Friday, 8 Aug 2008

2008/08/08 Lena Katturai

lena.jpgகண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

நம் பார்வைக்கு வந்து போகும் விஷயங்களில் பலவற்றையே ஏகமாய்க் கோட்டை விடும்போது, நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

வெகுநாள்களாகக் கவனிக்கப்படாத பரணைத் தூசு தட்டிக் கிளப்பும்போது அரிய புகைப்படங்க்ள, புதுப்பிக்க மறந்து போன லாக்கர் சங்கதிகள்; அரிய தகவல்கள்; தேடிக்கொண்டிருந்த ஒரு கணக்கு; குறிப்பிட்ட சிலரை அசத்தக் கிடைத்த சில பழைய சங்கதிகள் ஆகியவற்றோடு செல்லரித்து வீணாகிவிட்ட பல நல்ல சங்கதிகளும் கிடைக்கின்றன.

இப்படித்தான் நம் வாழ்விலும். இரயிலின் ஒருபுறம் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை இரசிக்கும்போது மறுபுறக் காட்சிகளை நாம் தவறவிடுவதுபோல், வாழ்வின் ஓட்டத்தில் ஒரு கோணம் மட்டுமே பார்த்து மறுபுறத்தைக் கோட்டைவிட்டுவிடுகிறோம்.

எனவே, அவ்வப்போது மறுபுறமும் சற்று எட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவரை நம்பி ஒரு செயலை ஒப்படைத்திருப்போம். அதை அவர் சிறப்பாகச் செய்வதாகாகவே நம்பிக் கொண்டிருப்போம். காரணம், எதிர்மறை அலைகள் எதுவும் நம் கவனத்திற்கு வராததும், அவரைப் பற்றி நமக்கு மாற்றுக் கருத்து இல்லாததும்தாம். ஆனால் மெல்ல இறங்கிக் குடையுங்கள். அடாடா! இவ்வளவு காலமாக இந்தக் கோளாறு நடக்கிறதாக்கும்? என்பது நமக்குத் தெரியவரும். எவையெல்லாம் நம் கண்ணிலிருந்து தப்பிக்க வல்லவை. பிள்ளைகளின் நடத்தை, ஒழுக்கம் உட்பட? என்று ஒரு பட்டியல் இடுங்கள்.

இவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு குடையுங்கள். காலங்காலமாக செல்லரித்த விஷயங்கள் இல்லாவிட்டால் கேளுங்கள்.

தவறே நடக்காது என்று அனுமானிப்பதைவிட, நிச்சயம் தவறு நடக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கான நேரத்தையும் மனநிலையையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். செல்கள் நாம் அமர்ந்திருக்கும் பாயை அரிக்காலாம். நம் வேட்டியையுமா அரிக்க விடுவது?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்! 

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply