Vijay’s Villu based village character

Posted on Sunday 24 August 2008

vijay

விஜய்யின் வில்லு திரைப்படம் கிராமப்புற இளைஞர்களை கவரும் திரைப்படம் என்கிறது கோலிவுட். அதற்காக கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமியக் லைஞர்களை வைத்து பழனி அருகே பாட்டொன்றை  காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா. அது முடிந்ததுதான் தாமதம். விஜய்யையும் நயன்தாராவையும் விமானத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார் பிரபுதேவா. அங்கே போனால்தான் டூயட்டுகளுக்கு அர்த்தமே கிடைக்கும்.

admin @ 12:06 am
Filed under: kollywood
Sathyam Telugu Audio Release

Posted on Friday 1 August 2008

vishal.jpg

விஷால் - நயன்தாரா நடித்திருக்கும் ‘சத்யம்’ படம் தெலுங்கிலும் ‘சல்யூட்’ எனும் பெயரில் தயாராகி உள்ளது. ‘சல்யூட்’ படத்திற்கு ஹைதராபாத்தில் பிரமாண்ட விழா எடுத்து ஆடியோ ரிலீஸ் செய்தவர்கள், தமிழ் ‘சத்யம்’ படத்திற்கு சப்தமில்லாமல் ஆடியோ ரிலீஸ் செய்துள்ளனர். ஏன் இந்த ஒரு கண் வெண்ணெய், ஒரு கண் சுண்ணாம்பு கலாச்சாரம் விஷால்?!

Link for Sathyam Movie Gallery

Link for Sathyam Trailer

Link for Sathyam Songs Download

admin @ 4:18 am
Filed under: kollywood
Kuselan Car rounds on city roads

Posted on Monday 28 July 2008

ரஜினியின் ‘குசேலன்’ ரதம்!: நயன்தாரா தொடங்கி வைத்தார்

ஜினி நடித்திருக்கும் குசேலன் திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பிரபு, பசுபதி, மீனா, வடிவேல், லிவிங்ஸ்டன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குசேலனுக்கு சினிமா தணிக்கைத்துறை ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்தத் திரைப்படம் 2 மணி 40 நிமிடங்கள் ஓடுகிறது. இதில்  3 ஆவது ரீலில் வரும் ரஜினி 60 நிமிடங்கள் வருகிறார்.  இதன் மூலக்கதையான மலையாள திரைப்படத்தில் (கத பறையும்போள்) சூப்பர் ஸ்டாராக நடித்த மம்மூட்டி, சுமார் 18 நிமிடங்கள் மட்டுமே வந்தார். குசேலனில் ரஜினிக்காக கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

குசேலன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு விசேஷ வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், ரஜினி நடிக்கும் குசேலன் என்ற வாசகத்துடன் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வேனின் உட்புறம் ரஜினி அறிமுகத் திரைப்படமான அபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரையிலான திரைப்பட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் குசேலன் ரதத்தை நடிகை நயன்தாரா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, அவருடைய கணவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குசேலன் ரதம் சென்னை நகரைச் சுற்றி வரும். முக்கிய இடங்களில் நிறுத்தப்படும். அப்போது ரசிகர்கள் வேனுக்குள் சென்று ரஜினியின் புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

admin @ 11:04 pm
Filed under: news
Morphing sexy clips rounds in mobiles: Nayanthara meets CoP

Posted on Friday 25 July 2008

மொபைலில் அரைகுறை ஆடைக் காட்சிகள்!: ஆணையரிடம் நயன்தாரா புகார்

நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்த அரைகுறை ஆடைக் காட்சிகள் திருச்சி பகுதி மொபைல் போன்களில் உலாவந்ததைத் தொடர்ந்து இது தனது எதிரிகளின் திட்டமிட்ட சதி என்ற முடிவுக்கு வந்திருக்கும் நடிகை நயன்தாரா இது குறித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா, சென்னை மாநகர ஆணையரிடம் கொடுத்தப் புகாரில்,

‘தொழில் போட்டி மற்றும் பொறாமை காரணமாக எனது விரோதிகள் சிலர் என் உருவத்தை மார்ப்பிங் செய்து எம்.எம்.எஸ். ஒன்றைப் பரப்பி வருகின்றனர்.

