 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
எஸ்.சிக்கந்தர் பாஷா, வேலூர்.
|
 |
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்கிற வெங்கைய நாயுடுவின் யோசனை சரிப்பட்டு வருமா?
|
 |
தேர்தல் அடையாள அட்டையிலேயே நாம் இன்னும் முழுமை பெறவில்லை. விரிவான நாடு. விசாலமான எண்ணிக்கையில் மக்கள். வெங்கைய நாயுடு புரிந்துதான் பேசுகிறாரா? வெறுங்கையில் முழம் போட எண்ணும் வெங்கைய நாயுடு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்போது சாதித்துக் காட்டட்டும்.
|
|
 |
 |
மு. கருப்பசாமி, மதுரை.
|
 |
சமுதாயத்தில் நாம் ஒதுங்கினால் ஓரம் கட்டப்படுவோமா?
|
 |
சந்தேகமென்ன? பிரதான சாலையாக இருந்தவர்கள் சர்வீஸ் சாலையாகி விடுவார்கள்.
|
|
 |
 |
 |
 |
ஆர்.அகஸ்டின், தாம்பரம்.
|
 |
முண்டாசு கட்டிக் கொண்டால் விவசாயியாக ஆகிவிட முடியுமா? (விஜயகாந்ததைச் சொல்லவில்லை)
|
 |
விஜயகாந்த் மிகப் பெரிய பண்ணையார். இவரைப் பார்த்து முண்டாசுத் துண்டுகள் விவசாயிகளின் இடுப்புக்கு மாறுகின்றன. விஜயகாந்த் முண்டாசு கட்டியதெல்லாம் வெறும் அரசியல் ஸ்டண்ட்!
|
|
 |
 |
 |
 |
கீதா கண்ணன், பரமக்குடி.
|
 |
தமிழக ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்களுக்கு எல்லாம் அரசாங்கமே கார்களை வழங்கியிருக்கிறதே?
|
 |
பெருந்தலைவர் இனி மாமன், மைத்துனர்களோடு அரசு செலவிலேயே ஊர்க்கோலம் வரலாம். அதற்குதான் இந்தச் சிறப்பு ஏற்பாடு! உண்மையான மக்கள் தொண்டிற்கு இரு சக்கரங்களே போதும்!
|
|
 |
 |
 |
 |
‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.
|
 |
டெண்டுல்கர் உலக சாதனை படைப்பாரா?
|
 |
படைப்பார். இவர் படைக்கும்வரை கிரிக்கெட் போர்டும் இவரை விடாது போலிருக்கிறது. டெண்டுல்கர் பழைய பெருங்காய டப்பாவாக ஆகிவருகிறார். ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொருமுறை நன்றாக ஆடி என்ன பயன்?
|
|
 |
 |
 |
 |
ஆர்.கந்தசாமி, புதுக்கோட்டை.
|
 |
அரிசி விலை உயர்ந்து கொண்டே போகிறதே?
|
 |
தமிழகத்தில் அரிசி உற்பத்தி குறைந்து, கர்நாடக, ஆந்திர மாநிலங்களின் வருகையை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ் வரவுகளும் குறைந்து போகவே விலை கூடுகிறது. இன்னும் மூன்று மாதங்களில் நிலைமை சீராகிவிடும் என நினைக்கிறேன்.
|
|
 |
 |
 |
 |
ஏ. தமிழரசன், திருமங்கலம்.
|
 |
கனிமொழிக்கு மத்திய அமைச்சர் ஆகும் யோகம் இனியும் உண்டு என எண்ணுகிறீர்களா?
|
 |
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்யலாம். அமைச்சரவைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் எந்த படிவத்தைப் பூர்த்தி செய்வது?
|
|
 |
 |
 |
 |
பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.
|
 |
சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகர் பதவியில் நீடிப்பது முறையா?
|
 |
ஒரு வேளை அறுபதிலும் ஆசை வரும் என்பது காமத்திற்குப் பொருந்துவது போல் எண்பதிலும் ஆசை வரும் என்பது இந்த காம்ரேட்களுக்குப் பொருந்துமோ?
