Spectrem issue: Karunanidhi slams Jaya

Posted on Friday 28 November 2008

ஊ‌ழ‌ல் ‌விருது‌க்கு பொரு‌த்தமானவ‌ர் ஜெயல‌லிதா: கருணா‌நி‌தி

சென்னை: ‘ஊழலுக்கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்குத் தான் பொருந்தும்’ எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி- பதில் அ‌றி‌க்கை:

‘மும்பையில் தீவிரவாதிகள் எட்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், 6 இடங்களில் குண்டுகளை வெடித்தும் பயங்கரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சம்பவத்தைப் பற்றி?

நடைபெற்றுள்ள சம்பவங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் இந்தியாவிலே இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக உயிர் நீத்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, நிவாரணப் பணிகளிலே மராட்டிய மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து ஈடுபடும் என்று நம்புகின்றேன்.

‘பிரதமரைச் சந்தித்து, மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்றவே முதல்வர் டெல்லி பயணம்’ என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

‘ராசாவை மீட்பதற்காகத்தான் கருணாநிதி இப்போது டெல்லிக்குப் போகிறார்’ என்று கம்பளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை அம்பலத்தில் சொல்லி ஆட்டம் போடும் அம்மையார் ஜெயாவுக்கு சில கேள்விகள்:

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில், ஏலம் விடுகிற முறையைத் தவிர்த்து; முதலில் விண்ணப்பிப்பவருக்கு வழங்குவது என்ற விதிமுறையை ஏற்படுத்தியது யார்? அன்றைய பா.ஜ.க. அமைச்சர் அருண் ஷோரி அல்லவா?

அதே விதிமுறை, அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த அமைச்சர் தயாநிதி மாறனாலும் கடைப்பிடிக்கப்பட்டது அல்லவா? அவரை ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதா ஏன் அலறவில்லை? அறிக்கை விடவில்லை? அவர்கள் மீதெல்லாம் ‘ராஜினாமா செய்’ என்ற கணையைப் பொழியாமல் ராசா மீது மட்டும் கண்மூடித் தாக்குதல் நடத்துவதற்குக் காரணம் என்ன?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

‘தான் திருடி, பிறரை நம்பாள்’ என்பது கிராமப்புற பழமொழி. வருமானத்தைவிட அதிகமாக 64 கோடி ரூபாய்க்கு மேல் பதவியிலே இருந்தபோது சொத்து சேர்த்து அதற்கான வழக்கு தமிழக நீதிமன்றங்களிலே கூட அல்ல, பெங்களூர் நீதிமன்றம் வரை சென்று அங்கே பல ஆண்டுக் காலமாக வாய்தா வாங்கி, அந்த இடைவெளியைக் காரணமாகக் கொண்டு ஜெயலலிதா அறிக்கை விடுத்தும், தொண்டர்களை ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லியும் காலம் கடத்தி வருகிறார் அல்லவா? இந்தியா முழுவதும் ஊழலுக்கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்குத் தானே பொருந்தும்.

எத்தனை விதமான ஊழல் அவருடைய ஆட்சிக் காலத்தில்! அவரா மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற நான் டெல்லி செல்கிறேன் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் என்றும் அறிக்கை விடுவது? நான் பிரதமரைச் சந்திக்கச் செல்லும்போது தனியாகச் செல்லப்போவதில்லையே? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தானே போகப்போகிறேன்.

அப்போது நான் பிரதமரிடம் ராசாவிற்காக வக்காலத்து வாங்கிப் பேசுகிறேனா? அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக பேசுகிறேனா? என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக எந்தெந்த கட்சிகள் நிதி அளித்தன என்ற பட்டியலில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் தான் என்று எப்போதும் குரல் கொடுக்கும் ம.தி.மு.க. சார்பிலோ, அ.தி.மு.க. சார்பிலோ எந்த நிதியும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லையே?

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு சுனாமி ஏற்பட்டபோது, அதற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினை நேரில் அனுப்பி நிவாரண நிதியை வழங்கச் செய்தேன். அது தி.மு.க.வின் பண்பாடு.

ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்றது என்ற காரணத்தால் அ.தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ இலங்கைத் தமிழர் நிவாரண நிதி வழங்கவில்லை. இது அவர்களுடைய பண்பாடு.

ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பது உலகத் தமிழர்களுக்கும் தெரியும், இலங்கைத் தமிழர்களுக்கும் தெரியும்.

