Friday 9 May 2008
சுருக், நறுக் செய்திகள்
* சேது சமுத்திரத் திட்டம்: மாற்றுப் பாதையில் நிறைவேற்ற உச்சநீதிமன்றம் யோசனை, தொல்லியல் துறை ஆய்வு நடத்தவும் உத்தரவு.
* ஜெயலலிதா அரசால் போடப்பட்ட பொய் வழக்கு!: தா. கிருட்டிணன் கொலை வழக்கில் விடுதலையான மு.க. அழகிரி.
* உத்தபுரம் தடுப்புச் சுவர்: மலைப்பகுதியில் தங்கி இருப்பவர்களிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சு தோல்வி.
* மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி: பாம்பனில் படகு பறிமுதல்.
* திருமலையில் அனைத்து ஓட்டல்களும் விரைவில் மூடப்படும். அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம்!
* உசிலம்பட்டி அருகே தேவர் சிலை அவமதிப்பு: கடைகள் அடைப்பு, பேருந்துகள் நிறுத்தம்.
* எய்ம்ஸ் இயக்குநர் பதவி நீக்கம் ரத்து: தீர்ப்பு திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை: ராமதாஸ்.
* அட்சய திருதியை: தமிழகத்தில் 2 நாளில் 70 டன் தங்கம் விற்பனை!
* ஐ.சி.சி. கமிட்டி சேர்மன் பதவி, கவாஸ்கர் ராஜினாமா.
* தங்கக்காசு மோசடி: கைதான 7 பேருக்கு ஐந்து நாள் போலீஸ் காவல்.
* கொல்லிமலையை மேம்படுத்த ரூ.1கோடி: அமைச்சர் சுரேஷ்ராஜன் அறிவிப்பு.
* அரசு கவின் கலைக் கல்லூரியை புதுப்பிக்க ரூ.1கோடி: சுரேஷ்ராஜன்
* கர்நாடக தேர்தல்: காங்கிரசுக்கு வாக்களியுங்கள்- தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்.
* இலங்கை பிரச்னைக்கு அமைதி பேச்சு மூலமே தீர்வு: ராமதாசுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்.









































