Friday 20 June 2008
பாக்ஸ் ஆபிஸ்தான் குறி!: வித்தகன் பார்த்திபன்

தானே நடித்து இயக்கும் ‘வித்தகன்’ பட வேலைகளில் படு பிஸியாக இருக்கும் பார்த்திபனை சந்தித்தோம்.
”இதுவரைக்கும் குடும்பப்படம், கருத்து படம், கிளுகிளு படம்னு நிறைய பண்ணிட்டேன். இப்போ பாதையை மாத்தப் போறேன்…” என்ற பார்த்திபனிடம் ‘வித்தகன்’ கதை பற்றி கேட்டோம்…
”ரவுடித்தனம் கலந்த ஒரு போலீஸ்காரன் கதைதான் ‘வித்தகன்’. பாக்ஸ் ஆபிசை குறியா வச்சு நான் எடுக்கிற படமிது.”
அப்படி என்றால் வழக்கமான பார்த்திபனின் டபுள் மீனிங் படம்தான் வித்தகனோ?
”அதுதான் இல்லை. என் படங்களுக்கே உரிய டபுள் மினிங்கோ, கவர்ச்சி விஷயங்களோ இருக்குமுன்னு நினைக்காதீங்க… டெக்னிக்கான திரைக்கதைதான் இந்தப் படத்தோட சிறப்பு அம்சம். பரபரன்னு ஒவ்வொரு சீனும் பறக்கும்.”
வித்தகன் எப்போது தன் வித்தைகளை ஆரம்பிக்கிறான்?
‘ஆயிரத்தில் ஒருவன்’ முடிஞ்சதும் வித்தகன் ஆரம்பிக்கிறேன்.
கதாநாயகி?
”வித்தகன் தொடங்கும்போது எந்த பிரபல ஹீரோயினோட கால்ஷீட் கிடைக்குமோ அந்த ஹீரோயின்தான் எனக்கு ஜோடி!” தனக்கே உரிய நக்கல் தெறிக்க சொல்லி சிரித்தபடி ‘எஸ்கேப்’ ஆனார் பார்த்திபன்.










