பெட்ரோல் விலையைக் குறைக்க மறுப்பதா என்று கேட்டு சி.பி.எம்., சி.பி.ஐ., பார்வர்டு பிளாக் கட்சிகள் டிசம்பர் 2ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்களே?

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப் போவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கான கோப்பினை அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்புவதாக அந்தத் துறையின் செயலாளர் ஆர்.எஸ். பாண்டே அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் இந்தக் கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக சொல்லி யிருக்கிறார்க‌ள்.’

இ‌வ்வாறு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 4:05 am
Filed under: news
Law College Violence: ADMK attend fast for CM’s resiganation

Posted on Friday 21 November 2008

jaya11.jpgசட்டக் கல்லூரி மோதல்: முத‌ல்வ‌ர் பத‌வி ‌விலக வ‌லியுறு‌த்‌தி உண்ணாவிரதம் - ஜெ

சென்னை: ‘சட்டக் கல்லூரி‌ மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்த காவல்துறையைக் கண்டித்தும், இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று முத‌ல்வ‌ர் கருணாநிதி பத‌வி ‌விலக வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் வரு‌ம் 23ஆ‌ம் தே‌தி செ‌ன்னை சேப்பாக்க‌த்த‌ி‌ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயலாளர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வியாழக்கிழமை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘12.11.2008 அன்று காவல்துறையினரின் முன்பே, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்தைப் பார்த்த தமிழக மக்கள், காவல்துறை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். மேற்படி சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அறிவித்தார். சென்னை உயர் நீதிமன்றமும் இது குறித்து அறிக்கை அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, ‘சட்டக் கல்லூரி விவகாரத்தில் ஜெயலலிதா உங்களைக் குற்றஞ்சாட்டி, தார்மீகப் பொறுப்பேற்று நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்கிறாரே? அவரை போலவே வைகோவும் அதே கருத்தைச் சொல்லியிருக்கிறாரே?’ என்று கேட்டதற்கு, ‘இதிலேயிருந்து என்ன தெரிகிறது என்றால், என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வதற்காகவே மாணவர்களின் இரு சாராரையும் இவர்களே தூண்டிவிட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது’ என்று கருணாநிதி பதில் அளித்திருக்கிறார்.

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பிரச்னை குறித்து முதலமைச்சர் கருணாநிதி இது போன்று பேட்டி அளிப்பது விசாரணை ஆணையத்தையே கேலிக் கூத்தாக்குவது போல் உள்ளது.

சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல் துறையைக் கண்டித்தும், இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், 23ஆ‌ம் தே‌தி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 4:10 am
Filed under: news
ADMK reject all party meet

Posted on Friday 10 October 2008

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌னை: அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறோம்: ஜெ., அறிவிப்பு

சென்னை: இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌னை தொட‌ர்பாக ஆலோ‌சி‌க்க வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நடைபெற உ‌ள்ள அனை‌த்து‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்தை அ.‌தி.மு.க. பு‌ற‌க்க‌ணி‌க்கு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயலாளர் ஜெயல‌லிதா அ‌‌றி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும்.

அதை விட்டு விட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே, இந்தக் கண்துடைப்பு நாடகமான அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும்’ என்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 5:50 am
Filed under: news
One Rupee rice, Karunanidhi’s election drama: Jaya

Posted on Thursday 18 September 2008

jayalalithaa11ஆடி தள்ளுபடி போல் தேர்தல் தள்ளுபடியாக ஒரு ரூபா‌ய்‌ அ‌ரி‌சி: ஜெயல‌லிதா
 
சென்னை: ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி, 50 ரூபா‌ய்‌க்கு 10 ம‌ளிகை‌ப் பொரு‌‌ட்க‌ள் வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌ம் போன்றவை நாடாளும‌ன்ற தே‌ர்தலை மன‌‌தி‌ல் வை‌த்து‌க் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ‌தி‌ட்ட‌ம் எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌ட்‌டியு‌ள்ளளார் அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாளர் ஜெயல‌லிதா.
 
