Mullai Periyar: We can’t accept MP’s team opinion:Duraimurugan

Posted on Thursday 4 December 2008

முல்லைப் பெரியாறு : பாராளுமன்ற குழு கருத்தை ஏற்க முடியாது - துரைமுருகன்

mullai-periyar.jpg

 சென்னை:’ பாராளுமன்ற குழு ஒன்று முல்லை‌ப் பெரியாறில் புதிய அணை கட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருப்பது, தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல’ எ‌ன்று பொது‌ப் ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கையில்,

‘உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் கருத்தை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு தருவது கேரள அரசினுடைய கடமையாகும். ஆனால் அதற்கும் சில சட்ட சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது கேரள அரசு. அதையும் தமிழக அரசு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் எதிர்த்து வழக்காடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற குழு ஒன்று முல்லை பெரியாறு அணைக்குச் சென்று 10 நிமிடம் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது, புதிய அணை கட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருப்பது, தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

இந்தக் குழுவினுடைய கருத்து குறித்த ஆட்சேபனையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவிக்கும்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
 

admin @ 2:22 am
Filed under: news
CM’s meet in capital

Posted on Sunday 12 October 2008

டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு 

சென்னை: மதக்கலவரத்தைத் தடுக்கவும் அடக்கவும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் சார்பாக பொதுப்பணி்த் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்கிறார்.

ஒரிசா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டிலும் சில தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரிசாவில் கலவரம் தொடர்ந்து நடந்துவருகிறது. எனவே மதக்கலவரத்தைத் அடக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறிதது விவாதிக்க டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் ஒரிசா, கர்நாடக மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் குறித்தும், மதக்கலவரத்தை தடுக்க எடுக்கவேண்டிய உறுதியான நடவடிக்கைகள் பற்றியும், தீவிரவாதம் பற்றியும் விவாதி்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்ககள், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தி்ன் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

admin @ 11:20 pm
Filed under: news
2008/10/03 Punch Balu

Posted on Friday 3 October 2008

durai-murugan.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

வீரத்தின் விளைநிலமான கம்யூனிஸ்ட்டுகளின் கால்கள் நான்கைந்து ஸீட்டுகளுக்காக விஜயகாந்தின் வீட்டு வாசலை மிதிக்கலாமா? -அமைச்சர் துரைமுருகன்.
சுயநலமாக செயல்படுவதும், சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதும் உங்களுக்கு மட்டுமேயான சொத்தா என்ன? அவர்களும் தான் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே! 

தமிழகத்தில் மந்தரி ஆகும் கனவு தகர்ந்துவிட்டதே என்ற கேள்விக்கு….

”கனவு தகர்ந்துவிட்டது என்று கூற முடியாது. விருப்பம் நிறைவேறவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். காங்கிரஸ் கனவு என்பது எங்கள் தலைமையில் அரசு அமைவதுதான். அதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.”
- பீட்டர் அல்போன்ஸ் பதில்
தூங்குவதிலா தீவிரம்? அரசு அமைப்பது கனவுதான் என்றால், 40 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எப்போது விழிப்பீர்கள்?

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். தனிமரமாக நின்று காங்கிரஸ் மட்டும் தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை கலைஞர் மதிக்கவில்லை.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி
இதைத் தட்டிகேட்க காங்கிரஸ்காரர்களுக்கே தில்லு இல்னேன்னும்போது நீங்களாச்சும் கேட்டீங்களே… சந்தோஷம். ஆமாம் நீங்கள் எப்போது காங்கிரசின் கொ.ப.செ. ஆனீர்கள்? மது ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி எல்லாம் போரடித்துவிட்டதா? தி.மு.க., காங்கிரஸ் இடையே  பற்றிக்கொண்டால், அதில் குளிர் காயலாம் என்பதுதானே தங்கள் எண்ணம்?

