Jaya asks PM to quit

Posted on Friday 5 September 2008

அணு ஒப்பந்தம்: பொய் சொன்ன மன்மோகன் சிங் அரசு தொடரக் கூடாது: ஜெயலலிதா
 
சென்னை: அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ப‌ற்‌றி நாடாளும‌ன்ற‌த்த‌ி‌‌ல் பொ‌ய் சொ‌ல்‌லிய ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யிலான ம‌த்‌திய அரசு உடனடியாக பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘அய‌ல்நாட்டு சக்திகளின் கட்டளைப்படி செயல்படவும், அய‌ல்நாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இயங்கவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உட்படுத்தும் வகையில் ஓர் (அணுசக்தி) ஒப்பந்தத்தை மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றத் துடிக்கிறது.

இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு நம் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளிடம் அடகு வைத்திருக்கிறது. இத்தகைய ஓர் அரசை நாம் இனியும் நம்ப முடியாது. இந்த அரசு நாடாளுமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறது.

இந்த அரசு, இந்த தேசத்தையே ஏமாற்றியிருக்கிறது. இந்த அரசு இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அரசு நம் மக்களை கைவிட்டிருக்கிறது. இந்த அரசு மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.

கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், வரலாறு காணாத விலை உயர்வு, பகிரங்கமாகத் தெரியும் லஞ்ச ஊழல், பற்றாக்குறையாய் இருக்கும் எரிசக்தி, மின்சாரம், மதக் கலவரம், சமூகங்களிடையே பிணக்கு, பல் வேறு இடங்களில் பசி, பஞ்சம், பட்டினி.

இந்தப் பிரச்னைகளெல்லாம் மத்திய அரசுக்கு பொருட்டாக தெரியவில்லை. இந்த அரசுமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய அரசு பதவி விலக வேண்டும். உலகத்தின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ள 110 கோடி இந்திய மக்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கக்கூடிய நிலையில், இந்த அரசு இனியும் தொடரக் கூடாது.

டாக்டர் மன்மோகன் சிங், கற்றறிந்த பொருளாதார வல்லுநர், நேர்மையான மனிதர் என்று நான் இதுவரை மதிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு சர்வதேச அரங்கில் தன்னுடைய அனைத்து மரியாதையும், நம்பகத்தன்மையையும் இழந்தவராக மன்மோகன் சிங் நிற்கிறார்.

அவர் சேர்ந்திருக்கும் அரசியல் கூட்டு காரணமாகத்தான் இந்த மரியாதை இழப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனக்கு ஏதேனும் சுயமரியாதை இன்னமும் இருப்பதாக அவர் நினைத்தால் டாக்டர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்’ எ‌ன்று கூறியுள்ளார்.

admin @ 8:14 pm
Filed under: news
Jaya ask PM to help Kashmir pandits

Posted on Friday 5 September 2008

jayalalithaa காஷ்மீர் இந்துக்களுக்கும் உதவி செய்வாரா?:
பிரதமருக்கு ஜெயலலிதா கேள்வி

சென்னை: ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை காஷ்மீர் இந்துக்கள் மீதும் பிரதமர் காட்ட வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்’   என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஒரிசாவில் கிருஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்டவசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.

அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரிசாவில் மத பிரச்னையின்போது பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது.

அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5,000 ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.

1990களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச் சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள்.

அங்கிருந்து தப்பிய சுமார் 3.5  லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படைவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

ஒரிசாவில் கிருஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 12:10 am
Filed under: news
Jaya slams Karunanidhi

Posted on Monday 1 September 2008

jayalalithaaகருணாநிதி அ.தி.மு.க.வில் சேரும் காலம் வரும்!: ஜெ.,

சென்னை: கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் எங்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கெஞ்சும் காலம் விரைவில் வரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட செல்கணபதியை எப்படி தி.மு.க.வில் சேர்த்தீர்கள் என்ற கேள்விக்கு நேற்று முன்தினம் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நாளைக்கே ஜெயலலிதாவைக்கூட சேர்த்துக்கொள்ளவேண்டிய நிலை வரலாம்… என்ன செய்வது? என்று பதிலளித்தார்.

