Friday 20 June 2008

Learning to talk in tamil: Jenelia

தமிழில் பேச முயற்சித்து வருகிறேன்! - ஜெனிலியா

jenilia.jpg

சந்தோஷ் சுப்ரமணியம்  வெற்றியால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் ஜெனிலியா சமீபத்தில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ இயக்குநர் ராஜா மற்றும் ஜெயம் ரவி சகிதம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்டதும் கிடைத்ததும்…

ஜெனிலியா தற்போது நடித்து வரும் படங்கள்?

சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்பட வெற்றிக்குப் பிறகு இரண்டு மூன்று தமிழ் திரைப்படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்தியில் இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறேன். அப்படங்களுக்குப்பின் இந்தியிலும் மார்கெட்டை பிடிப்பேன்.

நிறைய சம்பளம் கேட்பதால்தான் தமிழில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இல்லை என்கிறார்களே?

யார் சொன்னது? என் திறமைக்கு ஏற்ற சம்பளம்தான் வாங்குகிறேன். நிறைய சம்பளம் வாங்குவதாக எனக்கு வேண்டாதவர்கள் வதந்தி பரப்புகின்றனர் அவ்வளவே!

பாய்ஸ், சச்சின் என்று பல படங்களில் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்திருந்தும் ராசியில்லாத நடிகை என்ற பெயர் ஜெனிலியாவுக்கு இருக்கிறதே?

அதுதான் இந்த சந்தோஷ் சுப்ரமணியம் வெற்றி மூலம் முறியடிக்கப்பட்டுவிட்டதே!

சந்தோஷ் சுப்ரமணியம் வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைகிறீர்களா?

இயக்குநர் ராஜாவும், ஜெயம் ரவியும் மிகுந்த ஈடுபாடு காட்டி இத்திரைப்படத்தை வெற்றிபெற வைத்தனர். வாய்ப்பு கிடைத்தால் இந்த அவர்களுடன் மீண்டும் இணைய நான் தயார்.

ஹரிணி ஜெனிலியா ஆனது ஏன்?

ஹரிணி பாய்ஸ் திரைப்படத்திற்காக இயக்குநர் ஷஙகர் சார் வைத்தது. ஜெனிலியா என் சொந்த பெயர்.

எப்பொழுது தமிழில் பேசுவீர்கள்?

தமிழ் பேச முயற்சித்து வருகிறேன். ஐ வில் ட்ரை என்று சிரித்தபடி பேட்டியை முடித்துக் கொண்டார் ஜெனிலியா.

Related Post

Leave a Reply