 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
கே.முருகானந்தம், திருவேற்காடு
|
 |
மனிதன் எப்போது பிரச்னையில்லாமல் இருப்பான்?
|
 |
அவனது வாழ்க்கைப் பாதை, தரமணியில் உள்ள ஐ.டி.காரிடர் சாலை மாதிரி இருந்தால், பயணம் சுகமாக இருக்கும். ஆனால், சுவாரசியமாக இருக்காது. தடையில்லா பயணம், மடையில்லா ஆறு!
|
|
 |
 |
 |
 |
அ.கண்ணன், சென்னை-72.
|
 |
ராகுல் காங்கிரஸில் தேறி விடுவாரா?
|
 |
உணவு சரியாக இருந்தால் எந்தக் குழந்தையும் கொழுகொழுதான்! காங்கிரசில்தான் ஊட்டச் சத்துக்குறைவு இல்லையே! சுதந்திரம் பெற்றதிலிருந்தே இந்திய கஜானாக்கள் அதன் வசம்தானே உள்ளன. அம்மா மாதிரி இவர் விசாக்காரர் இல்லை. உள்ளூரிலேயே மணியக்காரரிடம் பிறப்புச் சான்றிதழ் வாங்கியவர். எனவே தேறிவிடுவார்.
|
|
 |
 |
 |
 |
டி.ராஜ், முசிறி.
|
 |
விளம்பரங்களுக்கும் சென்சார் வரப்போவது குறித்து?
|
 |
ஆண் அணிந்திருக்கும் உள்ளாடையில் அழகைப்பார்த்து ஒரு பெண் கதவைச் சாத்தும் அசிங்க விளம்பரத்தைப் பார்த்தபோது நெஞ்சு பதறியது. அட, பாவம் செய்த இந்தியர்களே, நாடு கடந்த இந்தக் கலாச்சார சீர்கேட்டைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே நீங்கள்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.தர்மாம்பாள், வேலூர்.
|
 |
கத்திப்பாரா சந்திப்புப் பாலத்திற்கு நேருவின் பெயர்தானே பொருத்தம்?
|
 |
நேருவுக்கு நாடு முழுக்க நிறையப் பெருமைகள் சேர்த்துவிட்டோம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் பெயரை வைத்தால் நல்லது என்று சிபாரிசு செய்யத் தோன்றுகிறது.
|
|
 |
 |
 |
 |
எல்.புருஷோத்தமன், சிவகங்கை.
|
 |
புதுக்கோட்டை-சிவகங்கை அகல இரயில்பாதை தள்ளிப் போகிறதே?
|
 |
தாமதம் என்பது இரயில்வே துறையின் குத்தகை. எதுவும் நேரத்திற்கு நடந்தால் அது இரயில்வே துறையே அல்ல!
|
|
 |
 |
 |
 |
எஸ்.ரவி, தஞ்சை.
|
 |
உங்களுக்கு எந்த மாதிரி பெண்களைக் கண்டால் பிடிக்காது?
|
 |
ருத்ரதாண்டவம் என்பது ஆண்வர்க்கமான சிவனுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண் வர்க்கமான இந்த சக்திகளுக்குக் கிடையாதா என்று சொந்தம் கொண்டாடுகிறார்களே, அந்த மாதிரிப் பெண்களைக் கண்டால்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.பாலாஜி, கும்பகோணம்.
|
 |
கல்லூரிக் கல்விக்குப் போனதும் பலரது கல்வி ஆர்வம் குறைவது ஏன்?
|
 |
பள்ளிக் கல்வியில் ஒரு பாடத்தில் தோற்றாலும் அதே வகுப்பில் பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். கல்லூரிக் கல்வியில் மொத்தமாய்த் தோற்றாலும் அரியர்ஸுக்குச் ‘சியர்ஸ்’ சொல்லிவிட்டு அடுத்த வகுப்பிற்குப் போகலாம் என்கிற நினைப்புதான்.
|
|
 |
 |
 |
 |
ஏ.திருமலை, கல்பாக்கம்.
|
 |
கடலூரில் மின்நிலையம் அமைப்பதைத் தடுப்போம் என்ற ராமதாஸின் புதிய அஸ்திரம் பற்றி?
|
 |
இவரது அம்பறாத் தூணியில் எத்தனை அம்புகள் மிச்சம் இருக்கிறது என்று யாராவது எண்ணினால் கூடத் தேவலை.
|
|
 |
 |
 |
 |
டி.ஜாபர்ஹீசேன், சென்னை.
|
 |
சென்னை மெரீனாவில் காதலர்களுக்கு ஏகக் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறதே காவல்துறை?
|
 |
காதலர்களா இவர்கள்? காமுகர்களால் வந்த வினை இது?
|
|
 |
 |
 |
 |
ஜே.வினோத், மீஞ்சூர்.
