MG Ramachandran Speech

Posted on Wednesday 1 October 2008

m.g.ramachandranஅதிமுக ஏன்? எம்ஜிஆர் பேச்சு

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் அரசியல் களம் காண பேசிய முதல் மேடை பேச்சு இது. பத்தாண்டுகள் அவரை யாராலும் அசைக்க முடியாமல் போனதன் காரணம் இந்த பேச்சில் இருக்கிறது.  கேட்டு ரசியுங்கள்

Click + symbol to here
Download

admin @ 7:23 am
Filed under: speech
Tha Pandian wants to make ADMK and DMDK in a row

Posted on Friday 26 September 2008

அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓர் அணியில இணைந்தால் நாட்டுக்கு நல்லது - தா. பாண்டியன்

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் அந்தக் கட்சிகளின் செல்வாக்கு பெருமளவு சரிந்திருக்கிறது. இச்சமயத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் ஒரே அணியில் வருமானால் நாட்டுக்கு நல்லது என்று இ. கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில் இதைக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்,

”இலங்கைப் போரினால் காட்டுக்குள் வாழும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, இடம், மருந்து கொடுத்து உதவவேண்டும் என்றும், மத்திய அரசு இந்த கோரிக்கையை இலங்கைக்கு வற்புறுத்தும் அதே நேரத்தில், இலங்கை இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணும் ஆலோசனைத் திட்டத்தை இலங்கை அரசு பகிரங்கமாக அறிவிக்க வற்புறுத்த வேண்டும் என்றும் இ. கம்யூனிஸ்ட் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்துவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரேடார் நிறுவச் சென்ற இந்தியர்கள் காயமடைந்திருப்பது அதை உறுதிப்படுத்துகிறது.

எனவே போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்திய அரசு அதுவரை இலங்கைக்கு ராணுவ உதவி செய்யவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். கச்சத்தீவைப் பொருத்தவரை ஒப்பந்தத்தில் உள்ளதை நடைமுறைப்படுத்தவேண்டும்.
 
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுவதும், கோதாவரி படுகையில் இருந்து தொடக்கத்தில் 200 பீப்பாய் எடுத்துவந்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது 500 பீப்பாய் அளவுக்கு உற்பத்தியை அதிகரித்து, அதை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதும் மத்திய அரசு, டீசல் விலையைக் குறைக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. இதை வலியுறுத்தி விரைவில போராட்டம் நடத்தப்படும்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. விற்கு மாற்றாக, அவர்களை முறியடிப்பதற்காக  ஒரு அணியை உருவாக்க மற்ற கட்சிகளுடன் பேசிவருகிறோம்.

தமிழகததில் மாற்று அணி அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் அந்தக் கட்சிகளின் செல்வாக்கு தமிழகத்தில் பெருமளவில் சரிந்திருக்கிறது. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் ஒரே அணியில் வருமானால் அது நாட்டுக்கு நல்லது” என்றார்.

admin @ 10:04 pm
Filed under: news
Power drop: CM speakes lie: Jaya

Posted on Wednesday 24 September 2008

மின்சாரத் தட்டுப்பாடு: பொய் பேசுகிறார் கருணாநிதி!: ஜெ.,

சென்னை: தற்போதைய மின்சார பற்றாக்குறைக்குக் காரணம், முந்தைய அ.தி.மு.க. ஆட்சி எனத் திரும்ப திரும்ப பொய் பேசுகிறார் கருணாநிதி என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘1991முதல் 1996வரையிலும், 2001முதல் 2006வரையிலும் நடைபெற்ற எனது ஆட்சி காலத்தில் 3430.75 மெகாவாட் அளவிற்கு  புதிதாக மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள மொத்த மின் நிறுவுதிறனில் எனது ஆட்சி காலத்தில் மட்டும் 3இல் ஒரு பங்கு மின் நிறுவுதிறன் உருவாக்கப்பட்டது என்று  பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

இதுமட்டுமல்லாமல், அனல் மின் நிலையங்கள் சிறப்பாக  செயல்பட்டதற்காக மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்தது.

உண்மை நிலைமை இவ்வாறு இருக்க,

1996-2001 தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியில் கவனம் செலுத்திய காரணத்தினால் தான் இடையில் வந்த ஆட்சிகள் மின்சார பிரச்னையை சமாளிக்க முடிந்தது என்று மிக பெரிய பொய்யை முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அவரது முந்தைய ஆட்சி காலத்திலும் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவியதை கருணாநிதி மறந்து விட்டாரா?அல்லது மறைக்க பார்க்கிறாரா? என்று தெரியவில்லை. இவருடைய 1996-2001 ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மின் நிறுவு திறன் 560.69 மெகாவாட் மட்டுமே.
 
தி.மு.க. ஆட்சியில் இவ்வளவு குறைவாக மின்சார பற்றாக்குறை  நிலவியபோதும் 2001-06 வரையிலான எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துகொண்டேன். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது.

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மின்சார பற்றாக்குறைக்கு காரணம், முறையான பராமரிப்பு இல்லாததால் எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் மாறி மாறி பழுதடைகின்றன. இதன் மூலம் மட்டும் 700 முதல் 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி குறைகிறது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் 2 மாதமாக இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிலக்கரியில் 25 சதவிகிதம் அளவுக்கும், எரிவாயுவில் தினமும் 4 லட்சத்து 50 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கும் குறைத்துள்ளது.

இந்த உண்மைகளை தெரிவிக்காமல் மனம்போன போக்கில் கருணாநிதி முந்தைய அ.தி.மு.க. அரசின்மீது பழிபோடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.
 

admin @ 10:37 pm
Filed under: news
We will speak with ADMK, says T Pandian

Posted on Monday 22 September 2008

பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க. தவிர யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி: தா. பாண்டியன்

தேனி: தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எஞ்சிய அனைத்து கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்படும். இதில் அ.தி.மு.க. வும் அடங்கும் என்று இ. கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

தேனியில் தா. பாண்டியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

”பா.ஜ. மற்றும் காங்கிரசோடு உறவு வைத்துள்ள கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் உறவு வைத்துக் கொள்ளாது. தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எஞ்சிய அனைத்து கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்படும். இதில் அ.தி.மு.க. வும் அடங்கும்.
 
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீடிக்கிறது. மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்கோ, மாற்று நடவடிக்கை எடுப்பதற்கோ அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

அமெரிக்க நிறுவனங்களின் நிதி பிரச்னையால் இந்திய வங்கிகள், இந்திய காப்பீட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை என நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகிறார்.

அவர் கூறிய கொள்கைகளை கடந்த 4 வருடங்களாகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுத்ததால் தான் இந்திய வங்ககிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தப்பித்துளள்ன.

மத்திய அரசு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்றார்.

admin @ 11:51 pm
Filed under: news
Let together to make peaceful life in India: Jaya

Posted on Sunday 21 September 2008

jayalalithaa2வன்முறையை வேரோடு வீழ்த்த சபதம் ஏற்போம்: ஜெயல‌லிதா
 
சென்னை: வன்முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த சபதம் ஏற்போம் எ‌ன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இன்றைக்கு இந்தியா இரக்கமற்றவர்களின் வன்செயல்களாலும், கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களாலும் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருப்பதை மிகுந்த மன வேதனையோடு பார்க்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அப்பாவி மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகின்றன.

