Saturday 21 June 2008
முதல் தாவல்… பா.ம.க.வில் இருந்து தி.மு.க.விற்கு!
சென்னை: திண்டிவனம் நகராட்சியின் தலைவரான, பா.ம.க.வைச் சேர்ந்த பூபாலன் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி உறவு முறிந்ததும் நடந்த முதல் தாவல் இது.
இதுகுறித்து பூபாலன் கூறுகையில்,
”நான் 30 வருடங்களாக தி.மு.க.வில் இருந்தவன். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதுதான் பா.ம.க. வில் இணைந்தேன். மக்களுக்கு நல்லது செய்யவே தி.மு.க.வுக்கு மீண்டும் வந்துள்ளேன். மற்றபடி, எனக்கு பா.ம.க. மீது எந்த வருத்தமும் இல்லை” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், பா.ம.க.வினர் பலரும் தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவோடு பதவியில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தி.மு.க. பக்கம் சாய்வார்கள் என்று தி.மு.க. கட்சியினரிடையே சந்தோஷக் குரல் கேட்கிறது.
பா.ம.க. தலைமையின் கோட்டையான திண்டிவனமே தி.மு.க. பக்கம் போனதில் பா.ம.க. கொஞ்சம் அப்செட்தான்.









































