2008/09/05 Junior Kelvi Pathil

Posted on Friday 5 September 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

சி.மணி, காஞ்சிபுரம்.

என் கேள்விகளுக்குத் தங்களிடம் பதிலில்லை எனத் தெரிந்தும் தொடர்ந்து எழுதி வரும் என்னைப் பற்றி?

‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பதனை நித்திரையிலும் கைவிடாத நீங்கள் இந்த முறை முத்திரை பெற்றுவிட்டீர்கள். மற்ற வாசகர்கள் என் சார்பில் ‘ஓ’ போடுவார்கள். சரியா?


ஆர்.ரவி, செங்கல்பட்டு.

காமராஜர் சாலையைப் பாதுகாக்கக் கூட இன்று பலருக்கு யோக்கியதை இல்லை என்கிறாரே கலைஞர், அவர் யாரைச் சொல்கிறார்?

எல்லாம் அந்த ‘பவன்’ சிற்றுண்டியாளர்களைத்தான். டிபன் மட்டுமே சாப்பிடக் கட்சி அலுவலகம் வருகிறவர்கள், கோட்டையை என்ன கேண்டீன் என்று நினைத்துக் கொண்டார்களா என்கிற கோபத்தைத்தான் மாம்பல மேம்பாலத்தில் அப்படிக் காட்டியிருக்கிறார். ஸாரி! அப்படி கொட்டியிருக்கிறார்.


ஆர்.மாணிக்கவாசகம், திருச்சி.

பார்த்த படத்தைத் திரும்பப் பார்க்கும் பழக்கம் உண்டா?

இளவயதில் உண்டு. நடிகர் திலகத்தின் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். அது காலத்தின் அருமை தெரியாத வயது. தமிழ்வாணன் எடுத்த படம் என்பதால் ‘காதலிக்க வாங்க’ படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். குறைகளைக் கண்டுபிடித்து நீக்கச் சொல்வதற்காக. அண்மைப் படங்களில் தசாவதாரத்தை மட்டும் திரும்பப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, பல இடங்கள் புரியவில்லை என்பதற்காக!


சி.பெத்தபெருமாள், உடுமலைப்பேட்டை.

கல்பாக்கங்கள் தொடருமா?

அரசியலைக் கேட்கிறீர்களா, அணுஉலைகளைக் கேட்கிறீர்களா? ஒரு மோசமான சமுதாய மோதலைத் திருமாவளவன் அழகுறத் தவிர்த்துவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கைகலந்தால் தமிழகம் இரணகளமாகிவிடும். இருவரும் உள்ளங்கலந்தால் உயர்வுகள் உறுதியாகும். இதனை உணர்ந்த திருமா உடனே முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவிதம், சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுக்காமல் தகறாரு செய்ய விரும்பும் சில விடுதலைச் சிறுத்தைகளின் தலையில் வைக்கப்பட்ட நல்ல குட்டாகும்!


கே.முருகானந்தம், திருவேற்காடு.

அடுத்தவர்களைப் போல் நாம் ஆக முடியவில்லையே என்று பொறாமைப்படுகிறவர்களைப் பற்றி?

இவர்களுக்கு நமது ‘ஜீன்’களைப் பற்றிய அறிவு இல்லை என் நினைக்கிறேன். ஒருவரது ‘ஜீன்’ மாதிரியே இன்னொருவரது ஜீன் இருக்காது. அது தெரிந்தால் இந்தப் பொறாமையே இல்லை.


டி.புஷ்பராஜ், புதுச்சேரி.

பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் வந்துவிடுமா?

சுதந்தர தினத்தன்று கோட்டையில் கலைஞர் தனது அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ளிவிட்டதைப் பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. கலைஞருக்குத்தான் டிஜிட்டல் மூளையாச்சே?


அ.அப்துல்காதர், வேலூர்.

மூன்று பதக்கங்கள் முதல்முறையாய், பெருமை அல்லவா? கண்டுகொள்ளவில்லையே நீங்கள்! ஏன்?

நீங்கள் கிளறினால்தானே? பதக்கப்பட்டியலின் கடைக்கோடியில் இருந்த இந்தியாவை ஐம்பதாவது இடத்திற்கு உயர்த்திய இருவெண்கலக்காரர்களுக்கும் (சுசில்குமார், விஜேந்தர்குமார்) இதய நன்றி. சீன உபாயங்களைப் பின்பற்றி நாமும் லண்டன் 2012இல் அதிகப் பதக்கங்களைப் குவிக்க வேண்டும். விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கி, அரசியல் நீக்கி, வீரர்களைத் தட்டிக்கொடுத்தால் சாத்தியம். எங்கே,ஆட்சியாளர்களுக்குப் பதவியைக் காப்பாற்றி கொள்வதே பெரிய ஒலிம்பிக் போட்டிபோல் உள்ளதே!


