 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
எம்.கண்ணன், திருச்செங்கோடு.
|
 |
இன்று நேர்மையான ஒரு கட்சி இருந்தால்?
|
 |
இந்தியாவில் அதுதான் ஒரு தீண்டத்தகாத கட்சியாக இருக்கும். தீண்டாமையை ஒழிக்காத பாவத்திற்கு நாம் ஆளாக வேண்டுமா?
|
|
 |
 |
 |
 |
வி.லோகேந்திரன், சிவகாசி.
|
 |
வானத்தைவிட விரிந்தது?
|
 |
நம் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள். அவற்றில் கிழக்கு மேற்கே தெரியாது. வானத்திலாவது அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.
|
|
 |
 |
 |
 |
பி.விஜயகுமார், பொன்னேரி.
|
 |
குன்னக்குடி உடல்நலம் குன்றியது பற்றி?
|
 |
தேறி வருகிறார். இந்த இசை மேதை நீண்ட நெடிய நாள் நலமோடு வாழ்ந்து, வயலின் உலகை மேலும் வளப்படுத்த வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருதய பாதிப்புக்கு உள்ளான இயக்குநர் கே.பாலசந்தர் இன்றும் இளைஞராய் வலம் வருவதைப் போல் குன்னக்குடியும் செமர்த்தியாக இரண்டாவது இன்னிங்ஸ் போட வேண்டும். குன்னக்குடி தமிழகத்திற்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்து!
|
|
 |
 |
 |
 |
என்.பிரபாகர், பெருங்குடி.
|
 |
ஜெயலலிதா-ராமதாஸ் கூட்டு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
|
 |
காங்கிரஸ் மீது ஏற்படக் கூடிய அதிருப்தி வரும் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் கையை உயர்த்தும் என்று ஜெயலலிதாவும் ராமதாஸும் கணக்குப் போடுகிறார்கள். ஜெயலலிதா - பாரதிய ஜனதா - பா.ம.க. கூட்டணி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தால் அது வெற்றிக் கூட்டணியாகும் என ராமதாஸும் கணக்குப் போடுகிறார். தி.மு.க. ஆட்சியைச் சாடும் ராமதாஸ் ஜெயலலிதா கலந்துகொள்ளும் அதே திருமணத்தில் கலந்து கொள்கிறார். தேநீர் விருந்துகள் மட்டுமல்ல, திருமண விருந்துகளும்கூட இன்று அரசியல் போக்கை மாற்றியமைக்க வல்லவை. ஆனால் புரியாத புதிர் ஒன்றுதான். எப்போதும் தம் கட்சி ஆளுங்கட்சியோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக ராமதாஸ் இவ்வளவு இறங்கிப்போவது அவசியமா? ஜெயலலிதா இவருக்கு அளித்த ‘மரியாதை’யெல்லாம் அதற்குள்ளாகவா மறந்து போனது?
|
|
 |
 |
என்.சங்கரன், கோவை.
|
 |
தி.மு.க.வை எதிர்க்காமல் பா.ம.க. கட்சி நடத்த முடியாதா?
|
 |
அவர்களால் அது முடியாது. வேண்டுமானால் தி.மு.க.வை எதிர்த்துவிட்டு பா.ம.க.வை நடத்தாமல் கூட விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது.
|
|
 |
 |
ஆர்.ராஜகோபால், வந்தவாசி.
|
 |
பக்கத்து வீட்டுக் காரரோடு சண்டை வந்தால் என்ன செய்வீர்கள்?
|
 |
ஒகேனக்கல்லில் தமிழகம் விட்டுக் கொடுத்த மாதிரி, இரு வீட்டு நலனுக்காக எனது உரிமைகளை விட்டுக் கொடுப்பேன். தோல்வியில் என்னை மாதிரி யார் முண்டாசு தட்டுவார்கள்?
|
|
 |
 |
 |
 |
டி.சந்திரன், செங்குன்றம்.
|
 |
ஒரு எழுத்தாளனாக என்ன தகுதி வேண்டும்?
|
 |
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எழுத ஆரம்பியுங்கள். பிறகு வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு எழுத ஆரம்பியுங்கள்.
|
|
 |
 |
 |
 |
ஆர்.ரவி, பாண்டிச்சேரி.
|
 |
அணு ஆயுத ஒப்பந்தம் என்ன ஆச்சு?
|
 |
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியச் சேனல்களிலேயே யாரும் கேட்காதபோது, கம்யூனிஸ்டுகளே கண்டு கொள்ளாததை நீங்கள் ஏன் கண்டு கொள்கிறீர்கள்? ஏதும் போட்டித் தேர்வா?
|
|
 |
 |
 |
 |
எம்.மணிகண்டன், சென்னை-37.
|
 |
கத்தரி வெயிலுக்கு எங்கே தப்பித்தீர்கள்?
