Thursday 26 June 2008
ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
மருத்துவர் ராமதாசின் அரசியல் அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாகி வருகிறார் என்பது தெளிவு.
நாமாக வெளியேறினால் மக்கள் மத்தியில் விமரிசனம் விபரீதமாக எழும். அது நமக்கெதிராகவும் திரும்பும் என்று கணித்தார்.
தி.மு.க. ஆட்சியை இவர் விமரிசித்த விதம் சற்று கடினமானவை என்றாலும் இவற்றுள் சில ஆக்கபூர்வமானவை என்பதை மறுப்பதற்கில்லை. மதுக்கடையை மூடுங்கள். மாற்று வருமானத்திற்கு வழி சொல்கிறேன் என்றார். தி.மு.க. தலைமை காது கொடுத்துக் கேட்டதாகத் தெரியவில்லை. இது தவிர, ராமதாஸ் பல உருப்படியான யோசனைகளையும் திட்டங்களையும் வைத்திருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
விமரிசனங்களை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளும் அணுகுமுறையை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நடத்தும் கலைஞருக்கா எவரும் சொல்லித் தரவேண்டும்? ஏன் ஒரு கூட்டணிக் கட்சியின் அணுகுமுறையைச் சிவந்த விழிகளுடன் பார்க்க வேண்டும்?
ராமதாசின் இயல்பு தெரியாமலா அவருடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டது தி.மு.க. தலைமை?
அழகுறக் கோபத்தை ஏற்படுத்தி, தம் கட்சியை வெளியேற்ற வைத்துவிட்டார் ராமதாஸ். ”நானா மறுபக்கம் சாய்ந்தேன்? நீங்கள்தானே தூக்கி எறிந்தீர்கள்?” என்று வருங்கால அரசியல் மேடைகளில் வீரவசனம் பேச தி.மு.க. நன்கு களம் தந்துவிட்டது. இது ஒரு பின்னடைவான செயல்தான்.
கருணாநிதி ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. ஆனால் முக்கியக் கட்டங்களில் உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுத்திருக்கிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராக வளர்த்த பெருமையில் கருணாநிதியின் பங்கு நிறைய.
ராமதாஸை வெளியேற்றியது தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்பிப் போகும் முடிவு என்பதை வரப்போகும் தேர்தல் உணர்த்தும் என்பது என் தனிப்பட்ட கணிப்பு.
தி.மு.க. முறைப்படி இயங்கும் ஒரு ஜனநாயக அமைப்பு போலத் தோன்றினாலும் கருணாநிதியின் கருத்தை மீறி எவரும் எதுவும் சொல்லிவிட முடியாது.
உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி பாட்டாளி மக்கள் கட்சியை நீக்குவதாக எடுத்த முடிவெல்லாம் வெறும் சம்பிரதாயமான விஷயம்தான்.
ராமதாஸை அணைத்து ஜெயலலிதாவைத் தொடர்ந்து அரசியலில் தனிமைப்படுத்தியிருந்தால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் முடிவை இப்போதே கூட ஊகிக்க முடிந்திருக்கும்.
ஒரு கட்சியைக் கூட்டணியிலிருந்து தூக்கி வெளியில் போட ஒரு நாளிதழில் முக்கால் பக்கம் வரை காரணங்கள் சொல்ல முடிந்திருக்கிறது தி.மு.க.வால்.
ஆனால் அரசியலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிகக் காரணங்களோ நியாயப்படுத்தல்களோ அவசியமில்லை.
ஆனாலும் உயர்நிலை செயல் திட்டக் குழு இப்படிக் காது கிழிய ஜால்ரா தட்டியிருக்க வேண்டாம்.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?










































June 27th, 2008 at 11:31 pm
Titlle: “ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!” itself sounds to be a kavithai.
But unable to accept view points. So do you intend to say government and power is more important than policies? Ramadoss was going agains satellite city, which is a very successful concept in all well-developed countries.
Ramadoss putting brakes on the policies DMK was trying to implement.
July 1st, 2008 at 11:42 pm
iyya,
thangalin karuthai 100 sadavigitham amothikiren.karunanithi eduthathu oru arasiyal tharkolaiku samamanathu… maruthyvarukku sadagamanadu…adutha sattamandra electionil sanakiyarukku miga periya sarukkal earpattu marauthavarin dayavayum, vijayaganth dayavyum eadirparkavediya suzhnilai earpadum..adutha atchi tamizhagathil kuttani atchithan..atharkana munnottamthan ippodu nadakkum sirupanmai atchi…nanri..
October 10th, 2008 at 9:58 pm
DMK has did mistake in this regard and its true and is acceptable by most.