இது தொட‌ர்பாக அவ‌ர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தல் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, மக்கள் மத்தியில் தனக்கு உள்ள அவப்பெயரை மறைக்க, கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிவித்திருக்கிறார். மேற்படி ஒரு ரூபாய் அரிசி பழுப்பு நிறத்தில் இருப்பதாகவும், வண்டுகள் இருப்பதாகவும் பொதுமக்கள் பரவலாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

துணிக்கடைகளில், புடவை, வேட்டி போன்றவற்றில் ஏதாவது ஒரு சிறிய பழுது ஏற்பட்டிருந்தால் அதை குறைந்த விலைக்கு சலுகை விலையில் விற்பது வழக்கம். அந்த அடிப்படையில், கீழே கொட்ட வேண்டிய அரிசியை மக்களுக்கு குறைந்த விலைக்கு, ‘ஆடி தள்ளுபடி’ போல் ‘தேர்தல் தள்ளுபடி’யாக கருணாநிதி கொடுக்கிறாரோ என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

2.10.2008 முதல் நியாயவிலைக் கடைகளில் 10 வகையான மளிகைப் பொருட்கள், 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று மேலும் ஒரு கவர்ச்சியான போலி அறிவிப்பை வெளியிட்டார். மேற்படி அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால், 2002-ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்கள் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அப்பகுதியிலுள்ள சுமார் 10 லட்சம் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகள் எனது அரசால் விநியோகிக்கப்பட்டன.

அந்தப் பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. பின்னர் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்புடன் அந்தப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இது ஒரு நாள் நிகழ்ச்சி. தற்போது, அறிவித்துள்ளது ஒரு தொடர் திட்டம். இந்தத் திட்டத்தின்படி 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காக, 1 கோடியே 86 லட்சம் பைகளில், தலா 10 பொட்டலங்கள் வீதம், மாதா மாதம் போடுவது என்பது நடைமுறையில் இயலாத காரியம்.

மேற்படி 50 ரூபாய்க்கான பொருட்களை வைத்து, மாதம் முழுவதும் ஒரு குடும்பத்தை நடத்திச் செல்ல முடியுமா என்பதை கருணாநிதி எண்ணிப் பார்க்க வேண்டும். ‘விலைவாசி கட்டுப்படுத்தப்பட வில்லையா?’ என்ற தலைப்பில் வீண் செலவு செய்து அரசு விளம்பரத்தை 12.9.2008 அன்று வெளியிட்டிருக்கிறார்.

அதில் 2007ஆம் ஆண்டு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, கோதுமை மாவு, மைதா, ரவை போன்ற பொருட்கள், ஒரு கிலோ வீதம் நியாய விலைக் கடைகளின் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பல மாதங்கள் மேற்படி பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட வில்லை.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, இது போன்ற திட்டங்களை எல்லாம் அறிவித்து உள்ளார். சாதாரண ஏழை, எளிய, மக்கள் இந்த நாடகத்தை இனியும் நம்பத் தயாராக இல்லை. வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 
 

admin @ 9:02 pm
Filed under: news
Jaya gives mourning to ‘Kunnakudi’ S Vaidyanathan’s dead

Posted on Tuesday 9 September 2008

கு‌ன்ன‌க்குடி வை‌த்‌தியநா‌‌த‌ன் மறைவு‌க்கு ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்
 
kunnakudi-s-vaidyanathan-receives-diamond-studded-violin-from-ex cm-jayalalithaa-for-60-years-service-in-carnatic-music(aug-2005)

சென்னை: குன்னக்குடி வைத்தியநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என‌்று அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாளர் ஜெயல‌லிதா இர‌ங்க‌ல் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள இரங்கல் செய்தியில்,

‘பல்வேறு சாகசங்களுக்கும், திறமைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான உலகப்புகழ் பெற்ற வயலின் மேதை, கர்நாடக இசைஞானி டாக்டர். குன்னக்குடி வைத்தியநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

குன்னக்குடி வைத்தியநாதன் போல் வயலினில் சாகசம் செய்யக்கூடியவர் பிறக்கவுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. உலகம் மாபெரும் கர்நாடக இசை மேதையை இழந்து விட்டது. அதைவிட ஓர் உயரிய மனிதரை இழந்துவிட்டது.