அடுத்த மாதம் நான் நடித்துள்ள குசேலன் மற்றும் சத்யம் ஆகிய இரு பெரிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் என் பெயருக்கும் நான் நடித்துள்ள திரைப்படங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபாசமான எம்.எம்.எஸ்.களை எனது விரோதிகள் பரப்பி வருகின்றனர். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்த ஆபாச எம்.எம்.ஸ்., திருச்சியைச் சேர்ந்த ஒருவரது மொபைலிலிருந்து வந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ள காவல்துறை, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நயன்தாராவின் தொழில் எதிரி யார், அவருக்கும் இந்த ஆபாச எம்.எம்.எஸ்.ஸூக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க, தனிப்படை ஒன்று கோடம்பாக்கத்தின் சந்து பொந்துகளில், புகுந்து புறப்பட்டு, கிண்டிக் கிளறி வருகிறது.

admin @ 10:48 pm
Filed under: news
Nayandara’s glamourous stills shown in mobiles!

Posted on Wednesday 23 July 2008

மொபைல் போனில் உலா வரும் அரைகுறை நயன்தாரா!

திருச்சி: நடிகை நயன்தாரா, சிம்புடன் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் புகைப்படங்களால் திருச்சி மொபைல் போன்கள் கிளுகிளுப்பை கிளப்பின.

நடிகை நயன்தாராவும் சிம்புவும் இணைபிரியா காதலர்களாய் இருந்த சமயத்தில், அவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்திருந்த காட்சிகள் இணைய தளங்களில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது இருவரும் பிரிந்துள்ள நிலையில், அவர்களுடைய வேறு சில புகைப்படங்கள் இப்போது மொபைல் போன்களில் இறங்கி கிளுகிளுப்பை கிளப்பியுள்ளன.

திருச்சியில் பலரின் மொபைல் போன்களுக்கு பிக்சர் மெசேஜாக இந்தப் புகைப்படங்கள் வந்தன.

நடிகை நயனின் அரைகுறை புகைப்படங்களை கண்ட ஜொள்ளு ஆட்கள் அதை தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பிவைத்தனர். திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே இந்தச் செய்தி பரவி அதே பேச்சாக இருந்தது.

admin @ 1:04 am
Filed under: news
Actor Vishal rejects rumors against him

Posted on Tuesday 22 July 2008

நயன்தாரா கவர்ச்சி காட்ட கட்டாயப்படுத்தவில்லை: நடிகர் விஷால்

வர்ச்சியாக நடிக்க நயன்தாராவை வற்புறுத்தவில்லை என்று நடிகர் விஷால் கூறினார்.

சத்யம் திரைப்படம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு விஷால் பதில் அளிக்கையில்,

”ஆறு திரைப்படங்களில் நான் பட்ட சிரமங்களை ஒருசேர சந்தித்து நடித்தத் திரைப்படம் சத்யம். இது தெலுங்கில் சல்யூட் என்ற பெயரில் வெளியாகிறது. ஆகஸ்ட் 14 இல் வெளியாகும் சத்யம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வேடம் ஏற்றுள்ளேன். 84 இசைக்கலைஞர்கள் ஹாரிஷ் ஜெயராஜ் தலைமையில் சிம்பொனி முறையில் ரீரெக்கார்டிங் வாசித்துள்ளனர்.

‘செல்லமே, செல்லமே’ என்ற பாடலுக்கு சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் நடித்துள்ளேன். இதற்காக 6 மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்தேன்.

