Friday 20 June 2008

2008/06/20 P.M.K. meets hurdles!:Selvendiran

முட்டுக்கட்டைக்கே ஏற்பட்ட முட்டுக்கட்டை!:
பா.ம.க. பற்றி செல்வேந்திரன் கிண்டல்

திருவையாறு: எதற்கெடுத்தாலும் அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த பா.ம.க.விற்கே முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது எ‌ன்று தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் பேசினார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா திருவையாறு தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தேரடி திடலில் பொது கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

”தி.மு.க.வின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு மார்க் போட விரும்பவில்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

யாருக்கு யார் மார்க் போடுவது? டுட்டோரியல் மாணவன் வாத்தியாருக்கு மார்க் போட முடியுமா?

கூட்டணியில் இருந்து கொண்டு காடு வெட்டி குரு மத்திய அமைச்சர் ராஜா பற்றியும், தமிழக முதல்வர் பற்றியும் தரக்குறைவாக பேசுகிறார். இதை ராமதாஸ் வேடிக்கை பார்க்கிறார்.

தொழில் நகரம் துவங்க முட்டு கட்டை, விமான நிலையம் துவங்க முட்டுக் கட்டை, என எதற்கு எடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டு வந்தது பா.ம.க. இப்போது முட்டுக்கட்டைக்கே முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது.

தி.மு.க.வும், தலைவர் கருணாநிதியும் சந்திக்காத போராட்டங்கள் இல்லை. எனவே போராட்டம் என்ற பெயரில் விடுக்கும் மிரட்டல்களுக்கு தி.மு.க. அஞ்சப் போவதில்லை” என்றார்.

Related Post

Leave a Reply