Friday 20 June 2008

Monika, what is wrong with Glamour?

கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தப்பிருக்கு? - கேட்கிறார் ‘சிலந்தி’ மோனிகா

monika.jpg

‘அழகி’ முதல் ‘சிலந்தி’ வரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘சிலந்தி’ படமும் அதில் மோனிகா ஆட்டிக் காட்டிய கவர்ச்சிக் கொடி எல்லோரையும் அவர் பக்கம் திருப்பியிருக்கிறது.

கவர்ச்சி என்னும் சிலந்தி வலையில் எல்லோரையும் சிக்கவைத்த சந்தோஷத்தில் இருந்த மோனிகா நமக்கு அளித்த கவர்ச்சியான ஸாரி, கச்சிதமான பேட்டி…

அழகி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படங்களில் நடித்த போது கிடைக்காத பெயரும் புகழும் மோனிகாவிற்கு ‘சிலந்தி’ படத்தில் நடித்தமைக்காக கிடைத்திருக்கிறதே?

”நிஜம்தான்! அதற்கு காரணம் இதில் நான் மட்டுமே நாயகி என்பதும் இதுநாள் வரை குடும்ப பாங்கில் நடித்து வந்த நான் இதில் கிளாமரில் கவனம் செலுத்தியிருப்பதும்தான் காரணங்களாகும்.

இனிவரும் திரைப்படங்களிலும் இந்த கவர்ச்சி கவனம் செலுத்தப்படுமா?

நிச்சயமாக, கதைக்கு தேவை என்றால் கிளாமர் செய்வேன். ‘அகராதி’, ‘அ ஆ இ ஈ’ இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இரண்டிலும் எவ்வளவு தேவையோ அவ்வளவு கிளாமர் செய்து வருகிறேன்.

தமிழ் தவிர?

சிங்கள மொழியில் நான் நடித்திருக்கும் ‘ரோசக்காகேர்’ எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Related Post

Leave a Reply