|
 |
திரையுலக ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு இனி அரசியலில் தீவிரம் காட்டப்போகிறேன் என்று சொல்லியிருக்கும் விஜய டி.ராஜேந்தரைப் பற்றி?
|
 |
எல்லோரும் சேர்ந்து அரசியலை நீர் மோராக்கி அதைத் தண்ணீர்ப் பந்தலுக்கே கொண்டு வந்து விட்டார்கள். இனி யார் வேண்டுமானாலும் அதைப் பருகலாம்.
|
|
 |
 |
 |
 |
ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.
|
 |
சிம்புதேவன் தொடர்ந்து காமெடி படங்களை மட்டுமே தருவாராமே?
|
 |
சிம்புதேவனின் நகைச்சுவை பாதிக்கிணறு தாண்டிய கதைதான். நல்ல களங்களை உருவாக்குகிறார். நகைச்சுவைக்கு அதிக வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன் என்கிறார். குலுங்கக் குலுங்கக் சிரிக்க வைக்கும் படங்களைத் தரும்வரை இந்த சிம்புதேவனை நாம் விடக்கூடாது.
|
|
 |
 |
 |
 |
ஏ.செந்தமிழ்ச்செல்வன், புதுச்சேரி.
|
 |
கலைஞரின் புதிய திரைப்படைப்பான ‘உளியின் ஓசை’ எப்படி இருக்கும்?
|
 |
கலைஞரின் வசனத்திற்காக ஓடிய காலங்கள் கடந்துபோய்விட்டன. கலைஞர் அண்மைக்காலமாகப் பெருவெற்றியைக் குவித்த கலைப் படைப்பு ஒன்றையும் தரவில்லை. உளியின் ஓசை இதற்கு நல்ல விதிவிலக்காகட்டும். என் வியப்பெல்லாம் ‘ஏம்பா கடிதம் போடலை?’ என்று கேட்டால் எங்கே நேரமிருக்கு எனக்கு? நான் படுபிஸி’ என்று சொல்லிக் கொண்டிருக்கிற இந்தப் பரபரப்பு உலகில் இந்தப் பெரியவருக்கு மாநில நிர்வாகத்தையும் பார்த்து, அத்துணைத் தலைவலிகளையும் சந்தித்து, முரசொலிக்குத் தவறாமல் எழுதி, பிறகெப்படிக் கதைவசனம் எழுத முடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
|
|
 |
 |
 |
 |
எல்.பெரிச்சியப்பன், கோயமுத்தூர்-2.
|
 |
நடிகர் கார்த்திக் தம் கட்சித் தலைமைப் பதவியை இராஜினாமா செய்ததாகச் சொல்கிறார். கட்சிப் பொறுப்பாளரோ நீக்கப்பட்டதாகச் சொல்கிறார். எது உண்மை?
|
 |
இதில் கேள்விக்கே இடமில்லை. கட்சிப் பொறுப்பாளர் சொல்வதுதான் சரி. நடிகர் ஒரு நல்ல பதவியில் அமர்ந்து நாயகன் பாணியில் செயல்படாமல் காமெடியன் பாணியில் செயல்பட்டதை நாடறியும். சரத்குமாருடன் இணைவார் என்றும் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும் பேச்சு அடிபடுகிறது. தமிழகம் இன்னும் என்னென்ன சோதனைகளை அனுபவிக்கப் போகிறதோ தெரியவில்லை.
|
|
 |
 |
 |
 |
வி.ராஜாராமன், பல்லடம்.
|
 |
நீங்கள் ஒரு பச்சைத் தமிழரா?
|
 |
கறுப்புத் தமிழன்!
|
|
 |
 |
 |
 |
எஸ்.பாலு, திருக்கழுக்குன்றம்.
|
 |
கலைஞரின் முதல் பணி?
|
 |
மருத்துவர் ராமதாசு இன்று என்ன சொல்லியிருக்கிறார் என்று படிப்பது. அதுபோல் மன்மோகனுக்குக் கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று படிப்பது.
|
|
 |
 |
 |
 |
ஆர்.மகேந்திரன், சென்னை.
|
 |
எழுத்தாளர் கூட்டங்களில் வைகோ இப்போது அடிக்கடி தலை காட்டுகிறாரே?
|
 |
நினைவாற்றலில் கலைஞருக்குச் சோடை போகாதவர் வைகோ. எப்போதும் பேச்சே மூச்சு; மூச்சே பேச்சு என்று இருக்கும். இவரை இப்போதுதான் எழுத்தாளர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
|
|
 |
 |
கே.கிருஷ்ணகுமார், வேளச்சேரி.
|
 |
சென்னையில் இன்றைய நடைபாதைகள்?
|
 |
கபடி ஆடத் தெரிந்தவர்கள் மட்டுமே இதில் நடக்கலாம். கைவீசம்மா கை வீசோ, பராக்கு நடையோ இனிமேல் சென்னையில் சரிப்படாது.
|
|
 |
 |
கே.தவமணி, திருச்சி.
|
 |
இந்தியாவில் உணவுப் பஞ்சம் வரும் என்கிறார்களே?
|
 |
வரவாய்ப்பு இல்லை. வானம் பொய்க்கும்போதும் பெய்து கெடுக்கும்போதும் சிலவகைத் தானியங்களின் உற்பத்தி கெடுவது உண்டு. இதனாலெல்லாம் உணவுப் பஞ்சம் வந்து விடாது. பஞ்சாப், அரியானா கோதுமையைக் குவிக்கிறது. ஆந்திரம் அரிசியைக் குவிக்கிறது. தமிழக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும் சவுக்குத் தோப்புகளாகவும் ஆவதை வைத்து வீண் கற்பனை தேவையில்லை.
|
|
 |
 |
பா.ராஜேந்திரன், தூத்துக்குடி.
|
 |
அவசியமானால் நக்ஸலைட்டாக மாறுவேன் என்று பாராளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் அப்பாதுரை பேசியிருப்பது பற்றி?
|
 |
உணர்ச்சிப் பூர்வமான பேச்சு கம்யூனிஸ்டுகளுக்குப் புதியதல்ல. ஆனால் நக்ஸலாக மாறினால் என்ன சாதிக்க முடியும் என்பது கேள்வி. நக்ஸல்கள் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எண்ணிக் கொண்டு அரசு இயந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டு அதன் செயல்பாடுகளைக் குலைத்ததுதான் மிச்சம். நக்ஸல்கள் ஒரு சாதனையையும் நிகழ்த்தியதில்லை என்பதை அப்பாதுரையார் உணர்வது நல்லது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.தியாகராஜன், சாத்தான்குளம்.
|
 |
கருத்துக்கணிப்பில் தேவேகவுடாவுக்கு நம்பிக்கையில்லையாமே?
|
 |
கருத்துக் கணிப்புகள் தேவேகவுடாவுக்குச் சாதகமாக இல்லாததால் இப்படிச் சொல்கிறார் என ஊகிக்க இடமுண்டு. யார் ஜெயித்தாலும் பரவாயில்லை. அரசியலின் புகழ்மிக்க சந்தர்ப்பவாதியான தேவேகவுடா ஜெயிக்கக்கூடாது. கர்நாடக மக்கள் புத்திசாலிகள். நல்ல முடிவே எடுப்பார்கள்.
|
|
 |
 |
வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.
|
 |
எழும்பூர் இரயில் நிலையத்தில் ஊனமுற்றவர்களுக்கும் முதியோருக்கும் பேட்டரி கார் அறிமுகமாகியிருப்பதைப் பார்த்தீர்களா?
|
 |
அதில் பெருமிதத்துடன் பயணம் செய்யும் முகங்களையும் பார்த்தேன். இந்தக் கார் ஓட இராஜபாட்டை தேவை. இருப்பதோ சிறிய பிளாட்பாரம். பயணிகள் முகஞ்சுளிப்பதைப் பார்த்தால் பெருமித முகங்களை விஞ்சிவிடும் போல் தெரிகிறது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.குமார், நெமிலி.
|
 |
பார்களில் பெண்களைக் காணும்போது என்ன எண்ணுவீர்கள்?
|
 |
பெண்ணுரிமை என்பது வீட்டிலும் நாட்டிலும் இருக்கலாம். ஆனால் பாட்டிலில் கூடாது. இது யாக குண்டத்தில் மண்புழுவைப் போட்ட கதை!.
|
|
 |
 |
 |
 |
என்.பரமேஸ்வரன், சென்னை-34.
|
 |
பல கணினிப் பொறியாளர்கள் வார இறுதியில் கூத்தும் கும்மாளமுமாக இருக்கிறார்களே, இது எங்கு போய் முடியும்?
|
 |
காணாததைக் கண்டதால் வரும் வம்பு இது. வெளிநாட்டுக் காசைக் சம்பாதியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. வெளிநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றாதீர்கள். அதலபாதாளம் தயாராக இருக்கிறது.
|
|
 |
 |
 |
 |
என்.குமார், நெமிலி.
|
 |
ஆலிவுட் நடிகை எலிசபெத் தனது எழுபத்தைந்தாவது வயதில் ஒன்பதாவது திருமணமாக ஒரு தொழில் அதிபரை மணக்க இருப்பது பற்றி?
|
 |
சேலையை (சாரி, கவுனை) மாற்றுவதுபோல் கணவரை மாற்றும் இவரை ஒரு பெண் என்றா சொல்கிறீர்கள்.
|
|
 |
|
|