Thursday, 14 Aug 2008

2008/08/15 Lenavin Parvayil

engineering-college.jpgகண் துடைப்புக் கல்லூரிகள்!

ஆகஸ்ட் பிறந்ததும் பொறியியல் கல்லூரிகளில் இன்னும் பாதி இடங்க்ள நிரப்பப்படாமல் இருப்பது பற்றிய சிந்தனையில் மூழ்கினேன்.

அரசு அறிவித்த கட்டணங்களுக்கு அப்பாற்பட்டு, புத்தகம், உபகரணம், கட்டாயப் பேருந்து, ஆய்வுக்கூடம் அது இது என்று இலட்ச ரூபாய்க்கு மேல் கட்ட வேண்டிய அவலம் பல கல்லூரிகளில் தொடர்வது இதற்கு ஒரு காரணம்.

புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு ஏகக் கிராக்கி. வழக்கமான கட்டணம் அல்லாமல் ஒரு சிகரெட் பெட்டி அளவே உள்ள துண்டுச் சீட்டின்மூலம் பல இலட்சங்கள் கைமாறுகின்றன. கொட்டிக் கொடுப்பவர்களுக்கு இது ஒரு முதலீடுதானே, பெரிய சம்பளம் வாங்கிச் சில வருடங்களிலேயே சரிக்கட்டிவிடலாம் என்கிற சமாதானம்.

இவர்களுள் எவரும் முன்வந்து உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கப் போவதில்லை. யார் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு, என் குடும்பத்திற்குச் சக்தி இருக்கிறது, கட்டுகிறேன் படிக்கிறேன். வாயைத் திறந்தால் என் சீட்டுக் கிழிந்துவிடும் என்கிற சுயநலம் இவர்களுக்கு.

கவுன்சிலிங் தொடங்கு முன்பே பிரபல கல்லூரிகள் தங்கள் இருக்கைகளில் பெரும்பான்மையை நிரப்பிவிடுகின்றன.

அகப்பட்டுக் கொண்டவை எல்லாம் புகழ்பெறாத கல்லூரிகளும் புதிய கல்லூரிகளும்தாம்.

பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கவாவது மாணவர்களின் சேர்க்கை உதவுமா என்று கூட்டல் பெருக்கல் கணக்கைப் போடும் நிலை.

அரசு கண்காணிக்க வேண்டியதெல்லாம் புகழ்மிக்க கல்லூரிகளைத்தான்.

இலஞ்ச ஒழிப்புத் துறை நாடகம் நடத்தி, திட்டம் தீட்டிச் சிலரைப் பிடிப்பதுபோல் சில பல மாணவர்களைத் தயார் செய்து களத்தில் இறக்கினால், குட்டு, வெட்ட வெளிச்சமாகிவிடும்.

இதை விட்டுவிட்டு எங்களிடம் புகார் தெரிவியுங்கள் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும் கூடுதல் இயக்ககமும் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது நல்ல வேடிக்கைதான் போங்கள்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Posts Title


Leave a Reply