கே.செந்தில்நாதன், பழனி.

தி.மு.க.வில் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பங்கு என்ன?

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் இல்லாமல் உலகில் ஏதாவது ஓர் அணு உள்ளதா? அதுபோல்தான் இவர்கள். தி.மு.க., என்ற அணுவிற்கு இந்த மூவரும்தான் இப்போது புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்கள்.


அ.சாம்பசிவம், கும்பகோணம்.

ஒருவர் இன்று அரசியலில் மிளிர என்ன செய்ய வேண்டும்?

அய்யா மாதிரி மக்கள் மத்தியிலும் இருக்கலாம்; அம்மா மாதிரி எஸ்டேட்டிலும் இருக்கலாம். அரசியலுக்கு இன்று விவஸ்தையே இல்லை. ஒன்று டிஷ் டி.வி., இன்னொன்று கேபிள் டிவி. எப்படியோ சீரியல்கள் ஓடினால் போதும். இது மக்கள் நினைப்பு.


ஏ.ஜேக்கப், கடலூர்.

பணம் பாதாளம் மட்டும் பாயுமா?

பாராளுமன்றம் வரையிலும் பாயும். வழி தெரியாவிட்டால் வழிகாட்டிட அமர்சிங்கை அழையுங்கள். அவர் அதற்காகவே படைக்கப்பட்டவர்.


எம்.டேவிட்தம்புராஜ், பொள்ளாச்சி.

மேலை நாட்டவர்களிடம் வியக்கும் விஷயங்களுள் ஒன்றைச் சொல்லலாமா?

முன்கூட்டியே திட்டமிடல். அமெரிக்கத் தமிழ் நண்பர் ஒருவர் செப்டம்பர் விழாவிற்கு நீங்கள் வரமுடியுமா என்று கடந்த மாதம் கேட்டார். குறுகிய அறிவிப்பாக இருக்கிறதே! என்றேன். இல்லை நான் சொல்வது செப்.2009இல் என்றார் பாருங்கள். சில கணங்கள் எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.


சி.இளவேனில், கரூர்.

அரசியல் ஆருடங்கள் ஏதும்?

காங்கிரஸ் இயல்பான தேர்தலைச் சந்திக்காமல் முன்கூட்டியே அறிவிக்கும். இது ஜனவரியாக இருக்கலாம்.


ஆர்.விஜயா, கோயமுத்தூர்-1.

அண்மையில் யார் மீதாவது கோபம் வந்தது உண்டா?

ஆமாம். இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் மீது. இலங்கைக்குப் பேட்டுடன் பறந்துபோய் இவரை விளாசுவிளாசு என்று விளாசிவிட்டு வரவேண்டும். இவர் வீசும் பந்துகளைச் சொன்னேன்! அனுபவ ஆட்டக்காரர்கள் கூட இவர் பந்துவீச்சில் மெஸ்மரிசத்தால் கட்டுண்டவர்களைப் போல ஆவது ஏன் என்பது புரியாதபுதிர்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

சீனத்தின் பின்னால் போவது வெட்கக்கேடானது என்று ஆர்க்காட்டார் கம்யூனிஸ்டுகளைத் தாக்கியிருப்பது பற்றி?

ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னார் ஆர்க்காட்டார். கம்யூனிஸ்டுகளின் உண்மை நிறத்தைத் தோலுரிக்கும் பேச்சு இது. வரும் தேர்தலிலாவது கம்யூனிஸ்டுகளின் உண்மை நிறங்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

ஒரே குசேலன் படப்பேச்சாக உள்ளதே?

ரஜினியின் படம் தோல்வி என்றாலும் அது பேசப்படும். ‘ரஜினியை முன்னிலைப்படுத்தாதீர்கள். இவர் இப்படத்தின் நாயகன் அல்ல. பசுபதியை ஒரேயடியாக மறைக்காதீர்கள். இது நல்லதல்ல’ என்று நான் சொன்னதற்கு சிலர் என்னிடம் வருத்தப்பட்டார்கள்; கோபப்பட்டார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள். குசேலன் படம் ஐந்து பேர்களை மட்டும் கண்ணன்களாக்கிப் பலரைக் குசேலன்களாக்கிவிட்டது என்பதே உண்மை.


பா.மருதமுத்து, ஸ்ரீரங்கம்.

பிள்ளையாரைக் கடலில் கரைக்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும்?