கருணாநிதியின் இந்த கருத்துக்கு அறிக்கை ஒன்றின் மூலம் இன்று பதிலடி தந்திருக்கிறார் ஜெயலலிதா. அந்த அறிக்கையில் அவர்,

‘கடந்த மாதம் 30ஆம் தேதி அளித்த பேட்டியில், பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அ.தி.மு.க. ஆட்களை அனுப்பி வைத்தது என்று ஓர் அபாண்டமான பொய்யை கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
 
இவ்வாறு திரும்பத் திரும்ப கருணாநிதி கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சொன்ன கருணாநிதி மதச்சார்பின்மை பற்றி பேசும் தகுதியை இழந்துவிட்டார்.

‘ஜெயலலிதா மீது கூடதான் வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம்’ என்று அதிகார போதையில் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.

கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தங்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய்ச் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது.

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, அதிமுக தலைமை கழகத்துக்கு வந்து என்னிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் உதவி பெற்றதையெல்லாம் கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.

என் மீது இருக்கும் வழக்குகள் கருணாநிதியால் புனையப்பட்ட பொய் வழக்குகள் ஆகும். அதில் 12க்கும் மேற்பட்ட வழக்குகளில் நான் விடுதலை பெற்றுள்ளேன்.

வழக்குகளை நேர்மையாக எதிர் கொண்டு ஒவ்வொன்றாக வென்று வருகிறேன். அந்த வழக்குகளை இன்றும் நீதிமன்றத்தில் சந்தித்து துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னைப் பற்றியோ, என் மீது உள்ள வழக்குகளைப் பற்றியோ பேசுவதை கருணாநிதி நிறுத்திக்கொள்வது நல்லது.

தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப் போகிறது. அதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன.

அப்போது கருணாநிதி, அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அவரை துதிபாடுபவர்கள் எல்லாம் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்று கூறியுள்ளார்.

admin @ 3:53 am
Filed under: news
Power cuts: Karunanidhi may face the election: Jaya

Posted on Sunday 31 August 2008

jayalalithaa மின் நெருக்கடி: சமாளிக்க முடியாத தி.மு.க. அரசு:
தேர்லைச் சந்திக்கலாம்: ஜெயலலிதா யோசனை

சென்னை: தமிழகத்தை இருளில் தள்ளிக் கொண்டிருக்கும், மின் நெருக்கடியை சமாளிக்க முடியாத தி.மு.க. அரசு, சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல்,

‘தற்போது தமிழ்நாட்டில் ‘அறிவிக்கப்பட்ட மின்வெட்டு’, ‘அறிவிக்கப்படாத மின்வெட்டு’ என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போதைய மின் நிலைமைக்கு தி.மு.க. அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.

அரசு சொல்லும் 2ஆவது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப்படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.

காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.

நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந்தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

இன்னும் சில காரணங்களான ‘குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது’, ‘மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது’ போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 9:46 pm
Filed under: news
DMK will not taste victory in future: Vaiko

Posted on Friday 29 August 2008

vaikoதி.மு.க.வுக்கு இனி வெற்றி கிடைக்காது: வைகோ
 
திருப்புவனம்: த‌மிழக அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இனி அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.  
 
சிவகங்கை மாவட்டம் ‌பூவந்தியில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர்,

”டீசல், உரத்தட்டுபாடு, விலை உயர்வு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் 18,000 மெகாவாட் மின்உற்பத்தி இருந்தது. இப்போது 7,000 மெகாவாட்டாக குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு சரிவர மின்ஒதுக்கீடு செய்வதில்லை.

தி.மு.க தலைமையால், தமிழகத்துக்குத் தேவையான மின்சாரத்தை கேட்டுப் பெற முடியவில்லை. தி.மு.க அமைச்சர்கள் கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல் போன்ற வழக்குகளில் சிக்குகின்றனர். இந்த அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தி.மு.க.வுக்கு இனிவரும் தேர்தல்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கப்போவதில்லை” எ‌‌ன்று கூ‌றினா‌ர். 

