Friday, 8 Aug 2008
பின் தங்க வைக்கும் மின்சாரம்
தமிழகத்தைப் பின்தங்க வைக்க வேறு எந்தத் தீயசக்திகளும் தேவையில்லை. மின்வெட்டு ஒன்று போதும்.
தென்தமிழகத்தில் நல்ல மழை பெய்ததால் அணைகளில் நீர்நிலை உயர்ந்தும், விவசாயிகள் நீர் இறைக்கும் வேலை குறைந்தும், காடம்பாறையில் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், நிலைமைகள் சீரடைந்தபாடில்லை.
மின் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் சென்னை நகரம் பலனடைந்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட ஒரு மணிநேர மின்வெட்டும் தளர்த்தப்பட்டுவிட்டது. ஆனாலும் அதிகார பூர்வமற்ற மின் தடைகள் ஆங்காங்கே ஏற்படுவதாகச் சென்னை வாசிகள் மனக்குறை தெரிவிக்கின்றனர்.
மதுரை நகர மக்களை நான் அண்மையில் சந்திக்க நேர்ந்தபோது, சின்ன அளவில் என்றில்லாது கடுமையான மின்வெட்டால் மிக அவதிப்படுவதாகக் கூறினார்கள். இது மிகைப்படுத்தல் இல்லாத உண்மை என்றே நம்புகிறேன்.
தொழிற்பேட்டைகள், பொருள் உற்பத்தியின் ஆதாரங்கள் இந்த மாநிலத்தின் அடிப்படை நரம்புகள். இவை பல மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போயிருக்கின்றன.
மழை பொய்த்துவிட்டது. எனவே நாங்கள் என்ன செய்வோம் என்று கைவிடுவது ஒரு மாநில நிர்வாகத்திற்கு அழகல்ல.
தமிழக அனல்மின் நிலையங்கள் பலவும் மிகப் பாவமான நிலையில் உள்ளன. பெரும்பாலான இயந்திரங்கள் சரியான பராமரிப்பு இல்லாதவை. சில கண்காட்சியில் வைக்கப்பட வேண்டிய அளவுக்குப் பழைமையானவை.
நீர் மின் உற்பத்தி நிலையங்களில்கூட பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்ட இயந்திரங்களே உள்ளன. இவற்றின் உற்பத்திச் சக்தி மூன்றில் ஒரு பங்குதான்; அவ்வளவு பழையவை என்றார்கள்.
வேறு வகையில் சொன்னால், மூன்று மடங்கு மழைநீர் இருப்பு இருந்தால்தான் போதுமான மின்உற்பத்தி கிடைக்கும் என்கிற நிலைமை.
இந்நிலையில் மழையை நொந்து என்ன பயன்?
தமிழக மின் இலாகாவிடம் நீண்ட காலத் திட்டங்களோ, இருக்கும் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமோ இல்லை.
மத்திய அரசுடன் நல்லிணக்கம் இருப்பதால் அது மின்சாரம் தருகிறது. அரசியல் சூழல்கள் மாறினால் தமிழகம் என்னத்திற்காவது?
நீண்ட காலத் திட்டங்களோடு ஒரு சிக்கலை அணுகாமல் ஏதோ அந்தந்த நேரத்திற்குத் தாற்காலிகத் தீர்வுகளைக் கண்டு காலந்தள்ளப் பார்க்கிறது தமிழக மின்வாரியம்.
எவ்வளவு காலம் இது நடக்கும்?
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?









