மக்கள் கூட்டம் மிகுந்த கடை வீதிகளில் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. இரயில்களிலும், இரயில் நிலையங்களிலும், பேரு‌ந்து நிலையங்களிலும், இன்ன பிற பொது இடங்களிலும் இத்தகைய வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்படுவோர் எல்லாம் சாதாரண பொதுமக்களே. யார் என்றும் தெரியாமல், முகம் கூட அறியாமல், எந்தத் தவறும் செய்யாதவர்கள் மாண்டு போகிறார்கள். ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாக யார் பெற்ற பிள்ளைகளோ. இவர்கள் ஏன் இப்படி கொல்லப்படுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

இந்தக் கொடுஞ்செயல்களை செய்பவர்கள், தாங்கள் ஏதோ ஒரு கொள்கைக்காக செய்வதாக பிரகடனம் செய்கின்றனர். ஏதோ ஒரு இலக்கை அடைய இதைச் செய்வதாகவும் அறிவிக்கின்றனர். கொள்கை என்றும், இலக்கு என்றும் அவர்கள் சொல்வதெல்லாம் வெறும் கற்பனை, யாருக்கும் விளங்காத புதிர்கள்.

முடிவில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சமூக விரோத சக்திகளால் எந்தக் காரணமுமின்றி கொன்று குவிக்கப்படுவதைத்தான் காண்கிறோம். அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத பகை கொண்ட உள்ளத்தின் செயல்கள் தானே இந்தப் பயங்கரவாத செயல்கள்?

யாரையாவது அர்த்தமற்று கொன்று குவிப்பதை, எந்த மதமாவது ஏற்குமா? ஆதரிக்குமா?

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக பார்ப்பது தான் இந்து சமயத்தின் பெருமை. அத்தகைய ஒரு சமயம், மற்றவர்களுக்கு எதிராக, சக மனிதர்களுக்கும் எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ளும்

இஸ்லாம் என்றாலே அமைதி. உன்னை நீ நேசிப்பதைப் போல, உன் அயலவனையும் நேசி என்று மொழிந்தார் இயேசு கிறிஸ்து. அகிம்சை என்ற அற்புதக் கொள்கையை உலகுக்கு அளித்த மதம் ஜைன மதம். உள்ளத்தின் அமைதியே உலகின் அமைதி என்றார் புத்த பெருமான்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்த மதங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்தியாவில் தழைத்து வந்திருக்கின்றன. ஒன்றுக்கு அடி பணிந்து மற்றொன்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. இன்றைக்கு ஏன் மற்ற மதத்தினர் மீது இவ்வளவு வெறுப்பு, நம்மையே நாம் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.

வழி தவறிச் செல்வோரின், கோழைகளின் தவறான ஆயுதம் தானே வன்முறை என்பது? சர்வதேச அமைதி நாளான இந்த நாளில், நம் முன்னோர்கள் உயிராய் மதித்த உயர்ந்த சமய நெறிகளுக்கு நம்மையே நாம் மீண்டும் அர்ப்பணிப்போம். வன்முறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம். ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளாகப் போற்றி நேசிக்கும் பண்மைப் பெறுவோம். அனைவரும் வாழ்வுபெற அமைதிக்கு வாய்ப்பளிப்போம்’ எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர். 

admin @ 9:11 pm
Filed under: news
By-election: DMK wins Chennai wards

Posted on Saturday 20 September 2008

சென்னை மாநகராட்சி இடைத்தேர்தல்: தி.மு.க. வெற்றி
 
செ‌ன்னை: செ‌ன்னை மாநகரா‌ட்‌‌சியில் இர‌ண்டு வா‌ர்டுக‌ளி‌ல் நட‌ந்த இடை‌த் தே‌ர்த‌‌லி‌ல் ‌தி.மு.க. வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

சென்னை மாநகராட்சி 44, 18 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

44ஆவது  வார்டில் தி.மு.க. சார்பில் நடராஜனும், அ.தி.மு.க. சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர் பிரதாப்குமாரும், பா.ஜ.க. சார்பில் சுரேஷ் என்ற சுரேஷ் ஜெயினும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாஸ்கர் என்ற பாஸ்கரன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