admin @ 12:21 am
Filed under: news
Ex- minister Selvaganapathy removed from ADMK

Posted on Tuesday 26 August 2008

அ.‌தி.மு.க.‌வி‌ல் இரு‌ந்து செல்வகணபதி நீக்கம்
 
சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை‌யி‌ல்,

‘கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டு, கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும் சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து செல்வகணபதி நீக்கப்பட்டதாக  தெரிகிறது. செல்வகணபதி தி.மு.க அல்லது தே.மு.தி.க. கட்சியில் சேர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

admin @ 1:51 am
Filed under: news
War of words; Vijaikanth attacks Jaya

Posted on Monday 18 August 2008

தமிழ்நாட்டை பீடித்துள்ள பெருவியாதி ஜெயலலிதா!: விஜயகாந்த்

jayalalithaa is the big disease that has gripped tamilnadu, vijayakanth says

சென்னை: நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா? தமிழ்நாட்டை பீடித்துள்ள பெருவியாதி ஜெயலலிதாதான் என விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த வாரத்தில், சிரஞ்சீவி கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், தமிழ்நாட்டில் இருக்கும் வியாதி ஆந்திராவிலும் பரவிவிட்டது என்றார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஜெயலலிதாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், ”நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா?” எனக் கேட்டார்.  ”தமிழ்நாட்டை பீடித்துள்ள பெருவியாதி ஜெயலலிதாதான்” என்றும் அவர் கூறினார்.

மேலும் விஜயகாந்தின் பேட்டி வருமாறு:

சேது சமுத்திரத் திட்டம் குறித்து?

சேது சமுத்திரத் திட்டம் முழுக்க முழுக்க பிரச்னைக்குள்ளானதற்குக் காரணம் கருணாநிதிதான். இதுவரை சுமார் ரூ.2500 கோடிக்கு மேல் செலவு  செய்துள்ள நிலையில் மாற்றுப் பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை என்று கூறினால் செலவு செய்த தொகை யாருடைய பணம்? மக்களுடைய வரிப் பணம் அல்லவா?

தி.மு.க. அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரின் துணிச்சலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல புகார் அளிக்க வருவார்கள். அப்போது தி.மு.க.வின் ஒட்டுமொத்த சுயரூபம் தெரியவரும்.

குளச்சலில் கூட்டம் ஒன்றில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இந்தியாவின் வளர்ச்சி 8.5 சதவிகிதம். தமிழகத்தின் வளர்சச்சி 10.2 சதவிகிதம்’ என்று பேசியிருக்கிறார். அது எப்படி இந்தியாவின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்?

ஒகேனக்கல் பிரச்னையில் ரஜினி முதலில் பேசியது, பின்னர் வருத்தம் தெரிவித்தது பற்றி?

ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினிகாந்தை அந்த மேடையில் அமரச்சொன்னது யார்? அதனால் ஆதாயம் தேட நினைத்தது யார்? இப்போது பிரச்னை என்று வந்ததும் எதுவும் பேசாமல் அமைதி காப்பது யார்? என்பது மக்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

கூட்டணிக்காக கதவுகள் திறந்திருக்கிறது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் பேச முடியும். எதற்கு அவசரம்? கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும். கூட்டணி இல்லாமல் காமராஜர் நல்லாட்சி கொடுக்கவில்லையா?

ஒரு தனி மனிதனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என முழுமையாக நான் நம்புகிறேன். இதற்கு உதாரணம் காந்தி, புத்தர். இந்தச் சமுதாயம் மேன்மை அடையும் வகையில் நல்லதொரு ஆட்சியை என்னால் தர முடியும். ஆனால் அதை ஆட்சிக்கு வந்த ஓரிரு நாட்களில் செய்துவிட முடியாது. மூன்று நான்கு ஆண்டுகளில்தான் முடியும்.

admin @ 9:57 pm
Filed under: news
Open to working with Left: Jayalalithaa

Posted on Wednesday 13 August 2008

இடதுசாரிகள், பா.ம.கவுடன் கூட்டணி?:
தேர்தல் வரும் வரையில் பொறுங்கள்: ஜெ., சூசகம்

no problem in working with the left parties,Jaya said in chennai

சென்னை: ‘இடதுசாரிகள், பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசியலில் எதுவும், எந்த நேரத்திலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்’ என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

கொடநாடு ஓய்வு முடிந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய ஜெயலலிதா, நேற்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வந்திருந்தார். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

”ஒருவர் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கவில்லை. அரசியலைக் கூர்ந்து கவனித்து அறிக்கை விடுகிறேன். நான் எங்கும் போகவில்லை. தமிழகத்தில்தான் இருந்தேன். மக்கள் பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவும் உத்தரவிட்டேன். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அரசியல் எதிரிகளை மண்ணைக் கவ்வ செய்துள்ளேன்.

