Friday 4 July 2008
உங்கள் உணவுக் கொள்கை என்ன?
என்ன லேனா, கே.டி.எஸ்.ஸின் தலைப்புக்குள் நுழைந்து இரகளை செய்யப் பார்க்கிறீர்கள் என்கிறீர்களா? அதெல்லாம் இல்லை.
இதிலும் நம் மனநிலை பற்றிய அலசலைப் பற்றி மட்டுமே தொடப் போகிறேன்.
Attitude is alittude என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வாழ்க்கைப் பார்வைதான் நம் தொடப்போகும் உயரத்தை (வளர்ச்சியை) நிர்ணயிக்கும் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். நம் உடல்நலம் என்பது மருத்துவர்களாலோ மருந்துகளாலோ நிர்ணயிக்கப்படுவதைவிட, நம்மால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே உண்மை.
தாமாக வந்து தொலைக்கும் வியாதிகளும், பரம்பரை வியாதிகளின் கோரப் பிடிகளைக் கூட நம் உணவுக் கொள்கையால், உடல்பழக்கத்தால் விரட்டி அடிக்கவோ, ‘லஷ்மணக்கோடு’ போல் வரையறை வகுத்து, ஊம்! இதற்கு அப்பால் நில் என்று கிட்டத்தட்ட உத்தரவே இடமுடியும்.
நமக்கு ஆகாத உணவு வகைகளை முதலில் விஷமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். என்னுள் நுழைந்து கலாட்டாவா செய்யப் பார்க்கிறாய்? என்னைப் பொறுத்தவரை நீ குப்பைத் தொட்டி சமாசாரம். உன் புகலிடம் என் வயிறல்ல என்கிற தயார் வசனம், நமக்கு ஆகாத உணவுப்பொருளைப் பார்த்ததுமே நமக்கு வரவேண்டும்.
மனக்கட்டுப்பாடுதான் நமக்கான முதல் முதலுதவிச் சிகிச்சை.
நாம் பணத்தைத்தான் மூலதனம் என்கிறோம். அல்ல, உடல்நலமே நம் மூலதனம்.
”இலையில்/தட்டில் வச்சிட்டாங்க எப்படி வீணாக்குகிறது?” என்று வழித்துத் துடைத்து உள்ளே தள்ளுவது தவறான உணவுக்கொள்கை. அரைவயிறு உணவு. கால் வயிறு தண்ணீர்; கால் வயிறு காலி. இது இனி நம் உணவுக் கொள்கையாகட்டும்.
இரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இருதயநோய் போன்றவை ஒருவருக்கு வராதபோதும், இவை வந்துவிட்டவர் எப்படி உண்பாரோ அப்படி உண்டு பாருங்கள். இவ்வியாதிகள் எப்படி வரும் என்று அதையும் பார்த்துவிடுவோம்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?











































July 5th, 2008 at 9:18 am
Applauses to these lines:
இரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இருதயநோய் போன்றவை ஒருவருக்கு வராதபோதும், இவை வந்துவிட்டவர் எப்படி உண்பாரோ அப்படி உண்டு பாருங்கள். இவ்வியாதிகள் எப்படி வரும் என்று அதையும் பார்த்துவிடுவோம்.