மும்பைக்காரர்களின் பழக்கமிது. களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போடும் பழக்கம் எப்படியோ நுழைந்தது. இப்படிச் செய்ய இந்து மதத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. மும்பையில் கிணறுகள் குறைவு. இடப்பற்றாக்குறை. பார்த்தார்கள். கடலில் போட்டார்கள். மும்பை, பணக்காரர்களின் நகரமா, அவரவர் இதில் தங்கள் ‘சக்தி’யக் காட்ட ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் சுற்றுப்புறச் சூழல் உணர்வு அதிகம் இல்லை. எனவே இது ஒரு பெரிய இயக்கமாகவே ஆகிப்போனது. சென்னையில் ஒரு பிரிவினரை எரிச்சலூட்டவே இப்பழக்கம் மிகைப்படுத்தப்பட்டது. இன்றோ இது மிதமிஞ்சிப் போனது. இதைக் கண்டிக்க அரசியல்வாதிகளுக்கோ அதிகாரிகளுக்கோ பயம், வண்ணம் பூசப்படலாம் என்று. ஓட்டு வங்கி பாதிக்கப்படலாம்; இருக்கைகளுக்கே ஆபத்து வரலாம் என்கிற அச்சம். நம் கடலை நாமே பாழாக்கலாமா? ஆன்மிகவாதிகள் இறங்கி வரட்டும்.


சிவ.முத்துக்கருப்பன், கோவை-2.

நடிகர் சிரஞ்சீவியின் கட்சி எப்படியிருக்கும்?

தனது பெயரில் உள்ள சிரஞ்சீவி தனது கட்சியிலும் இருக்கும் என நம்புகிறார். வாழ்த்துவோம் அவரது நம்பிக்கையை.


மு.விவேகானந்தன், காரமடை.

வரும் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று வைகோ சொல்லிவிட்டாரே?

அன்ரிசர்வ்ட் கோச்சில் டவல் போட்டுவிட்டார். இனி வண்டி கிளம்பும் வரை நம்பி பிளாட்பாரத்தில் இருக்கலாம்.


டி.பிரகாசம், புதுக்கோட்டை.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்கிறார்களே, உண்மையா?

உண்மைதான்! எ.கா: பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இது மேலும் உறுதியாகிவிட்டது.


டி.வசந்தமாலா, கரூர்.

நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள டி.வி. போதுமா?

டி.வி. கூடத் தேவையில்லை. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை தினசரி ஒரு நடை போய்வாருங்கள். அன்றைய ‘டாப் டென்’ நடப்பு அன்றைக்கே தெரியும்.

29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:01 am
Filed under: Uncategorized
Ravichandran aim’s Jackie Jan

Posted on Friday 1 August 2008

 jackie-chan.jpg

‘தசாவதாரம்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் ஜாக்கிசான் நடிக்கும் ஒரு ஹாலிவுட் படத்தை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம்.

admin @ 4:22 am
Filed under: kollywood
No story in Dasavadaram: Director Bharathiraja

Posted on Wednesday 30 July 2008

கதையே இல்லாத தசாவதாரம்!: பாரதிராஜா அட்டாக்

bharathiraja.jpg

‘கமலின் தசாவதாரம் திரைப்படத்தில் கதை இல்லை. தொழில் நுட்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது’ என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

திருச்சூரில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது பாரதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

”தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நல்ல கதைகள் இல்லை. புதிய எண்ணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கதையை விட்டுவிட்டு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் தமிழில் தற்போது திரைப்படம் தயாரிக்கிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த கமலின் தசாவதாரத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கதை எழுதுபவர்கள் எல்லாம் இயக்குநர்களாக மாறிவிட்டதுதான் இதற்கு காரணம். தமிழ் திரையுலகில் தற்போது இயக்குநர்களின் முக்கியத்துவம் குறைந்துபோய் நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது” என்றார்.

admin @ 10:33 pm
Filed under: news
Marmayogi shooting starts next month: Kamalhaasan

Posted on Friday 18 July 2008

லட்சியவாதிகள் வாழ்வது கடினம்!: மர்மயோகி கமலின் மர்மப் பேச்சு

kamal1.jpg

‘சுயநலவாதிகள் நிறைந்த உலகில் லட்சியவாதிகள் வாழ்வது கடினம்’ என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

”தசாவதாரம் திரைப்படம் பரவலாக மக்களால் ரசிக்கப்படுகிறது. சிலர் விமரிசிக்கிறார்கள். படைப்பொன்றை தருவது மட்டும் தான் எங்கள் வேலை. அதை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் விருப்பம். தசாவதாரத்தில் நானும் சில தவறுகளை செய்துள்ளேன். ஒரு திரைப்படத்திற்கு விவாதம் நடத்துவதை நல்ல விஷயமாகவே நினைக்கிறேன்.