மனம், கடவுள் இரண்டும் மிகவும் ஒத்திருக்கும் இரண்டு விஷயங்கள். மனம் எங்கு இருக்கிறது என்பதும் தெரியாது. கடவுள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியாது. விலாசம் இல்லாதவர்களெல்லாம் நெருக்கமாகத் தான் இருப்பர் போல. உயர்ந்த எண்ணம் எது என்ற வரையறுப்பதில் சிக்கல் உள்ளது. நான் முதல்வர் ஆக வேண்டும் என நினைத்தால் அது உயர்ந்த எண்ணம் இல்லை. அது சந்தர்ப்பம் பார்ப்பதுதான்.
-விழா ஒன்றில் நிதி அமைச்சர் அன்பழகன்
உங்கள் பேச்சு தத்துவம் போலிருந்தாலும் அது தத்துவம் அல்ல. இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கறைக் காட்டும், மனதை செலுத்தும் அல்லது அதற்கு மட்டுமே தன்னை தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் புலம்பல் போலதான் உள்ளது. முதல் இடம் எப்போதுமே இரண்டாவது இடத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.

admin @ 4:03 am
Filed under: Uncategorized
Karnataka threatens to move SC on Hogenakkal issue

Posted on Wednesday 20 August 2008

ஓகேனக்கல்: பிரதமர் தீர்வு காண உதவவேண்டும்: எடியூரப்பா
தீர்வு ஏற்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பசவராஜ்

சென்னை: ஓகேனக்கல் பிரச்னையைத் தீர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் கூறினார். இதற்கிடையில் பெங்களூருவில் பேட்டியளித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ், ஒகேனக்கல் பிரச்னையில் தீர்வு கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என எச்சரித்துள்ளார்.

கர்நாடக முதல்வராகப் பதவியேற்றப் பின் முதன்முறையாக நேற்று சென்னை வந்தார் எடியூரப்பா. சொந்தக் காரியமாக சென்னை வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

”கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே ஏற்பட்டுள்ள ஒகேனக்கல் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடு்த்துள்ளேன்.

இரு மாநில முதல்வர்கள் முன்னிலையில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண உதவவேண்டும். ஒகேனக்கல் திட்டத்தில் சுமூகத் தீர்வு காணப்பபடவேண்டும். அண்டை மாநிலங்களுடன் நல்ல உறவு வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது” என்றார்.

ஒகேனக்கல் திட்டத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி பெறவேண்டும் என்றும், இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்தவேண்டும் என்றும் எடியூரப்பா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், எடியூரப்பாவின் இந்தக் கருத்தை நிராகரித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ஒகேனக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீ்ர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ்,
 
”ஒகேனக்கல் பிரச்னையில் கூட்டு சர்வே நடத்துவது, குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை பகிர்ந்து கொள்வது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசுக்கு அவகாசம் கொடுத்திருந்தோம். இந்நிலையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கூட்டு சர்வே குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி யிருக்கிறார். இவ்விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கவலை அளிக்கிறது.

ஒகேனக்கல் விஷயத்தில் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் கர்நாடகா தரப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு ஒத்துழைக்காவிட்டால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்.

கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பொறுத்தவரை கூட்டு சர்வே நடத்தும் வரை, தமிழக அரசு திட்டத்தைத் தொடங்கக்கூடாது என்பதே  எங்கள் நிலை” என்றார்.

admin @ 11:39 pm
Filed under: news
Hogenakkal scheme will done in time: Minister Duraimurugan

Posted on Friday 8 August 2008

durai_murugan.jpgதிட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம்!: துரைமுருகன்

சென்னை: திட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகத் தேர்தல் முடியும் வரை இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

கர்நாடகத் தேர்தல் முடிந்து பா.ஜ.க. தலைமையிலான அரசு பதவியேற்றப் பின்னர், மீண்டும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து இரு தரப்பிலும் பிணக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா, ஒகேனக்கல் பகுதி கர்நாடாகவிற்குள வருகிறது. எனவே திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசால் இயலாது என்று கூறியிருக்கிறார்.

அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் எடுயூரப்பா, ஒகேனக்கல் குறித்து மத்திய அரசு கூட்டுச ர்வே நடத்தவேண்டும் என்றும் இருமாநில எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதி யாருக்குச் சொந்தம் என்பது முடிவாக வேண்டும் என்றும் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”கர்நாடக மாநிலத்தைப் போல பரபரப்பான செய்திகளை வெளியிட நாங்கள் தயாரில்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திட்டமிட்டபடி அமலாக்கப்படும். தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் வழங்கப்படும்” என்றார்.

admin @ 11:35 pm
Filed under: news
Duraimurugan reply to Ramadoss on fasting issue

Posted on Saturday 19 July 2008

கோபாலபுரத்தில் இருந்து டெல்லியை இயக்கக் கூடியவர் கருணாநிதி!:
ராமதாசுக்கு அமைச்சர் துரைமுருகன் சூடான பதில்

மாம‌ல்லபுர‌ம்: மீனவர் நலன் காக்க தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பதைவிட டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருங்கள் என்று தி.மு.க. விற்கு அறிவுரை கூறிய  பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மாம‌ல்லபுர‌த்‌தி‌‌ல் ந‌ட‌ந்த வரு‌ம் உ‌ண்ணா‌விரத போ‌ரா‌ட்ட‌த்‌தி‌ற்கு தி.மு.க முதன்மை செயலாளரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்‌கி பேசுகை‌யி‌ல்,

”தமிழக மீனவர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கிறது. இதில் ‌இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவது ஒரு புறமும், சிறையில் அடைப்பது மறுபுறமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். அண்டை மாநிலத்தோடும், தேசத்தோடும் நட்புறவு வேண்டும். ஆனால் ‌இலங்கை‌யில் அது போல் இல்லை. நம்நாடு ஜனநாயகமாக இருப்பதால் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

‌இலங்கை கடற்படை தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் நடத்தாமல் ஏன் தமிழகத்தில் நடத்துகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள்.

பொதுவாக தொலைக்காட்சியை ரிமோட் மூலமும், அதில் உள்ள சுவிட்ச் மூலம் இயக்கலாம். சுவிட்ச் மூலம் இயக்க வேண்டுமென்றால் தொலைக்காட்சி அருகே செல்ல வேண்டும். ஆனால் ரிமோட் மூலம் இயக்கும்போது தூரத்தில் இருந்தே இயக்கலாம். அதே போல தான் தி.மு.க தலைவர் கருணாநிதியும் கோபாலபுரத்தில் இருந்துகொண்டே டெல்லியை இயக்கக் கூடியவர்.

தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை தூதரகம் மூலம் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி கன்னியாகுமரியில் உட்கார்ந்துக் கொண்டே மத்திய அரசு உறுதிமொழியை வாங்குவதில் வல்லமை படைத்தவர்” எ‌ன்றார்.

admin @ 3:03 am
Filed under: news
2008/07/01 Suruck, Naruk Saidhigal…

Posted on Tuesday 1 July 2008

petrol.jpgசுருக், நறுக் செய்திகள்…

சாதாரண பெட்ரோலை தடையின்றி வழங்ககோரி வழக்கு: மத்திய அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மேலும்…

admin @ 4:07 am
Filed under: news
2008/06/03 MK says ‘change’ within party in Sept

Posted on Monday 2 June 2008

karunanidhi_4.jpgகட்சிக்குள் 3 மாதங்களில் மாற்றம்!: கருணாநிதி பேச்சு

சென்னை: சென்னையில் நேற்று தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமைத் தாங்க, பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் மு.க. ஸ்டாலின், சற்குண பாண்டியன், பரிதி இளம்வழுதி, துரைமுருகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

மேலும்…

admin @ 9:53 pm
Filed under: news
2008/05/31 3.5% reservation for minorities:TN govt.,

Posted on Friday 30 May 2008

அரசுப் பணியாளர் நியமனத்தில் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு:
உடனடி அமல்- அரசு உத்தரவு
 
சென்னை: அரசு‌ப் ப‌ணிக‌ளி‌ல் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய ‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு தலா 3.5 ‌சதவிகித இடஒது‌க்‌கீ‌ட்டி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வேலை வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்கு‌ம் ச‌ட்ட‌ம் நடைமுறை‌க்கு வருவதாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

மேலும்…‌‌

admin @ 9:37 pm
Filed under: news
2008/05/26 TN Govt will do Sand Quarry again

Posted on Monday 26 May 2008

தி.மு.க., மண்ணில் அடித்த பல்டி!

சென்னை: மணல் குவா‌ரியை அரசே தொட‌ர்‌ந்து நட‌த்து‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருண‌ா‌நி‌தி தலைமை‌யி‌ல் நட‌ந்த சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்ட‌த்‌தி‌ல் முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலும்…

admin @ 3:23 am
Filed under: news