இந்திய அரசியலில் எது வேண்டுமானாலும். எந்த நேரத்திலும் நடக்கலாம். எனவே, பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் உடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பொறுத்திருந்து பாருங்கள். போக போகத் தெரியும்.

தேசிய நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். அது பா.ம.க.வோ இடதுசாரிகளாகவோ இருக்கலாம். காங்கிரசும் இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும் எனும்போது அரசியலில் எதுவும் சாத்தியமே. அதனால் அ.தி.மு.க.வும் இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும்.

அரசியலில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். மாயாவதி பிரதமராக ஆசைப்படுவதில் தவறில்லை.

அமர்நாத் கோயில் நில விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடமை தவறிவிட்டன” என்று கூறினார்.

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கட்சித் தொடங்கியது குறித்து கேட்டதற்கு, ”தமிழகத்தில் ஏற்பட்ட வியாதி. தற்போது ஆந்திராவுக்கும் பரவியுள்ளது” என்று ஜெயலலிதா பதில் அளித்தார்.

admin @ 11:00 pm
Filed under: news
Jaya came back to Chennai

Posted on Sunday 10 August 2008

ஓய்வுக்கு ஓய்வு: சென்னை திரும்பினார் ஜெ.,

kodanadunilgiri.jpg

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்றிரவு சென்னை திரும்பினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வெடுப்பதற்காக ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சென்றார். அங்கு 4 மாதம் தங்கி ஓய்வெடுத்தார். அங்கிருந்து நேற்று மாலை காரில் கிளம்பி கோவை வந்தார். கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இரவு 9 மணியளவில் வந்து சேர்ந்தார்.

விமான  நிலையத்தில் இருந்து காரில் வெளியே வந்த அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், செங்கோட்டையன், முத்துசாமி, தம்பிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சேகர்பாபு எம்.எல்.ஏ., கலைராஜன் எம்.எல்.ஏ., மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், சுலோச்சனா சம்பத் உள்ளிட்டோர் மலர்கொத்து தந்து ஜெயலலிதாவை வரவேற்றனர்.

admin @ 11:54 pm
Filed under: news
Siruthavur case: Govt., free to invoke encroachment law

Posted on Tuesday 5 August 2008

சிறுதாவூர் பங்களாவுக்காக புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு:
அரசு நடவடிக்கை எடுக்க விசாரணை கமிஷன் சிபாரிசு

சிறுதாவூர் பங்களா விவகாரத்தில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி அரசு நடிவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் திங்கள் கிழமை தீர்ப்பு கூறியது.

இவ்விவகாரத்தில் கமிஷன் தலையிட விரும்பவில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செஙக்பட்டு தாலுகா, சிறுதாவூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசிடம் புகார் மனு அளித்தது.

இதுகுறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக் குழு விசாரணை செய்து வருகிறது.

‘112 ஏக்கர் பரப்பளவுள்ள சிறுதாவூர் பங்களாவில், நிலமற்ற ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம், 31.23 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆகியவை அடங்கியுள்ளது. மற்றவை பரணி ரிசார்ட்ஸ் பங்குதாரர்களான இளவரசி, சித்ரா ஆகியோருக்குச் சொந்தமானது’ என்று துணை தாசில்தார் வாக்குமூலம் அளித்தார்.

ஆதிதிராவிடர் நிலம் குறித்து மட்டுமே கமிஷன் விசாரிக்க முடியும். புறம்போக்கு நிலம் குறித்து விசாரிக்க அதற்கு அதிகாரம் கிடையாது என்று சித்ரா சார்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து அரசின் கருத்தைக் கமிஷன் கேட்டது.

புறம்போக்கு நிலம் குறித்தும் விசாரிக்க கமிஷனுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசு தெரிவித்தது. நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியது.

இந்த விவகாரத்தில் கமிஷன் நேற்று அளித்த தீர்ப்பு வருமாறு:

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், சித்ரா தனது மனுவில் நில ஆக்கிரமிப்புச் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளார். அரசும் அதே சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கூறியுள்ளது.

இருவர் கருத்தும் ஒன்றாக உள்ளதால் நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கலாம். இந்த விவகாரத்தில் கமிஷன் தலையிட விரும்பவில்லை.

admin @ 2:45 am
Filed under: news