|
 |
அனைத்தும் என் தலையில்தான். கத்திரி வெயில் முடிந்தும் அறிவிக்கப்படாமல் தொடர்ந்த கத்திரி வெயிலின்போது அரிமாப் பயிற்சிக்கூட்டம் ஒன்றிற்காகக் கொடைக்கானலில் இரு தினங்கள் முகாம். அடாஅடா! கோடைக்காலம் மட்டும் கொடைக்கானல்வாசிகள் கொடுத்து வைத்தவர்கள் என்பேன். மிக இதமான குளிர். ஆனால் சுற்றுலாவாசிகள் குவிந்து வருமானத்தை அள்ளித் தருகிற ஓர் ஊர் இப்படியா பாராமுகமாய் இருப்பது? குப்பையும், சாலை மீது ஓடும் சாக்கடைகளும், அசுத்தக் குவியலும், மோசமான சாலைகளுமாய் வெளிநாட்டு, வெளிமாநில மக்கள் மத்தியில் ஒரு தமிழ்நாட்டுக்காரனாய் இருந்து தலைகுனிகிறேன். வெட்கக்கேடான ஊராட்சி நிர்வாகம்! மானம் போகிறது போங்கள்!
|
|
 |
 |
 |
 |
எஸ்.பூபதி, காஞ்சிபுரம்.
|
 |
இனம் இனத்தோடு சேரும்; பணம் பணத்தோடு சேரும் என்பது உண்மையா?
|
 |
இது தெரியாது. ஆனால் ஒரு டெண்டர் என்று வந்தால், அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளோடு சேருகிறார்கள். அது மட்டும் தெரியும்.
|
|
 |
 |
 |
 |
ஏ.ஜான்பீட்டர், நாகர்கோவில்.
|
 |
‘சுற்றுலா நண்பர்’ என்ற பெயரில் சென்னையில் ஆட்டோ சர்வீஸ்கள் தொடங்கப்பட்டுள்ளது பற்றி?
|
 |
இந்த ஆட்டோக்களில் மீட்டர் கட்டணமே வசூலிப்பார்களாம்! வருகிற பயணிகளிடம் ஓட்டுகிறவர்களும் அன்பாக நடந்துகொள்வார்களாம்! இது கனவா, கற்பனையா? தலைச்சுற்றல் வருகிறது. என் தலை சுற்றி நிற்பதற்குள் சென்னையை நான் ஒருமுறை சுற்றிப் பார்க்க வேண்டும்!
|
|
 |
 |
 |
 |
ஜே.வினோத், திருமங்கலம்.
|
 |
ஆண்களின் நட்பு - பெண்களின் நட்பு வித்தியாசம்?
|
 |
ஆண்களின் நட்பு ஆழியும் அலையும் போன்றது. பிரிவில்லாதது. பெண்களின் நட்பு நீர்க்குமிழி போன்றது, நிலையில்லாதது.
|
|
 |
 |
 |
 |
சி.எஸ்.ஏ., சென்னை-118.
|
 |
பெட்ரோல் டீசல் விலையேற்றம் அறிவிக்கப்பட இருந்த அன்று, இரண்டும் இல்லை என்று நாடகமாடிய பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் சாகசஸத்தைக் கவனித்தீர்களா?
|
 |
ஒவ்வொரு லிட்டர் விற்பனையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. அரசு விலையை இதற்குமேல் உயர்த்த விடமாட்டோம் என்கிறது. தனியார் என்பதால் ரிலையன்ஸை நிரந்தரமாக மூடிவிட்டார்கள் பார்த்தீர்களா? மூடி வைத்த சில மணி நேரங்கள் மறைமுக இலாபம் என்கிற நிலை. இப்படி நஷ்டமாகும் தொகையை அரசு எப்போதோ(?) தருமாம். மேலும் எண்ணெய்ப் பீப்பாய்களை வாங்கக் கூடக் காசு இல்லாமல் எத்தனை நிறுவனங்கள் மூடப்பட இருக்கின்றனவோ தெரியவில்லை.
|
|
 |
 |
 |
 |
ஆர்.பாலாஜி, ஓசூர்.
|
 |
தமிழகம் விளையாட்டில் வேறு எந்தப் பிரிவில் ஒளிவிடப் போகிறது?
|
 |
நீச்சல் துறையில் அக்னீஸ்வரும் ஐஸ்வர்யாவும் உலகத் தரத்திற்கு ஒப்பிடப்படுகிறார்கள். இந்த இருவரையும் ஊக்குவித்து, அரசே தத்து எடுத்து, அனைத்துச் செலவினங்களையும் ஏற்று, மிகப் பெரிய பயிற்சியாளர்களிடம் ஒப்படைத்தால் தமிழகத்திற்கு மிகப் பெரிய பெருமைகளைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று படுகிறது!
|
|
 |
 |
ஏ.ஸ்ரீநிவாஸன், திருச்சி-5.