மற்ற கதாநாயகிகளை விட நயன்தாராவுடன் நெருக்கமாக  நான் இதில் நடித்திருப்பதாக கூறுகிறார்கள். நயன்தாராவை கவர்ச்சியாக நடிக்கவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. காட்சிக்கு தேவைப்பட்டதை அவரே புரிந்துகொண்டு நடித்துள்ளார்.

என்னைப்பற்றி வரும் செய்திகளை விளம்பரத்திற்காக, நானே  கிளப்பி விடுவதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.  அடுத்த ஆண்டு திரைப்படம் ஒன்றை இயக்கி நடிக்கிறேன்” என்றார்.

admin @ 3:29 am
Filed under: news
Actor Dhanush’s birthday

Posted on Monday 21 July 2008

இளைய சூப்பர்ஸ்டார்…  ரசிகர்கள் பட்டம்: நடிகர் தனுஷ் ஏற்க மறுப்பு!

yar51.jpg

டிகர் தனுஷ் தனது 25ஆவது பிறந்தநாளை சென்னையில், ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடினார். அப்போது ரசிகர்கள் அவருக்கு இளைய சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் அந்தப்பட்டத்தை தான் ஏற்கவில்லை என்று தனுஷ் தெரிவித்தார்.

நேற்று கே.கே. நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தனுஷ் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான ரசிகர்கள் அங்கே குழுமியிருந்தனர்.

மதியம் இரண்டு மணி அளவில் மண்டபத்தினுள் நுழைந்த தனுஷ், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சார்பில் இளைய சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

அதன்பிறகு தனுஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

”இது எனது 25 ஆவது பிறந்தநாளாகும். வரும் 28 ஆம் தேதிதான் என்னுடைய பிறந்தநாள் வருகிறது என்றாலும் அப்போது நான் படிக்காதவன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்காக ஐதாராபாத்தில் இருப்பேன். ஆகையால் என் ரசிகர்களோடு பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு இன்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன்” என்றவர் மேலும் கூறுகையில்,

”என் ரசிகர்கள் பாசம் காரணமாக இளைய சூப்பர்ஸ்டார் பட்டத்தை எனக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே அந்தப்பட்டத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

என் ரசிகர்கள் என்னை ரசிப்பதற்கு முன்னால் தங்கள் குடும்பத்தை கவனிக்கவேண்டும். அப்பா, அம்மாவை கவனிக்கவேண்டும். அப்புறம் என்மீது அன்பு செலுத்த வேண்டும். என் ரசிகர்கள் என்னை சமூக சேவையில் ஈடுபடுமாறு கூறுகிறார்கள். என் வயது உள்ளவர்கள்தான் என் ரசிகர்கள் என்பதால் அவர்கள் அரசியல் குறித்து யோசிப்பதில்லை. நானும் யோசிப்பதில்லை. எனக்கு ஏற்ற சினிமா ஜோடியாக நயன்தாராவை என் ரசிகர்கள் கருதுகிறார்கள். நானும் அவர்கள் முடிவுக்கு அதை விட்டுவிட்டேன்” என்றார்.

admin @ 11:24 pm
Filed under: news
Satyam - Sexy Nayan with Vishal

Posted on Friday 18 July 2008

vishal-nayan.jpg

பில்லாவிற்குப் பிறகு நயன்தாரா கவர்ச்சியில் அசத்தியுள்ள திரைப்படம் சத்யம் என்கிறார்கள். நயனும் விஷாலும் போட்ட சூடான கெட்ட ஆட்டத்தைக் காண தமிழ், தெலுங்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். யாரடி நீ மோகினியில் ஏற்ற குடும்பபாங்கான வேடம் பேசப்பட்டாலும், திரையில் வெற்றிக்கொடியை நிலையாக, நீண்ட நாட்களுக்கு பிடிக்கவேண்டுமானால் கவர்ச்சி தான் கை கொடுக்கும் என்று நயன் நம்புகிறார். ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் சத்யம் திரைப்படத்தைக் காண ரசிகர்களோடு, நயனும் காத்திருக்கிறார். அதன் பிறகு தெரியும் அவருடைய கிராப் ஏறுகிறதா இறங்குகிறதா என்பது.

admin @ 6:56 am
Filed under: kollywood
Vishal, Trisha in love?

