm
Filed under: news
Ramadoss condemns Centre to help Srilankan Army

Posted on Thursday 11 September 2008

இலங்கைக்கு ராணுவ உதவி கூடாது: ராமதாஸ்

நெல்லை: தமிழர்களுக்கு எதிராக அட்டூழியம் செய்துவரும் இலங்கைக்கு மத்திய அரசு ராணுவ உதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனே நிறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நெல்லையில் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

”இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்னையில் இந்திய அரசின் அணுகுமுறை மாற வேண்டும். இலங்கைக்கு ராணுவ உதவி கிடையாது என்று சொல்லிக் கொண்டே, மறைமுகமாக ராணுவ உதவி அளித்து வருவதை நிறுத்த வேண்டும்.

இலங்கைக்கு இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என்ற பாகுபாடு கிடையாது. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே விரோதிகள்தான்.

இரு தினங்களுக்கு முன் வவுனியாவில் நடந்த தாக்குதலில் இலங்கை ராணுவத்துக்காக ரேடார் கருவியை இயக்கிவந்த இந்திய ராணுவத்தினர் காயமடைந்த செய்திக்குப் பிறகுதான் இந்தியாவின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்துள்ளது.

இது தமிழர்களுக்கு எதிரான செயல் என்பதிலே எள்ளளவும் சந்தேகமில்லை. உடனடியாக இலங்கைப் போர் முனையில் உள்ள இந்திய ராணுவப் பொறியாளர்கள் மற்றும் இதர பிரிவினரை திரும்ப அழைக்க வேண்டும்.

இந்தியா இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் வழங்காது, எதிர்காலத்தில் வழங்கவும் மாட்டோம் என்று தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

இதுவரை தமிழக முதல்வர் மெளனமாக இருந்தது போதும். இனியாவது இந்த விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள அரசுக்கு அவர்களுக்குப் புரிகின்ற மொழியிலேயே பதிலடி தர வேண்டும்.

இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரிசி விலை 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பால் சாதாரண மக்களுக்கு மாதத்துக்கு ரூ.20 மட்டும்தான் நிவாரணம் கிடைக்கும். மற்றபடி இது கடத்தல்காரர்களுக்குத்தான் சாதகமாக முடியும்.

தி.மு.க. ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மதுவெள்ளம் ஆறாக ஓடுகிறது.

அரசியல் சட்டம் 47-ஐப் பயன்படுத்தி மதுப் பழக்கத்தை குறைக்கிற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991இல் கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தினாலே போதும்.

அந்த சட்டம், கள்ளச்சாராயம், மது விற்கும் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., உதவி ஆய்வாளர் போன்றோரை முதல் முறை எச்சரிப்பது, இரண்டாவது முறை சஸ்பெண்ட் செய்வது, மூன்றாம் முறை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்துகிறது. இதைக் கடுமையாக அமல்படுத்தினாலே கள்ளச் சாராயப் பிரச்னை தீர்ந்துவிடும்” என்றார்.

admin @ 2:08 am
Filed under: news
Power : GK Mani accuses the DMK

Posted on Tuesday 9 September 2008

gk-mani மின் உற்பத்தி திட்டங்களில் கவனம் செலுத்தாத தி.மு.க.!: ஜி.கே.மணி

திண்டுக்கல்: மின் உற்பத்தி திட்டங்களில் தி.மு.க. அரசு கவனம்  செலுத்தாததால் தான் தமிழகம் பெரும் பின்னடைவை தற்போது சந்தித்துள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

”நாட்டில் குடி பழக்கம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் அனைத்து இளைஞர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவர்.

குடும்பத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டிய இளைஞர்கள் குடிக்கு அடிமையாகிவிட்டால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு வீடு வீடாகக் கூட இலவச அரிசி வழங்கலாம்.

தமிழக மக்களை மின்வெட்டு ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது. மின் உற்பத்திக்கு சிறு சிறு திட்டங்கள் செயல்படுத்தியிருந்தாலே ஓரளவு மின் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டிருக்கும். பல கோடி செலவில் பெரிய மின்திட்டங்கள் எனக் கூறிக் கொண்டிருப்பதால் இடம் தேர்வு செய்வது உள்பட அனைத்து விஷயங்களில் தாமதமாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் மின் உற்பத்தி திட்டங்களில் கவனம் செலுத்தாததால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டிற்கு தமிழக அரசு முழுபொறுப்பேற்க வேண்டும். அதேபோல விலைவாசியை கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை.

பா.ம.க.வை பழிவாங்கும் நோக்கில் தி.மு.க. செயல்படுகிறது. 3ஆவது அணி பற்றி தற்போது பேச வேண்டியதில்லை. தேர்தல் வந்தால்தான் உண்மை நிலை தெரியும். நவம்பர் அல்லது டிசம்பரில் மக்களவைத் தேர்தல் வரலாம்” என்றார்.

admin @ 2:08 am
Filed under: news
GK Mani’s son marriage in Chennai

Posted on Monday 1 September 2008

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை!:
ஜி.கே. மணி மகன் திருமணத்தில் ராமதாஸ் பேச்சு

சென்னை: பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கும், அ.தி.மு.க. திருவள்ளூர் மாவட்ட பேரவை இணை செயலாளர் வலசை சந்திரசேகரன் மகள் சத்யாவுக்கும் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலை திருமணம் நடந்தது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

தமிழ்முறைப்படி மணமகன், மணமகளை ராமதாஸ் அறிமுகப்படுத்தி வைக்க தாய் மாமன், மணமகளுக்கும் மணமகனுக்கும் மாலை அணிவித்தார்.

பின்னர் மணமக்கள் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ராமதாஸ் மற்றும் பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க அதை மணமகள் சத்யா கழுத்தில் கட்டினார் மணமகன் தமிழ்குமரன்.

பின்னர் ராமதாஸ் பேசுகையில்,

”மணமக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தை நினைத்துக் கொள்ளவேண்டும். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நாட்டில் கோடிக்கணக்கானோர் பட்டினி கிடக்கிறார்கள்.

அனைவருக்கும் கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லாத கல்வி, தரமான கல்வி கிடைக்கவேண்டும்.

இன்னும் 5 வருடங்களில் இந்தியாவில் குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிவிட்டு வருமானமத்திற்காக அரசே மதுபானக் கடைகளை நடத்துகிறது.

நல்ல இளைஞர்களை உருவாக்கினால்தான் நாடு உருப்படும். குடிகார இளைஞர்களை உருவாக்கினால் நாடு உருப்படாது.

12ஆம் வகுப்புவரை கட்டாயக் கல்வி வேண்டும். பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை தரவேண்டும்.

50 அல்லது 100 ஏக்கரி்ல் அதுவும் விளைநிலங்கள் இல்லாத இடத்தில் பொருளாதார சிறப்பு பொருளாதார மண்டலங்களை  உருவாக்க வேண்டும்.

மக்கள் அரசிடம் கையேந்தி உள்ளனர். தமிழ்நாட்டில் 4 கோடி பேர் வறுமையில் வாடுகிறார்கள். வேலையைக் கொடுத்து மக்களின் வாங்கும் சக்தியை அதிகரியுங்கள்.

கலவியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுக்கடைகளை அரசே நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.

குடிப்பவர்களை எங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை. ஒழுக்கம்தான் முக்கியம். குடிக்கும் தொண்டன் எங்களுக்குத் தேவையில்லை” என்றார்.

admin @ 3:23 am
Filed under: news