Friday 25 April 2008

2008/04/25 Lenavin Parvayil

balu-cm.jpgமெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இவர்களுள் வசதி படைத்தவர்களை (கிரீமி லேயர்) நீக்கிவிட்டு மீதமிருப்பவர்களுக்கே சலுகைகளை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்

தீர்ப்பில்தான் முடிவிலா வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பிற்படுத்தப்பட்டோரில் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுகிறவர்களை கிரீமி லேயர் என்கிறார்கள். இவர்களுக்குச் சலுகைகள்

தேவையில்லை என்கிற உச்சநீதிமன்ற வாதம் பரிசீலிக்கத்தக்கதே! கிரீமிலேயர் என்று பிரித்துப் பார்க்காதீர்கள்; அனைவருக்கும் சலுகை வழங்குங்கள் எனறு

வாதிடுகிற கருணாநிதியும் கி.வீரமணி போன்றவர்களும் இவ்விஷயத்தில் வலுவான வாதங்களை முன்வைத்ததாகத் தெரியவில்லை.

பிற்படுத்தப்பட்ட எல்லோருக்கும் சலுகை வழங்குங்கள் என்று வாதிடுகிறவர்களுள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் ஒருவர். இவர் மட்டும் சற்றுப் புரியும்படி

பேசுகிறார்.

மாதம் 20 ஆயிரமெல்லாம் ஒரு வருமானமா? அரசின் ‘டி’ பிரிவு ஊழியர்களே இந்தச் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் இந்தச் சம்பளத்தை வைத்து நல்ல

கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி வழங்கமுடியும் என்கிற பாணியில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளுள் ஐந்து பேர்களைக்

கொண்ட குழுவே இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்பது கவனிக்கத்தக்கது.

டி.ஆர்.பாலுவின் வாதத்தை ஏற்று உச்சவரம்பை இன்னும் சற்று உயர்த்தலாமே தவிர, பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தவர்களுக்கும் சலுகை வழங்குவது

என்பது நல்ல முடிவாக இருக்க முடியாது.

என் கல்லூரிக் காலத்தில் அரசுச் சலுகை பெற்றுப் படித்த பலர் மிக வசதியானவர்கள். அவர்களுள் ஒருவர் எங்களுக்கெல்லாம் தேவையே இல்லை; ஏதோ

குடுக்குறாங்க அனுபவிக்கிறோம் என்று சொன்னது இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது. பெரிய காண்ட்ராக்டரின் மகன் இவர். வசதி படைத்தவர்களை

ஓரங்கட்டினால் வசதியற்ற பலருக்கு இச்சலுகைகள் பயன்படுமே என்கிற கோணத்தில் இதனை எதிர்க்கும் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோருக்காக இன்று வக்காலத்து வாங்கும் பலரது வாதம் அரசியல் உள்நோக்கம் உடைய ஒன்றே. ஓட்டு வங்கியைக் கவனத்தில் கொண்டே

இவர்களுள் பலர் பேசுகிறார்கள் என்பது பச்சிளங்குழந்தைக்கும் புரியும்.

மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தத் தயங்கினாலோ, மறுபரிசீலனை செய்தாலோ அதுவும் வரப்போகும் தேர்தலைக் கவனத்தில் கொண்டே

நடந்து கொள்கிறது என்று துணிந்து கூறலாம்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன்களை அடைவதில் எவருக்கும் எந்தக் கருத்து முரன்பாடும் இல்லை. ஆனால் வசதி படைத்தவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது

என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு அர்த்தமுள்ள ஒன்று. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியல் உள்நோக்கம் ஏதும் இருக்கவே முடியாதே!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்! 

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04  அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/27 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Post

Leave a Reply