|
|
 |
 |
 |
 |
எஸ்.பஞ்சநாதன், திருச்சி.
|
 |
இனி இந்தியா-அமெரிக்கா?
|
 |
இந்திய விவசாயிகளும் கடன் தள்ளுபடியும் போல் இணைந்தே இருப்பார்கள்.
|
|
 |
 |
 |
 |
எல்.பலராமன், திருத்தணி.
|
 |
தமிழில் ஆவி படங்கள் வருவது குறைந்து போச்சே?
|
 |
ஆமாம்! ஆவி இடத்தை இப்போது கொட்டாவி பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கொட்டாவி படங்கள்தாம் நிறைய வருது.
|
|
 |
 |
 |
 |
கே. அஷரப் அலி, தொண்டி.
|
 |
மின்வெட்டு வராமலிருக்க ஒரு வழி?
|
 |
புதுச்சேரி ஆரோவில் மாதிரி சூரியனை நம்புங்கள். ஆரோவில்லில் மின்வெட்டே வருவதில்லை. அங்கு எல்லா வீடுகளிலும் பெரும்பாலும் சூரிய விளக்குகள் தாம். இங்குள்ள சூரியனை நம்பினால் ஆண்டிதான். நான் சொல்வது ஆரோவில் சூரியன்.
|
|
 |
 |
 |
 |
வே.மாயாண்டி, விருத்தாசலம்.
|
 |
சுயமரியாதை உள்ள பா.ம.க.,வினர் இனி தி.மு.க.வைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள் என்கிறாரே ராமதாஸ்?
|
 |
அப்படியே பா.ம.க.வினரின் கடந்த காலச் சுயமரியாதைகளை நாமும் திரும்பிப் பார்த்தால்?
|
|
 |
 |
 |
 |
சி.பெருமாள், திருநெல்வேலி.
|
 |
தமிழக அரசின் கேபிள் டி.வி.க்கு ஒத்துழைக்க மறுக்கும் சன் டி.வி. பற்றி?
|
 |
எவரையும் எவரும் நிர்பந்தப்படுத்த முடியாது. சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு வரப் பார்க்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது என நம்புகிறேன். நான் முழுமையாகச் சட்டம் படித்தவனல்லன். ஆனால் தமிழக அரசின் நிர்பந்தங்களுக்குப் பணியாத மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களையும் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த மூன்றும் உள்ளே வராதவரை அரசின் கேபிள் டி.வி. வெற்றி பெறாது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.சுந்தரராமன், அயனாவரம்.
|
 |
தமிழகத்தில் எய்ட்ஸ் குறித்த விளம்பரங்கள் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்துகின்றனவே?
|
 |
இதைவிட தர்ம சங்கடம் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகுவதுதான். எய்ட்ஸ் குறித்த விளம்பரங்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் குறைந்துள்ளனர் என்கிறது ஓர் ஆய்வின் முடிவு. உடல் மூலமாகப் பரவுவதற்கு இணையாக போடுகிற ஊசிகளின் மூலம் பரவுவதுதான் அதிர்ச்சியாக உள்ளது. விளம்பரங்களின் உரசல்களைச் சகித்துக் கொண்டால்தான் தமிழகம் சம்பாதித்துள்ள கெட்ட பெயர் நீங்கும்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.வீரபத்ரன், மதுரை.
|
 |
காமன்வெல்த் பாராளுமன்றச் சபாநாயகர்கள் மாநாட்டால் என்ன இலாபம்?
|
 |
எல்லா நாட்டுச் சபா நாயகர்களுக்கும் ஒரு ஃபாரின் டூர் கிடைக்கிறது. அதுவும் அரசாங்கச் செலவில். இது உங்களுக்கும் எனக்கும் கிடைக்குமா? இந்த காமன்வெல்த்தால் ‘காமன் வெல்த்’தான் வீணாகிறது. (பொதுப் பணம்)
|
|
 |
 |
டி.ராஜா, விருதுநகர்.