|
 |
டீசல் விலை உயர்வினால் இரயில்வேக்கு 600 கோடி நஷ்டம் என்றாலும் கட்டணம் உயராது என்று அறிவித்த லாலு நம் நெஞ்சைக் கவர்கிறாரே?
|
 |
உண்மை. இலாபத்தில்தான் நஷ்டம் என்பதால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறார். காங்கிரஸ் கூட்டணி மீது மக்களுக்கு உள்ள கோபத்தைத் தன் பங்கிற்கு வேறு அதிகரிக்க வேண்டாம் என்று பார்க்கிறார்.
|
|
 |
 |
ஜே.முருகன், கூடுவாஞ்சேரி.
|
 |
டிராபிக் ராமசாமியைப் படுத்துகிறார்களே?
|
 |
சமூக அக்கறையோடு செயல்படுவதற்கு ஓர் எல்லை இருக்கிறது. இந்த லஷ்மணக்கோடு என்ன என்பதைக் காவல்துறையும் நீதித்துறையும் வரைந்து காட்டியிருக்கின்றன.
|
|
 |
 |
எம்.காசிநாதன், சென்னை.
|
 |
பணவீக்கம் என்றால் என்ன? பணவீக்கம் தீர என்ன வழி?
|
 |
பணவீக்கம் தீர வழியா? மேதாவிகளே திணறுகிறார்கள். என்னை விட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் எனக்கு வரும் மண்டை வீக்கம். 100 ரூபாய்ப் பொருள் 108 ரூபாய்க்கு விற்கப்பட்டால் இதுதான் 8 புள்ளி பணவீக்கம்.
|
|
 |
 |
 |
 |
எம்.ஜமுனா, திருத்தணி.
|
 |
குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டிலின் செயல்பாடுகள் எப்படி?
|
 |
இவரது குடும்பத்தினர் குடியரசுத் தலைவர் மாளிகையில் எளிமை காட்டவில்லை என்று சிலர் வெளியிடும் மனக்குறை; இவர் பேசும் பேச்சுகள் படு சம்பிரதாயமாக பள்ளிக்கூடக் கட்டுரைபோல இருப்பது; கடைசியாகத் தேவையின்றி ஒரு கண்காட்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்துக் குறி பார்த்தது ஆகியவை இமேஜை உயர்த்துபவையா? சொல்லுங்கள்!
|
|
 |
 |
எம்.கண்ணன், ஊத்துக்கோட்டை.
|
 |
பொறியியல் கல்லூரிக் கட்டணமாக பாலசுப்ரமணியம் குழு நிர்ணயித்த தொகையான, ரூ.62,500 என்பது அதிகம்தானே?
|
 |
தனியார் கல்லூரிகளின் எதிர்பார்ப்பு ரூ.70,000மும் அதற்கு மேலும், ரூ.7,500 குறைத்துப் பெறத் தனியார் கல்லூரிக் கூட்டமைப்பு ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தனியார் கல்லூரிகளுக்குத் தன்னிச்சையாகச் செயல்பட நிறைய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் இதற்கும் கீழே போனால் சிக்கலாகிவிடும். ஆனால் வசதியும் இல்லாத, சிறந்த மதிப்பெண்களும் எடுக்க இயலாத மாணவ மாணவிகளின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பகுதிக் கட்டணத்தை அரசே கூடச் செலுத்துவதுதான் வேறு மாற்றுவழி இல்லாத தீர்வாக இருக்க முடியும். அரசுக்கு இது அப்படி ஒன்றும் கையைக் கடிக்கிற செலவல்ல!
|
|
 |
 |
 |
 |
ஆர்.மகேஷ், ஆழ்வார்த்திருநகர்.
|
 |
குருவி படம் எப்படி?
|
 |
காதில் பூச்சுற்றும் படங்களை நான் பார்ப்பது இல்லை. படம் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மஞ்சள்பூசும் வானம் ஒன்று பார்த்தேன் என்ற ஒரு பாடல் வரி வருகிறது என்றால் மஞ்சள் வானம் சாமானியத்தில் கிடைக்கவில்லை என்றால் கிராபிக்ஸைப் பயன்படுத்தட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் குருவியில் விஜய் பறந்து பறந்துதான் அடிக்கிறாராமே! அதுவும் பலப்பல அடிகள் பறக்கிறாராமே! விஜய் ரசிகரே அலுத்துக் கொண்டார், ஒன்றும் நம்பும்படி இல்லை என்று. திரைப்படக் கலை என்பதே மிதமிஞ்சிய மிகைப் படுத்தல்தான்… ஏற்கிறேன். அதற்காக இப்படியா?
|
|
 |
|
|
June 21st, 2008 at 6:50 am
Whats wrong with Lena? Is he answering for fun. How could he say that gals frienship is like a bubble & guys as ocean. That BS
June 23rd, 2008 at 11:10 am
How is Dasavatharam Mr Lena Avargale.. We have here house full show in a week day.. THat’s very unusal in a weekday in Madison, WI..
Nandri