லட்சியவாதிகள் வாழ்வது கடினம் என்று என்னுடையத் திரைப்படங்களில் சொல்லி வருகிறேன். இவ்வாறு சொல்வது ஏன் என்று கேட்கிறார்கள். சுயநலவாதிகள் நிறைந்த இந்த உலகில் லட்சியவாதிகள் வாழ்வது கடினம்தான். அதையும்மீறி  அவர்கள் முன்னேற வேண்டுமானால் மனதளவில் பலம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும்.

ஆரம்பத்தில் சில கொள்கைகளை கடைப்பிடித்தபோது எனக்கும் பிரச்னைகள் ஏற்பட்டன. தைரியத்தால்த்தான் என்னால் அதில் நிலைத்திருக்க முடிகிறது.

மர்மயோகி திரைப்படம் ஏழாம் நூற்றாண்டு சரித்திர கதை.  பெரும்பொருட்செலவில் இத்திரைப்படம் தயாராகிறது. அடுத்தமாதம் படப்பிடிப்பு தொடங்கும். இதை அனைத்து வகை ரசிகர்களையும் கவரும் வகையில் எடுப்பதுதான் எங்கள் நோக்கம்” என்கிறார்.

admin @ 10:37 pm
Filed under: news
2008/07/11 Junior Kelvi Pathil

Posted on Thursday 10 July 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஜி.மோகன், கோவை.

‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி அரசியலில் இப்போது இருக்கிறாரா?

இல்லாமல் எங்கே போகிறார்? ஒற்றையடிப்பாதையில் போய்க் கொண்டிருப்பதை விட்டு விட்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இவர் வர வேண்டும்.


டி.ரங்கன், சென்னை-18.

அரசியல்வாதிகளின் தற்போதைய சிந்தனை?

யார், யார் சில்லரை வணிகம் செய்வது? யார், யார் ரிலையன்ஸ் போல் வியாபாரம் செய்வது என்பதுதான்?


ஏ.மார்த்தாண்டம், தாம்பரம்.

மத்திய-மாநில அரசுகளின் இன்றைய மக்கள் நல அறிவிப்புகள் பற்றி ?

இந்த அறிவிப்புகளுக்கு மாலை வாங்குவதா, மலர் வளையம் வாங்குவதா என்று மக்கள் குழம்புகிறார்கள். எல்லாம் அந்த அறிவிப்புகளின் ஆயுளைப் பற்றிய யோசனைதான்!


எம்.லோகநாதன், வில்லிவாக்கம்.

உங்கள் புத்தகங்களை எங்களுக்குப் பரிசாகத் தருவீர்களா?

எழுத்தாளர்களை இந்தச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இப்படி ஓசி கேட்டால் எங்கே போவது. அந்தக் காலத்தில் புலவர்களை ஆதரிக்க மன்னர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில் புரவலர்கள் தென்படுவதே அரிதாக இருக்கிறது!


எஸ்.பி.சிவகுமார், சூளைமேடு.

நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருவீர்களா?

வந்தால் போச்சு! பத்திரிகைக்கு நீங்கள் சந்தாதாரராகிவிட்டால் அடுத்த கணமே நான் ‘டோர் டெலிவரி’தான்!


ஆர்.சேதுபதி, சென்னை-78.

இனி தொல், திருமாவளவன்?

பல இரத்த வங்கிகளை நாடிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தேவை இப்போது புதுப்புது இரத்தங்கள்.


என்.சுவாமிநாதன், சீர்காழி.

கூட்டணி உடையும் என்று எப்போது கணித்தீர்கள்?

‘தோழமைக் கட்சிகள் தொல்லை கொடுத்தால் அவர்களோடு வருகிற தேர்தலில் கூட்டணி இருக்காது’ என்று ஆற்காட்டார் கடந்த வருடமே சொன்னாரே, அப்போது!


ஆர்.துரைவேலு, மதுரை.

ராமதாஸும், கலைஞரும் ராசியாகிவிடுவார்களா?

மல்யுத்த வீரர்கள் சண்டையிடு முன் கைகுலுக்குவதைக் கவனித்திருக்கிறீர்களா? எனக்கென்னவோ இவர்கள் கை குலுக்கும் எதிரிகளாகிவிட்ட மாதிரி தான் தெரிகிறது.


வி.நடராஜன்,நெசப்பாக்கம்.

இதயத் துடிப்பிலேயே சார்ஜ் ஆகிற மாதிரி செல்போனைக் கண்டுபிடித்திருக்கிறார்களாமே?

இந்த பாட்டரி வெடிக்காது இல்லையா?வெடித்தாலும் இதற்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வராது. எனவே, யோசித்துதான் வாங்க வேண்டும்.