|
 |
ஆளும் கட்சியினரின் அடாவடிகளைக் காவல்துறையினர் கண்டுகொள்ள மாட்டேன்கிறார்களே?
|
 |
கண்டுகொண்டால், இவர்கள் வேறு எந்த போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டியிருக்குமோ?
|
|
 |
 |
நா.சுந்தரம், பெரியகுளம்.
|
 |
தி.மு.க. அரசை தி.மு.க., அமைச்சர்களே பாராட்டிக் கொள்கிறார்களே?
|
 |
சில சமயம் சில கச்சேரிகளில் பாகவதரே சபாஷ் போட்டுக் கொள்வதில்லையா? இதைவிடத் தந்தையே பாராட்டும் தனையனைத்தான் அதிகம் இரசித்தேன்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.சரசு, வேலூர்.
|
 |
1330 குறள்களை 11.47 நிமிடத்தில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ள தமிழக மாணவி பற்றி?
|
 |
திருச்சி அருகே ப. குரும்பட்டியைச் சேர்ந்த மாணவி தீபா ஒரு சலவைத் தொழிலாளியின் மகள். அப்பா துணியை வெளுத்து வாங்க, மகளோ திருக்குறளை வெளுத்து வாங்குகிறாள். படிப்பதோ ஆறாம் வகுப்பு. வயதோ பதினொன்று. சரஸ்வதிக்கு வயது பாராமல் வணக்கம் வைக்கத் தோன்றுகிறது.
|
|
 |
 |
பி.தண்டபாணி, மானாமதுரை.
|
 |
தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்த மன்னர் மானிய ஒழிப்பு ஆவணங்கள் மாயமாகி விட்டதாமே?
|
 |
முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களுக்கே இக்கதியென்றால் நமது விடுதலைப் பற்றி இவர்களிடம் என்ன இருக்கப் போகிறது?
|
|
 |
 |
 |
 |
கே.ராஜ்வேல், எட்டயபுரம்.
|
 |
அடுத்த பிரதமர் யார்?
|
 |
அசத்தப் போவது யாரு என்பதை அப்புறமாய் சொல்கிறேன். இப்போதைக்கு அபேட்சகரை மட்டும் சொல்கிறேன். அத்வானி ஒரு அபேட்சகர்! இங்கே அ.தி.மு.க. மாதிரி அங்கே பா.ஜ.க., இந்த விஷயத்தில் முந்திக் கொண்டது.
|
|
 |
 |
 |
 |
ஆ.ரங்கராஜன், குளித்தலை.
|
 |
தசாவதாரம் வெற்றியா?
|
 |
|
|
|
 |
 |
 |
 |
உ.சங்கரி, உடுமலைப்பேட்டை.
|
 |
சார்க் மாநாட்டில் கச்சத்தீவின் பிரச்னையைப் பிரதமர் எழுப்புவாரா?
|
 |
அறியேன். கச்சத்தீவைத் தாரை வார்த்த போது நம்மவர்கள் அங்கு மீன் பிடிக்கலாம் என்கிற விஷயம் இலங்கை அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்தான். அதை மறுப்பது இலங்கை அரசுக்கு அழகல்ல. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு வருவது இந்திய அரசுக்குப் பெருமையும் அல்ல.
|
|
 |
 |
 |
 |
எஸ்.இமானுவல், விழுப்புரம்.
|
 |
ஒரு திரைப்படம் நன்றாக ஓட என்ன செய்ய வேண்டும்?
|
 |
படம் வெளிவருவதற்கு முன்பே அதற்கான திருட்டு வி.சி.டி.யை நீங்களே விற்க வேண்டும். வெளியாகுமுன்பே திருட்டு வி.சி.டி. விற்றால்தான் விளம்பரம். மேலும் அப்படத்திலே என்னமோ ஏதோன்னு இப்போது வெறியோடு பார்க்கிறாங்க!.
|
|
 |
|
|