Posted on Friday 18 July 2008

vishal.jpg

விஷால் - த்ரிஷா காதலா? என்பதுதான் இப்போது தலைப்புச் செய்தியே! சமீபத்தில் இவர்கள் கலந்து கொண்ட நட்சத்திர ஓட்டல் விருந்து ஒன்றில் எதேச்சையாக நயனும் சிம்புவும் திடீர் பிரசன்னமாக சிம்பு நயன் காதல் மீண்டும் பத்திக்கிச்சோ என்ற கேள்வி எழும்பியது. சிம்பு நயன் சந்திப்பு ஏதோ எதிர்பாராத விதமாக நிகழ்ந்ததுபோன்ற தோற்றத்தை உருவாக்கியதே த்ரிஷாதான் என்றும் தகவல் பரவியது. சிம்புவுடன் நயனைக் கோர்த்துவிட்டால் கோலிவுட்டில் தனக்கான பாதை தெளிவாகிவிடும் என்று கணித்தே இந்த ஏற்பாட்டை த்ரிஷா செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சந்திப்பு நிகழ்வின் பின்னணி என்ன கேள்வி அம்பு இப்போது த்ரிஷா மீதே திரும்பியிருக்கிறது.

அது, விஷாலுடன் த்ரிஷா காதலா என்ற கேள்வியை எழுப்பி விட்டிருக்கிறது. இந்தக் காதல் சமாச்சாராம் கிளம்பியதுமே இருவரும் அதை மறுப்புத் தெரிவித்து அணைத்திருக்கிறார்கள். புகைவது என்றைக்காவது பற்றி எரியாதா என்ன?

admin @ 6:37 am
Filed under: kollywood
Skip? Kuselan Heroines rejects rumours

Posted on Thursday 3 July 2008

குசேலன் திரைப்பட விழா புறக்கணிப்பா?: நடிகைகள் மறுப்பு

குசேலன் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தாக வந்த செய்திக்கு நடிகைகள் மீனா மற்றும் நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளனர். குசேலன் திரைப்பட விழாவை புறக்கணிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்த், பசுபதி, நயன்தாரா, மீனா, ஆகியோர் நடித்துள்ள குசேலன் திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குசேலனில் நடிக்கும் பசுபதி,  மீனா, நயன்தாரா ஆகிய முக்கியப் புள்ளிகள் வரவில்லை. இதைத் தொடர்ந்து இம்மூவரும் வேண்டுமென்றே விழாவை புறக்கணித்ததாக செய்திகள் கிளம்பியது.

ஆனால் இம்மூவரும் வெவ்வேறு படப்பிடிப்புகளில் இருந்ததால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மீனா கூறுகையில்,

”கடந்த 27ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் ‘கரிகொண்ட தங்கம்மா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இதனால்தான் குசேலன் திரைப்பட விழாவிற்கு வர இயலவில்லை.

குசேலன் திரைப்பட தெலுங்கு பதிப்பில் (கதாநாயகடு) நானே டப்பிங் பேசி வருகிறேன். அந்த வேலையும் ஐதராபாத்தில்தான் நடந்துவருகிறது” என்று கூறுகிறார்.

நயன்தாரா கூறுகையில்,

”நான் ஏகன் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறேன். சென்னையில்தான் படப்பிடிப்பு என்றாலும் குசேலன் விழா அன்றைக்கு ஏகன் படப்பிடிப்பு மாலை 4 மணிக்குத்தான் தொடங்கியது. அதனால்தான் வரமுடியவில்லை” என்கிறார்.

”வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் தன்னால் வர இயலவில்லை” என்று பசுபதிகாரணம் கூறுகிறார்.

என்னதான் நடந்துச்சோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

admin @ 1:20 am
Filed under: news