Thursday 12 June 2008

2008/06/13 Lenavin Parvayil

petrol.jpgமண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுகள் பற்றிய எதிர்ப்புக் குரல்கள் இன்னமும் அடங்கியபாடில்லை. சில அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். கூடவே இருந்துகொண்டு ஒரு கூட்டம் எதிர்க்கிறதாம். எதிர்அணியினரோ இந்த விலை உயர்வைத் தங்களது ஓட்டு வங்கிக்குச் சாதகமாகத் திருப்பும் வெற்றிகரமான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவர்களை விட்டுத்தள்ளுங்கள். காரணம் அரசியல்வாதிகளின் ஒவ்வோர் அசைவிலும் மக்கள் நலனைவிடக் கட்சி நலனுக்கே முக்கியத்துவம் அதிகம். வெளியில் பார்க்க அப்படித் தெரியாது. ஆனால் ஸ்கேன் செய்து பார்த்தால் உண்மை விளங்கும். நம் அக்கறையெல்லாம் இதனால் நேரிடையாகப் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றித்தான்.

சராசரிக் குடும்பங்கள் கேஸ் விலை உயர்வைக் சமாளிக்கப் போராடவேண்டிய நிலை. செலவினங்கள் உயர்ந்து வருமானங்கள் கழுத்து நெரிக்கப்படும் நிலையில் என்ன செய்வார்கள் பாவம்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள் சராசரி மனிதர்களையும் தாண்டி, இந்தச் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் பாக்கெட்டுகளையும் துழாவிப் பார்த்து அள்ளிவிடும் ஆற்றல் பெற்றவை.

இந்த எண்ணெய்க்குப் பலரது பர்ஸ்களைத் தீக்கிரையாக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியினர் மீது கோபம் கொள்வதில் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் அறிந்த வரை கிட்டத்தட்ட 400 சதவிகித பெட்ரோல் விலை உயர்வை இன்றைய ஆளுங்கட்சி சந்தித்துவிட்டது. ஆமாம் 35 டாலர் இருந்த பீப்பாய் 129 டாலராகிவிட்டது. ஆளும் மத்தியஅரசிடம் பணம் கொட்டியா கிடக்கிறது? இல்லையே!

அரசியல் உள்நோக்கமோ மக்கள் மீதான அக்கறையோ… அண்மை விலை உயர்வு 10 சதவிகிதம்தான்.

பீப்பாய் விலை உயர்வினால் மத்திய அரசிற்கு 2,45,000 கோடி ரூபாய் பொருளாதாரச் சுமை ஏற்பட்டிருக்கிறது. 100 சதவிகிதச் சுமையில் 91.4 சதவிகிதத்தை அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 8.6 சதவிகிதத்தை மக்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறது. இதைக்கூட மக்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் நாம் எப்படி உண்மையான மண்ணின் மைந்தர்களாக முடியும்?

எண்ணெய் நாடுகள் நமக்கெதிராகத் தொடுத்திருக்கும் மறைமுகப் போரில் கட்சிக் கோணங்களை மறந்துவிட்டு மத்திய அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும்.

தேசம் எப்படியோ போகட்டும்; என் பர்ஸ்தான் முக்கியம் என்று எண்ணுகிறவர்கள் நல்ல குடிமக்களுக்கு முன்னுதாரணமாக மாட்டார்கள்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு! 

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்! 

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04  அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Post

Leave a Reply