இ‌ன்று காலை வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை நடைபெ‌ற்றது. தி.மு.க வேட்பாளர் நடராஜ‌ன் 3,039 ஓட்டுகளும், அ.தி.மு.க வேட்பாளர் 1,261 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இ‌தி‌ல் தி.மு.க வேட்பாளர் 1,788 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

18ஆவது வார்டில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணனும், அ.தி.மு.க. சார்பில் சேக‌ர் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் ‌கிரு‌ஷ்ண‌ன் 3,712 ஓட்டுகளும், அ.தி.மு.க 1553 ஓட்டுகளும் பெற்றிருந்தன. இதில் தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணன் 2,159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 13ஆவது  வார்டி‌ல் அ.தி.மு.க. வே‌ட்பாள‌ர் வெ‌‌ங்கடாசல‌ம் 1,754 வா‌க்குக‌ள் பெ‌ற்று 115 வா‌க்கு‌க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் க‌ஸ்தூ‌‌ரி‌க்கு 1,639 வா‌க்குக‌ளு‌ம், பா.ம.க. வே‌ட்பாள‌ர் ஜான‌கிராம‌னு‌க்கு 159 வா‌க்குக‌ளு‌ம் ‌கிடை‌த்தது.

‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம், புழல் ஊராட்சி ஒன்றியம் கதிர்வேடு ஊராட்சி 3ஆவது வார்டு உறுப்பினருக்கான தேர்த‌லி‌ல் ‌தி.மு.க. வே‌‌ட்பாள‌ர் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 
 

admin @ 1:43 am
Filed under: news
Quit from ADMK?: I will not feel worry: S V Sekar

Posted on Saturday 20 September 2008

கல்தா கொடுத்தாலும் கவலை இல்லை: எஸ்.வி. சேகர்

சென்னை: அ.தி.மு.க. வில் இருந்து நீக்கினாலும் வருத்தப்பட மாட்டேன் என்று நடிகரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. வுமான எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

சென்னை அருகே வானகரத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் எஸ்.வி. சேகர் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில்,

”அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்திற்கு இம்முறையும் எனக்கு அழைப்பு வரவில்லை. நான் எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்புகூட அனுப்பியிருக்கிறார்கள். இப்போது ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதனால் எனக்கு வருத்தமில்லை.

கடந்தமுறை அழைப்பிதழ் அனுப்பாததை பற்றி அம்மாவிடம் கேட்டபோது, ‘கவலைப்படாதீர்கள் சேகர். அடுத்த முறை உங்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வரும்’ என்றார்.

இப்போதும் ஏனோ அனுப்பவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்னைப் புறக்கணிக்கிறார்கள். அது என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

அ.தி.மு.க. வில் எத்தனையோ பேர் சுயநலவாதிகளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் போல் எனக்கு வேஷம் போடத் தெரியாது. என் மனசாட்சிப்படி எனது பணிகளை செய்து வருகிறேன்.

மனிதர்களுக்கு பல முகங்கள். எனக்கும் நடிகன், நல்ல குடும்பஸ்தன், ஆன்மிகவாதி, அரசியல்வாதி என்று முகங்கள் உள்ளன.

நான் வகி்க்கும் பொறுப்புக்கு ஏற்ப பலரிடம் பேசுகின்ற வாய்ப்பு இருக்கிறது. என் தம்பி மகன் திருமணத்திற்கு வந்த முதல்வர் கருணாநிதியை வரவேற்றது தவறா? ஒரு விழாவில் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது தவறா? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் நிகழ்வுகளை என்னால் தவிர்க்க முடியாது.

நான் ஒருபோதும் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது இல்லை. ஆனாலும் கட்சித் தலைமைக்கு என்மீது அதிருப்தி இருக்கிறது. என்னைப் பொருத்தவரை கடவுள் என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்துவருகிறேன்.

ஒருவேளை என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் வருத்தப்பட மாட்டேன்.