குன்னக்குடி வைத்தியநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எ‌ன்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

‘உலகப்புகழ் பெற்ற வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 2:22 am
Filed under: news
Karunanidhi condemns Jayalalithaa

Posted on Sunday 7 September 2008

பிரதமரை பதவி விலகச் சொல்வதா?: ஜெ., க்கு கருணாநிதி கண்டனம்
 
சென்னை: த‌மிழக அமை‌ச்ச‌ர்களை பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றி வ‌ந்த ஜெயல‌லிதா, இ‌ப்போது ‌பிரதம‌ர் அள‌வி‌ற்கு மு‌ன்னே‌றி‌யிரு‌க்‌கிறா‌‌ர். இத‌ன் மூல‌ம் கூ‌ட்ட‌ணி வை‌க்க க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்களு‌க்கு தூ‌ண்டி‌ல் போட முனை‌கிறாரா? எ‌ன்று முதலமை‌‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
 
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள கேள்வி- பதி‌‌ல் அ‌றி‌க்கை‌யி‌ல்,

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பகத்தன்மையை பிரதமர் இழந்து விட்டதாகவும், அவர் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டுமென்றும் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

”பதவியிலே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றைச் சொல்லி, அவர்கள் எல்லாம் பதவி விலகி விட வேண்டும், ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்கிறார். தமிழகத்திலே தான் இப்படி எதற்கெடுத்தாலும் ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஒவ்வொரு அமைச்சராகப் பதவி விலக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது பிரதமர் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். இவர் தோழமை கொள்ள முயன்ற பா.ஜ.க. மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லையென்றால் கம்யூனிஸ்ட்களுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் தான் ஜெயலலிதா பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்”

தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க 600 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதே?

”மின் வெட்டு தமிழகத்திலே மட்டுமில்லை. எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றது. அதனைச் சரிக்கட்டவும், சமாளிக்கவும் தினந்தோறும் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கின்றோம். அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி அங்கேயும் முடிந்த அளவிற்கு மின்சாரத்தைப் பெற முயற்சிக்கின்றோம்.

மக்களுக்கு மின்வெட்டு காரணமாக எந்த அளவிற்கு சிரமங்களைக் குறைக்க வேண்டுமோ, அதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். அதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் தான் புரிந்தும் புரியாமல் அரசை குறை கூறுகிறார்கள்”

பெண் ஒருவரே பூசாரியாக பணியாற்றலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதே?

”வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு அது. மதுரை உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னத் தேவர் என்பவரின் மகள் தன் தந்தையார் கோவில் பூசாரியாக பணியாற்றியதாகவும், அவரது மறைவுக்குப் பிறகு தான் அந்தப் பணியை ஆற்ற மற்றவர்கள் தடுப்பதாகவும் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, சட்டங்களிலும், பூசாரிகளுக்கான விதிகளிலும் பெண்கள் பூஜை செய்வதைத் தடுக்க எதுவும் இல்லை. இந்த மனுதாரர் தொடர்ந்து பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு கூறியிருக்கிறார்” எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 
 

admin @ 8:33 pm
Filed under: news
Jaya gave support to the Karaseva: Karunanidhi

Posted on Wednesday 3 September 2008

கரசேவையை ஆத‌ரி‌த்தவ‌ர் ஜெயல‌லிதா! : ஆதாரத்துடன் கருணா‌நி‌தி அ‌றி‌க்கை  
 
Babri Masjid _demolition-karaseva

சென்னை: தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில்  கரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயல‌லிதா என்று ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவையை 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று தொடங்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்த நிலையில்- மத்திய அரசு அதிலே என்ன செய்யப் போகிறது? என்பதை 23-11-1992‌க்குள் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்று - நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்காக மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தை பா.ஜ.க.வும், விஸ்வ இந்து பரிஷத்தும் புறக்கணித்தன.

அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன பேசினார் என்பதை தினமணி நாளேடு (24-11-1992) அன்று வெளியிட்டிருந்தது. அது வருமாறு:

‘பெரும்பான்மையினராக உள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே அளவில் சிறுபான்மையினராக உள்ள குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நம்முடைய நடைமுறைகள் அமைய வேண்டும் என்ற பொறுப்பை நமது அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை நமக்குத் தந்துள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல், சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிறுத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல.

இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச்சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும்.

பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப் போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். 
 
அயோத்தி பிரச்னையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும்.

உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவிதமான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக்கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கட்டுமானத்துக்குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். சட்டச் சிக்கல் இருப்பதையே இந்தப் பிரச்னையில் முடிவு எடுப்பதை ஒத்திப் போடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் கட்டுப்பட மறுக்கும் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர்கொள்வது ஒவ்வொரு நாளும் நகர நகர அரசுக்குப் பெரும் கடினமாக அமையும். எனவே கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்த அமைப்பு எடுக்க வேண்டியுள்ளது.

கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுக தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரபிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.’

இப்படியெல்லாம் கரசேவை பற்றி அதற்காகவே நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவிலே பேசியவர்தான், தற்போது இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதைப் போல கரசேவையா, நானா ஆதரித்தேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அவரது பேச்சு வெளிவந்த ‘தினமணி’ இன்றளவும் உள்ளது’ என்று கருணாநிதி கூறியுள்ளார்.

admin @ 8:16 pm
Filed under: news
Jayalalitha moves SC over Kachativu

Posted on Friday 8 August 2008

கச்சத்தீவை திரும்பப் பெற ஜெயல‌லிதா வழ‌க்கு

jayalalithaa.jpg

சென்னை: இலங்கைக்கு தரப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயல‌லிதா உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது:

‘கச்சத்தீவை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே 26.6.1974 இல் ஓர் ஒப்பந்தமும், அதன்பிறகு மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் இந்தியா இலங்கையின் கடல் எல்லையை நிர்ணயிக்க 23.3.76இல் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவித்து அதனை ரத்து செய்து உத்தரவிடவேண்டும். இலங்கை அரசிடம் இருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இந்திய  மீனவர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து, அவர்களின் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இந்திய நிலப்பரப்பை மற்றொரு நாட்டுக்கு விட்டுத்ருவதால் இந்திய யூனியனின் நிலப்பரப்பு குறைகிறது.

எனவே இத்தகைய ஒப்பந்தங்கள் அரசியல் சட்ட திருத்தம் மூலமாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றிருக்கவேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 368ஆவது பிரிவை வலியுறுத்தி, பெருபாரி யூனியன் மற்றும் நிலப்பரப்பு பரிமாற்றம் தொடர்புடைய இந்திய - பாகிஸ்தான் உடன்பாடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இலங்கையுடன் 2 ஒப்பந்தங்களிலும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை. எனவே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்’ எனக் கூறியுள்ளார்

admin @ 4:57 am
Filed under: news
Ministers NKKP Raja and Sureshrajan should Quit: Jaya

Posted on Thursday 31 July 2008

தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலக ஜெ., கோரிக்கை
 
jaya.jpg

சென்னை: கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜா, சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும் என்று ஜெயல‌லிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அ‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

”நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி‌யி‌‌ன் போது, துணை ஆட்சியர் ஜனார்த்தனனை தா‌க்‌கியது தொட‌ர்பாக அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் கொலை முயற்‌சி, வ‌ன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிலம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்னையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி மற்றும் அவரது மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதோடு மட்டுமல்லாமல் கொன்றுவிடுவதாகவும் கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மிரட்டியுள்ளார். இந்த பிரச்னையில் சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் பதவி பறிபோயிருக்கும்.

மாநில அமைச்சர்களே சட்டத்தை மீறி அரசு அதிகாரியை ஜாதி பெயர் சொல்லி திட்டியும், அவரை கடமை ஆற்ற விடாமல் தடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி வழக்குகளில் உள்ள நியாயத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடும்.

இருவர் மீதும் ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கருணாநிதி முன் வர வேண்டும்” எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 

admin @ 2:15 am
Filed under: news
Jaya condems Bangalore, Ahmedabad bomb blasts

Posted on Monday 28 July 2008

மீண்டும் பொடா வேண்டும்: ஜெயல‌லிதா
 
சென்னை: அகமதாபாத் மற்றும் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நாட்டின் ஒற்றுமையை, பாதுகாப்பை உறுதிசெய்யவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் பொடா போன்ற கடுமையானச் சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் எ‌ன வலியுறுத்தியுள்ளார். 

இதுகு‌றி‌த்து ஜெயல‌லிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘பெங்களூ‌ரி‌ல் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறித்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறித்தும் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.

இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் நோக்கத்துடன் அரங்கேற்றியிருக்கும் கோழைத்தனமான செயல் இது. குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் மாநில அரசும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

இத்தகைய தீவிரவாத தாக்குதல்களை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். 3 மாநிலங்களில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளைக் கருத்தில்கொண்டு நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய பொடா போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எ‌ன்று கூறியுள்ளார்.

admin @ 1:30 am
Filed under: news