Category

Archive for the 'kollywood' Category

Ajith believe devotional

ajith.jpg

திடீரென கோயில் கோயிலாக சுற்றி வருகிறாராம் ஏகன் அஜீத். பக்தி முற்றிவிட்டதா எனக் கேட்டால், ”எப்பவுமே எனக்கு கடவுள் பக்தி அதிகம்தான். என்னதான் ஷூட்டிங்க்காக அலைந்து திரிந்துகொண்டிருந்தாலும் திருப்பதி வெங்கடாசலபதியை அவ்வப்போது தரிசிக்காமல் இருக்கமாட்டேன். சமீபத்தில் சாய்பாபா கோயிலுக்குப் போனேன். கேரளாவில் உள்ள குலதெய்வ கோயிலுக்கும் போய்ட்டு வந்தேன். அதைத்தான் சோட்டானிக்கரை அம்மன் கோயிலுக்குப் போனதா சும்மாவே கிளப்பிவிட்டுட்டாங்க” என்கிறார் அஜீத்.

Tags: , , , , , , ,

Vijay refusing publicity

vijay.jpg

அப்பாவுக்காக பந்தயம் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்துக் கொடுத்த விஜய், தனக்காக எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தாராம். ஆனால் அவர் உருவத்தை அச்சிட்டு 10 ஆயிரம் போஸ்டர்கள் தயாராகிவிட்டதாம். என்ன, குசேலன் கதி ஏற்படனுமா? என்று கேட்டு, அந்தப் போஸ்டர்களை கிழித்துப்போடச் சொல்லிவிட்டாராம் விஜய். நல்ல பாலிசிதான்.

Tags: , , , , ,

Director family acting?

seeman.jpg

மாயாண்டி குடும்பத்தார் என்று ஒரு திரைப்படம் தயாராகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் மாயாண்டி குடும்பத்தார்- ல் இயக்குநர்கள் குடும்பமே நடிக்கிறதாம். சீமான், தருண்கோபி, ஜெகன்நாத், ரவிமரியா, நந்தா பெரியசாமி, மணிவண்ணன், ஜி.எம். குமார், செந்தெமிழன், சிங்கம்புலி, அழகம் பெருமாள் என பத்து இயக்குநர்கள் நடிக்க, இத்திரைப்படத்தை பாண்டி திரைப்பட இயக்குநர் ராசு மதுரவன் இயக்குகிறார். அவரும் நடிக்கிறாரான்னு தெரியலை.

Tags: , , , , , , , , , , , , , , ,

Purna looking for break

purna.jpg

தமிழ் திரையுலகுக்கு புதிய வரவான பூர்ணா பரத்துடன் ஜோடியாக, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு போனவர்தான். அப்புறம் ஆளைக் காணவில்லை. சமீபத்தில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க சென்னை வந்தவர் அப்படியே மூன்று திரைக்கதைகளைக் கேட்டுவிட்டு போயிருக்கிறாராம். தமிழ்த் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து சேவை செய்தால் சரி.

Tags: , , , ,

Nakul raised his salary

nakul.jpg

சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு கிடைத்த சூப்பர் பப்ளிசிட்டியில் காதலில் விழுந்தேன் திரைப்படம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனசுக்குள் விழுந்து விட்டது. இதன் வெற்றி அறிமுக நாயகனான நகுலனை உச்சியில் ஏற்றியிருக்கிறது. இதுதான் சந்தர்ப்பம் என்று தனது சம்பளத்தை 50 லகரமாக உசத்திவிட்டாராம் தேவயானியின் தம்பி (நகுலன்தான்). சூப்பர் ஹீரோ ஆவதுதான் லட்சியம்?

Tags: , , , , , ,

Keerath biography

keerath.jpg

வட்டாரம் திரைப்பட நாயகி கீரத் பாட்டீல் வசிப்பது டெல்லியில் என்றாலும் பிறந்தது ஆப்பிரிக்காவில். பி.பி.ஏ. படித்துள்ள இந்தக் கிளி வட்டாரம் திரைப்படத்திற்குப் பின் தமிழில் காணவில்லை என்றால் காரணம் இருக்கிறது. கீரத், கன்னட தெலுங்கு திரையுலகில் பிசியாம். அங்கம் தெரியாமல் நடிப்பதில்தான் இருக்கிறது கிளாமர் என்கிறது இந்தத் தங்கம். புத்தக வாசிப்பிலும், சைக்கிள் ஓட்டுவதிலும், ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வமிக்க கீரத்திடம் காதல் பற்றி கேட்டால், ”இன்னும் விழவில்லையே… விழுந்ததும் கருத்து சொல்கிறேன்” என்கிறார்.

Tags: , , , ,

Vijayakanth, Vikraman pair

vijaykanth1.jpg

இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜயகாந்த். இதற்கு தற்போதைக்கு ‘மரியாதை’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கும் என்கிறார்கள்.

Tags: , , , , ,

Good time for Jay

ajay.jpg

சுப்ரமணியபுரம் வெற்றி ஜெய்யை வெற்றி நாயகர்கள் வரிசையில் நிற்கவைத்திருக்கிறது. மளமளவென்று வளரும் இவரிடம் கைவசம் நான்கைந்து திரைப்படங்கள். தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுக்கவும் தயார். தற்போதைக்கு எழுபது லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம் ஜெய்.

Tags: , , , ,

Aiwariya rai doing trouble in Endhiran shooting

aishwarya-rai.jpg

ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. நாயகன், வில்லன் இரண்டுமே ரஜினிதான். ஆனால் கதாநாயகியான ஐஸ்வர்யா ராயின் அலப்பரைதான் தாங்கமுடியவில்லை என்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்களே அதிரும் வகையில் பந்தா காட்டிவருகிறாராம் ஐஸ். ‘எந்திரன்’ ஜோடி என்றால் மற்றவர்கள் எல்லாம் இவர் முன் ‘எந்திரி’ தான் போலிருக்கிறது.

Tags: , , , , , ,

Gayathri raghuram doing well as dance master

gayathri.jpg

நடிகையாக மிளிரமுடியாத காயத்ரி ரகுராம், டான்சில் அடிபின்னுவார். திருமணமானதும் தமிழ்த் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அசத்தி வருகிறார். விக்ரம் நடிக்கும் கந்தசாமி, எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் நியூட்டனின் மூன்றாம் விதி, பஞ்சாமிர்தம் திரைப்படங்களின் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி தான்.

Tags: , , , , , , , , ,
Page 1 of 2212345»...Last »