மற்ற கட்சிகளிலே சேர்வது குறி்த்து இப்போதைக்ககு எதுவும் கூறமுடியாது. கடவுள் நம்பிக்கை உள்ள நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எனது வழக்கமான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்றார்.

admin @ 12:18 am
Filed under: news
ADMK future depend on victory of Lok Sabha elections: Jaya

Posted on Friday 19 September 2008

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியில் அ.தி.மு.க. வின் எதிர்காலம் உள்ளது!: ஜெயலலிதா பேச்சு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியில் தான் அ.தி.மு.க. வின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. வின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஜெயலலிதா பேசுகையில்,

”அ.தி.மு.க. வுக்கு கடந்த 20 வருடங்களாக பொதுச் செயலாளராக உள்ளேன். ஆறாவது முறையாக தொடர்ந்து என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்த கட்சினருக்கு நன்றி.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தல், இளைஞர் - இளம் பெண்கள் பாசறை அமைத்து உறுபப்பினர்களை சேர்க்கும்படி கூறினேன். அதன்படி தற்போது இந்தப் பாசறைகளில் 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடும் உரிமையை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்யவேண்டும். கட்சிக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்த இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பயிற்சி அளிக்க வேண்டும்.

சென்னை மதுரை உள்பட தமிழகம் எங்கும் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக வருந்துகிறேன்.

ஆனால் இத்தகைய சம்பவங்களைப் பார்த்து கட்சியினர் துவண்டுவிடக்கூடாது. நமது எதிர்காலம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. நமது எதிர்காலத்தை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. உங்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை அ.தி.மு.க. பெறும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும். அத்தேர்தலின் வெற்றியில்தான் அ.தி.மு.க. வின் எதிர்காலம் உள்ளது” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”இனி அ.தி.மு.க. சம்பந்தப்பட்ட கட்சி நிகழ்ச்சிகளில இஞ்சி இடுப்பழகி போன்ற பாடல்களைப் போடக்கூடாது எம்.ஜி.ஆர். பாடல்களை மட்டுமே போடவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

admin @ 10:24 pm
Filed under: news
2008/09/19 Junior Kelvi Pathil

Posted on Friday 19 September 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.அசோகன், சென்னை-84.

பொதுமக்களிடமிருந்து புகார்களை வாங்க காவல்துறை மறுக்கிறதே?

நீங்கள் சொல்கிற இடம் மதுரைக்கு உள்ளேவா, மதுரைக்கு வெளியேவா? இதைச் சொல்லாத வரை உங்களின் இந்தப் புகாரை என்னால் ஏற்க முடியாது. காவல்துறை என்றால் உங்களுக்கு இளப்பமாய்ப் போச்சு. அவர்களுக்குக் கட்டப்பஞ்சாயத்துக்கே நேரமில்லை. இதிலே உங்கள் புகார் வேறு!


சி.மைக்கேல், விழுப்புரம்.

இடதுசாரிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்துவிட்டார்களா?

வரவேற்பு முடிந்ததும் கல்யாணம் நின்றுபோகிற காலம் இது! அவசரப்படாதீர்கள்.


ஆர்.பாண்டுரங்கன், திருத்தணி.

மூளைச்சலவை என்பது என்ன?

தி.மு.க.விற்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை ஒரு நடுநிலையாளனிடம் கேட்கிறீர்களே? இது நியாயமா?


கே.தணிகை, மதுரை.

சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?

ஆற்காட்டாரை ‘இருளப்பன்’ என்றும், ப.சிதம்பரத்தை ‘ஆண்டியப்பன்’ என்றும் பா.ஜ.க.வின் இல.கணேசன் நக்கலடித்தாரே, அது! அரசியல்வாதிகளைப் பார்த்துச் சிரித்தது போய், அவர்களும் நம்மைச் சிரிக்க வைக்கிறார்களே என்கிறபோது சிரிப்புச் சிரிப்பாய் வருது.


வி.கர்ணன், திண்டிவனம்.

