CM’s meet in capital

Posted on Sunday 12 October 2008

டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு 

சென்னை: மதக்கலவரத்தைத் தடுக்கவும் அடக்கவும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் சார்பாக பொதுப்பணி்த் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்கிறார்.

ஒரிசா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டிலும் சில தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரிசாவில் கலவரம் தொடர்ந்து நடந்துவருகிறது. எனவே மதக்கலவரத்தைத் அடக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறிதது விவாதிக்க டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் ஒரிசா, கர்நாடக மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் குறித்தும், மதக்கலவரத்தை தடுக்க எடுக்கவேண்டிய உறுதியான நடவடிக்கைகள் பற்றியும், தீவிரவாதம் பற்றியும் விவாதி்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்ககள், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தி்ன் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

admin @ 11:20 pm
Filed under: news
Thangabalu attacks K’nataka CM

Posted on Friday 22 August 2008

எடியூரப்பா தமிழகத்தின் இடையூரப்பா!: தங்கபாலு தாக்கு
 
சென்னை: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழகத்தின் இடையூரப்பா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழகத்திற்கு வந்திருந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீண்டும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழர்களின் உரிமைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் குடிநீர் திட்டமான அத்திட்டம் தமிழக எல்லைக்குள் தமிழ்நாட்டிற்கு உரிமையான தண்ணீரில் நிறைவேற்றப்படும் திட்டம் என்பதை கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனவே இத்திட்டத்தை தமிழகம் நிறைவேற்ற கர்நாடகாவிடம் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. இரு மாநில எல்லைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தலையிடும் உரிமை அம்மாநிலத்துக்கு எள்ளளவும் கிடையாது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவரது கட்சிக்கு விசுவாசத்தை காட்டிக்கொள்வதற்காக தமிழக பிரச்னையில் இவ்வாறு தலையிடுவதற்கு முன் அவரது கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

பிரச்னை எதுவுமில்லாத தமிழக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னையில் பிரதமர் தலையிடவேண்டும் என்றும், அதற்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் எடியூரப்பா மிரட்டல் விடுத்திருப்பது இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கே விடுக்கும் சவாலாகும்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வாறு தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூரப்பாவாக இருந்து செயல்பட்டு வரும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எ‌ன்று கூறியுள்ளார். 
 

admin @ 11:20 pm
Filed under: news
Actors and political parties slams Rajnikanth

Posted on Friday 1 August 2008

தமிழகத்தை விட்டு ரஜினி வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி

satyarajsarth-rajni.jpg

சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து தான் பேசியது தவறு. அதற்காக கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:

ஒகேனக்கல் பிரச்னையில் பேசிய பேச்சில் பாடம் கற்றுக்கொண்டதாக கூறும் ரஜினி, அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. அவர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதை தவறு என்கிறாரா? அல்லது குடிநீருக்காக தவிக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்காக பேசியதை தவறு என்கிறாரா?

எனவே, அவரை சூப்பர்ஸ்டார் ஆக்கிய தமிழக மக்களுக்கு பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட சுயலாபத்துக்காக தமிழக பிரச்னையை விட்டுக்கொடுத்துவிட்டாரா? என்று கேட்க விரும்புகிறேன்.

சத்யராஜ்:

ரஜினி மன்னிப்பு கேட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இப்படியா அவர் பல்டியடிக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் ரஜினி அவமானப்படுத்திவிட்டார். எனக்கு இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்குமானால், கர்நாடகத்தில் அந்தப்படம் எவ்வளவு நஷ்டம் அடைந்திருக்குமோ, அந்தத் தொகையை என் சம்பளத்தில் இருந்து தந்திருப்பேன். மன்னிப்பு கேட்டிருக்கமாட்டேன். ரஜினி தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைத்து விட்டார் போலும்.

லட்சிய தி.மு.க. பொதுச் செயலாளர் விஜய. டிராஜேந்தர்:

தமிழர்கள் மத்தியில் ரஜினி தன்னை காட்டிக்கொள்ள நினைத்தார் ஹீரோவாக. இன்று கன்னட அமைப்புகளுக்கு பயந்து வருத்தம் தெரிவிப்பதாகப் பேசி தன்னை வெளிப்படுத்தி விட்டார் ஜீரோவாக.

அங்கே எவ்வளவு நஷ்டம் ஏற்படுமோ அதை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டு, தமிழ்த் திரைப்படஉலகின் மூலம் போராட வேண்டியதுதானே?

ரஜினி மன்னிப்பு கேட்க வைத்த கன்னட மக்களின் மொழிப்பற்றை, ஒற்றுமையை பாராட்டுகிறேன். அந்த உணர்வு தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று வேதனைப்படுகிறேன்.

இந்தவிஷயத்தில் கன்னடர்களிடமிருந்து ரஜினி கற்றதாக சொல்கிறார் பாடம். இவரைப் போன்ற நடிகர்களிடத்தில் தமிழக மக்கள் கற்றுக் கொள்ளவேண்டும் பாடம். அவர் யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கன்னடத்தில்தான் கடிதம் எழுதியுள்ளார். இதிலிலிருந்து அவர் யார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும்

இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒகேனக்கல் குடிநீர் பிரச்னைக்காக தமிழ்த் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.

ஆனால் இன்றோ தனது குசேலன் திரைப்படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில், ‘கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன்’ என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.

தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுமோ என்று அவர் அச்சப்படுகிறார்.

உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக, ஆவேசமாக, கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற்று ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதிக்க வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

admin @ 11:45 pm
Filed under: news
Kuselan release… Rajni ask apologises to kannada people

Posted on Friday 1 August 2008

குசேலனைத் கர்நாடகாவில் திரையிட…
கன்னட மக்களிடம் ரஜினி பகிரங்க மன்னிப்பு!

rajni.jpg

ன்னட ஆதரவாளர்கள் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து அவருடைய குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஒகேனக்கல் பிரச்னை ஏற்பட்டபோது தமிழகத்தில், திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ரஜினி பேசுகையில் கன்னடர்களை தாக்கி பேசியதாகக் கண்டனம் எழுந்தது.

ரஜினியின் பேச்சுக்கு  கன்னட அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. ரஜினியின் திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிடவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கர்நாடக சினிமா வர்த்தக சபைக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், கன்னட மக்களுக்கு எதிராக தான் பேசியிருந்தால் அந்தப் பேச்சால் அவர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக கூறியிருந்தார்.

மேலும் குசேலனை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று கோரி கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரஜினிக்கு எதிராக, கர்நாடக சினிமா வர்த்தக சபைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடந்த இடத்துக்கு வர்த்தக சபைத்தலைவர் நடிகை ஜெயமாலா சென்று பேச்சுவார்ததை நடத்தினார்.

அப்போது ஜெயமாலா கூறுகையில்,

”குசேலன் திரைப்படத்தை தடை செய்யும் அதிகாரம் வர்த்தக சபைக்கு இல்லை. இந்தப் பிரச்னை குறித்து நான் ஏற்கனவே ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் பாலசந்தர், இயக்குநர் வாசு ஆகியோரிடம் பேசினேன். ரஜினியும் வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் நேரடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவருடன் நான் பேசுகிறேன். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் கன்னட அமைப்பினரோ குசேலன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஐதராபாத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஜினி, ஒகேனக்கல் பிரச்னையின்போது தான் பேசியது தவறு என்று இப்போதுதான் புரிகிறது என்றும், அதற்காக தான் கன்னட மக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இனிமேல் அவ்வாறு தான் பேசமாட்டேன் என்றும் பகிரங்கமாக வருத்தம் (மன்னிப்பு?) தெரிவித்துள்ளார் ரஜினி.

ரஜினி வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் இன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

admin @ 12:00 am
Filed under: news
Karnataka: Agitation against Kuselan Movie

Posted on Monday 28 July 2008

குசேலன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு:
கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு!

rajini1.jpg

சித்ரதுர்கா: ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னடர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்துக் கூறியதாக குற்றம்சாட்டி அவரது உருவபொம்மையை எரிக்கும் போராடட்டத்தை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நடத்தினர்.

கடந்த மே மாதம் ஒகேனக்கல் பிரச்னை தொடர்பாக கர்நாடகா, தமிழக மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில், திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய ரஜினி, கன்னடர்களுக்கு எதிராக கருத்து கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது கன்னட அமைப்புகள் பல ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தின.

இது நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ரஜினிக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கியுள்ளன கன்னட அமைப்புகள்.

ரஜினி நடித்துள்ள குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தகத் தலைவர் டாக்டர் ஜெயமாலாவிடம் கன்னட அமைப்பினர் சமீபத்தில் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சித்ரதுர்காவில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் தலைமையில் ரஜினியின் உருவபொம்மையை நகரில் முக்கிய சாலைகள் வழியாக கொண்டு சென்றனர். காந்தி சிலை அருகில் தீவைத்து எரித்தனர்.

அப்போது ‘ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், ரஜினியின் எந்தத் திரைப்படத்தையும் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம்’ என்று ஆவேசமாகக் கூறினர்.

admin @ 12:27 am
Filed under: news
2008/06/16 B.J.P. M.L.A.’s wife found dead in delhi!

Posted on Monday 16 June 2008

கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் மனைவி டெல்லியில் மர்ம சாவு!

பெங்களூரு: கர்நாடகத்தில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வின் மனைவி பத்மபிரியா டெல்லியில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மேலும்…

admin @ 3:27 am
Filed under: news
2008/06/11 Jaya ask TN govt to strengthen seaside security

Posted on Wednesday 11 June 2008

jayalalitha_41.jpgகட‌ல்சா‌ர் காவ‌ல் ‌நிலைய‌ங்களை உடனே அமையுங்கள்: கருணாநிதிக்கு ஜெயல‌லிதா வலியுறுத்தல்

சென்னை: கடல்வழி தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்க கடல்சார் காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளை உடனடியாக விரைந்து அமைக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மேலும்…

admin @ 2:23 am
Filed under: news
2008/06/07 Centre supports TN on Hoggenakkal water scheme

Posted on Saturday 7 June 2008

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்: அனுமதி வழங்கப்பட்டது ஏன்?- தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு விளக்கம்

டெல்லி: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்பதற்கு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும்…

admin @ 2:35 am
Filed under: news
2008/06/07 Engg colleges reject stste formula

Posted on Saturday 7 June 2008

புதிய கல்விக்கட்டணம் ஏற்கப்படவில்லை!: ஜேப்பியார்

சென்னை: இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கல்விக்கட்டணத்தையும், மாணவர் சேர்க்கைக்கான 65-35 இடஒதுக்கீட்டையும் சுயநிதி கல்லூரிகள் ஏற்கவில்லை என்று தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் (கன்சார்டியம்)கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும்…

admin @ 1:56 am
Filed under: news
2008/06/07 Yeddyurappa Govt., wins trust vote

Posted on Friday 6 June 2008

கர்நாடகா: எடியூரப்பா அரசுக்கு வெற்றி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றிபெற்றது.

மேலும்…

admin @ 8:55 pm
Filed under: news