Monday 23 June 2008

2008/06/24 Kamal’s Marmayogi… Pujaa on July 13?

மர்மயோகி மர்மம்!: ஜூலை 13இல் பூஜை?

தசாவதாரம் திரைப்பட வெற்றிக்குப் பிறகு மர்மயோகி திரைப்படத்திற்கான வேலைகளை மர்மமாக தொடங்கிவிட்டார் கமல் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்காக 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது.

மர்மயோகி திரைப்படத்தை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போவதாகத் தகவல்.

ஜூலை 13ஆம் தேதி மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்டமாக மர்மயோகியைத் துவக்குகிறார் கமல்.

மர்மயோகி திரைப்படத்தை முதலில் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிப்பதாகத்தான் கூறப்பட்டது. இப்போது இதன் தயாரிப்புப் பொறுப்பை சாய்மீரா ஏற்றியிருக்கிறது.

பட்ஜெட் தொகை ரூ. 100 கோடியைத் தாண்டினாலும் பரவாயில்லை என்று சாய்மீரா நிறுவனம் தலையாட்டி இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

Related Post

Leave a Reply