Thursday 26 June 2008

2008/06/27 Lena Katturai

lena.jpgஅரியாசனம் எதற்கு?
சரியாசனம் இருக்கு!

”எவ்வளவு பெரிய பணக்காரரு அவரு! நம்மை மதிச்சுப் பேசணும்னு என்ன கட்டாயம் அவருக்கு?”

”எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும் நின்னு மதிச்சு நாலு வார்த்தை பேசாம போகமாட்டாரு. முதலாளி மாதிரியா பழகுறாரு? தோளில் கைபோட்டுப் பேசாத குறைதான். குரலில் கூட முதலாளி தோரணையே இருக்காது. இதைச் செய்யறியா? அதை முடிக்கறியான்னுதான் கேட்பாரே தவிர, அதட்டலே இருக்காது” என்றெல்லாம் கண்களில் வியப்பும் பெருமிதமும் பொங்கப் பேசுகிறவர்களைப் பார்க்க, நமக்கே ஒரு மாதிரியாக இருக்கும்.

கணவனிடம் ”நாதா! உங்கள் சொல்லை மீறி நான் ஒருநாளும் நடந்திருக்கிறேனா?” என்று மனைவி சொன்ன நாள்களெல்லாம் கனவுகளாகிவிட்டன. நாதாக்களெல்லாம் சாதாக்களாகிப் போனார்கள். பாவம்!

”உத்தரவு மன்னா” என்று கீழ்ப்படிகிற சேவகர்கள் எல்லாம் திரைப்படங்களோடு சரி.

ஒரு வார்த்தை இறக்கிப் பேசிவிட்டால், கோப நெடியை ஒரு சிட்டிகை உயர்த்திவிட்டால் மறுநாள் அந்த ஆள் வேலைக்கு வரமாட்டேன் என்கிறான்.

”மனுஷன் வேலை செய்வானாய்யா அவன்கிட்ட?” எனகிறான் விளக்கம் கேட்கிறவனிடம்.

பதவிக்கும், வசதிக்கும் தொடர்பு அற்ற எளிமையையே இந்த உலகம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. அப்பாவுக்கும், ஆசிரியருக்கும் அடிக்கிற உரிமை இல்லை என்பது நவீனச் சட்டம் மட்டுமல்ல, சிறுசுகளின் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பும்கூட!

”வாத்தியார் மாதிரியே பழகமாட்டாரு. வகுப்புக்கு வெளில வந்தா பிரண்டு மாதிரிதான்னு வச்சுக்கோயேன்” என்று ஆசிரியர் புராணம் பாடுகிறான் ஒரு மாணவன்.

”எங்க மிஸ் நல்ல மிஸ். ஒரு தடவை தலை பின்னிவிட்டாங்க தெரியுமா?” என்று பெருமைப்படுகிறாள் ஒரு மாணவி.

மனித உரிமைகளையும், மனித நேயங்களையும் இன்றைய ஊடகங்கள் ஏராளமாகவே சொல்லித் தருகின்றன. இதனால் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் ஏகமாய் உயர்ந்து கிடக்கின்றன.

இவற்றிக்கு ஈடு கட்டாவிட்டால் நாம் அந்தக் காலத்து மனிதர்கள்தாம்.

வசதி, தகுதி, பதவியெல்லாம் கூடுதல் செளகரியங்களே, அடிப்படைத் தேவை மனிதநேயம்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Post

Leave a Reply