நெற்றி அகலமாக இருந்தால் அறிவு அதிகமாமே, உண்மையா?

நெற்றியானது மீட்டர் கேஜை விடக் கொஞ்சம் பிராட்கேஜாக இருந்தால் அறிவு அதிகமா என்று கேட்கிறீர்கள்? அப்படி பார்த்தால் சிலருக்கு நான்கைந்து பிராட்கேஜ் லைன்கள் இழுக்கிற அளவு அகலமிருந்தும் அவர்களுக்கு அறிவு இல்லாதது ஏன்? நெற்றியே இல்லாதவர்கள் சொன்ன தகவல் இது. என்னை விடுங்க. எனக்கு பிராட்கேஜ்தான்.


ந. பசுபதி, சென்னை.

நாட்டுக்கு இப்போது தேவையானது?

கெளரவ டாக்டர் பட்டங்கள்! வறுமை, வெள்ளம், மதக் கலவரங்களை எல்லாம் பத்திரிகைகளின் கறுப்பு ‘மை’கள் ஏற்றுக் கொள்ளப்படாதபடி இருட்டடிப்புச் செய்ய, இந்த கறுப்பு கவுன்கள் சிலருக்கு மிகமிக அத்தியாவசியமாய்த் தேவைப்படுகிறது.


டி.ஹரிஹரன், பள்ளிக்கரணை.

பரதம் இப்போது இருக்கிறதா?

அது சுத்த சைவ நடனம். இதை எத்துணைப் பேர் பார்ப்பார்கள்? இப்போதெல்லாம் (சுத்த) அசைவ நடனங்கள்தாம்! நமது கிழக்குக் கடற்கரை சாலை கிழக்காக இருந்தாலும் அதன் பொழுதுகள் எல்லாமே மேற்காகத்தான் இருக்கிறது.


மா.செல்வராஜ், சென்னை-31.

குன்னக்குடி வைத்தியநாதனின் மரணம் குறித்து?

இவர் உடல்நலக்குறைவாக இருந்த காலத்திலேயே இவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்று உங்கள் மத்தியில் விருப்பம் தெரிவித்தவன் நான். வயலினுக்கே மரியாதை தந்தவர். மேட்டுக்குடி இசைக்கருவியான வயலினைப் பாமரர்களும் இரசிக்க வைத்தவர். இந்திய அளவில் மதிக்கப்பட்ட மிகச் சில தமிழகக் கலைஞர்களுள் குன்னக்குடி குறிப்பிடத்தக்கவர். இவர் வயலின் மட்டும் அல்ல, இவர் பேச்சும் உள்ளத்திற்கு உற்சாகம் தரும். மனிதர் சோர்ந்து, அசந்து, தளர்ந்து பார்த்ததே இல்லை! குன்னக்குடியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இசை மட்டுமல்ல, உற்சாக மனநிலையும்கூட!


ஆர்.பாலாஜி, கும்பகோணம்.

பெட்ரோல் விலையைச் சமாளிக்க ஒரு வழி?

இதற்கு நமது வலது, இடதுகள் ஒத்துழைக்க வேண்டும். அவை ஒத்துழைத்தால் இந்த பெட்ரோல், டீசல் தேவைகளை(யே) நாம் எரித்துவிடலாம். இந்த வலது, இடதுகள் என்பது நமது கட்சிகள் அல்ல, நமது கால்கள். மிதிவண்டியை மிதிக்க அவை தயாரானால் நமக்கு ஒரு பெட்ரோலும் வேண்டாம்.


எம்.மாசிலாமணி, காஞ்சிபுரம்.

பாகிஸ்தான் பிரதமரைக் கொல்லப் பார்த்திருக்கிறார்களே?

அங்கு தினமும்தான் துப்பாக்கியைத் தூக்குகிறார்கள். ஆனாலும் அவர்கள் ஒலிம்பிக்கில் வர முடியவில்லையே? மண்ணைக் கவ்விக் கொள்கிறார்களே?


எஸ்.சங்கரன், சென்னை-87.

அணு ஆயுத ஒப்பந்த ரகசியங்கள் வெளிப்பட்டுவிட்டனவே?

பொத்திப் பொத்தி வைத்தாலும் கருவிலிருக்கும் குழந்தை வெளிப்பட்டுத்தான் தீரும். இந்தக் குழந்தை வெறும் அரசியல் மருத்துவக் கண்காட்சிக்கு மட்டுமே உதவும்!


பி.ஸ்ரீராம், பொழிச்சலூர்.

அரசியலில் பெண்கள் பங்கேற்கலாமா?

தாராளமாய்ப் பங்கேற்கலாம். ஒரு சிலர் கட்சி மாறாமலிருக்க அங்குள்ள மகளிர் அணிகளே காரணமாய் இருப்பதைப் பார்த்தால், அவர்களின் வலிமை புரியும்.


ஜே. பாலமுருகன், கோவை.

புதுவை மாணவர்களுக்கு மாதந்தோறும் பாக்கெட் மணி வழங்க உத்தரவிட்டுள்ள அம்மாநில புதிய முதல்வர் வைத்திலிங்கம் பற்றி?

வைத்திலிங்கத்தின் இந்த வைத்தியம் சரியில்லை! பாக்கெட் மணி படிப்புக்கு உதவாது. வேண்டுமானால் அவை புகைக்கும் போதைக்கும் உதவலாம்.


ஆர்.ராகவன், ஈகை.

முடிந்தால் ஜெயலலிதா கூட தி.மு.க.வில் சேரக்கூடும் என்ற கலைஞரின் பதிலைப் பற்றி?

ரசிக்கும்படியாக இல்லை. கலைஞருக்கு புளிக் கரைசலை ஊற்றத்தானே ஜெயலலிதா அரசியலே செய்கிறார்.


பா.சங்கர், சிந்துப்பூத்துறை.

விஜய் ஏசுதாஸ் எப்படி?

ஏசுதாசின் குரலில் இருந்த இளமை போய்விட்டது. இளம் நாயகர்களுக்கு ஏற்ற குரலாய் இல்லை. இவரும் இதைப் புரிந்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்தபடி இந்தியாவை எட்டிப் பார்க்கிறார். ஏசுதாஸை எண்ணி ஏக்கப்படுகிறவர்களுக்கு இவர் மகன் விஜய் நல்ல மாற்று. அச்சான ஆனால் இளமை ததும்பும் குரல். அரசியலில்தான் சில வாரிசுகள் எரிச்சலூட்டுகின்றனர். கலைத்துறையில் அல்ல!


கே.இசக்கிமுத்து, வண்டலூர்.

வடக்கே பிடித்த நடிகர்?

சத்ருகன்சின்ஹா. இன்னமும் இளமை குலையாமல் இருக்கிறார். ரஜினியே ஒரு முறை, நான் சத்ருகனைத்தான் பல நேரங்களில் பின்பற்றுகிறேன் என்று. சூப்பர் ஸ்டாருக்கே குரு என்றால் சாதாரணமா? வில்லனாய் நடித்து நெஞ்சில் இடம்பிடிப்பது மகாக்கடினம்!


எல்.நவீன், ஆத்தூர்.

சன்.டி.வி.யின் காமெடி என்கிற நகைச்சுவை சேனல் வரவேற்பைப் பெறுமா?

சோகம் அலுப்புத் தட்டும். சண்டை அலுப்புத் தட்டும். காதலும் நகைச்சுவையும் அலுப்புத் தட்டாது. அழவைத்து வேடிக்கை பார்த்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு இது நல்ல பிராயச்சித்தம்!


கா.பாலு, சேலம்-4.

தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட் எது?

மின்துறை! ஆற்காட்டார்தானே கலைஞருக்கு மிக மிக வேண்டியவர் என்று எண்ணிக் கொண்