Sunday, 27 Jul 2008

Bomb blasts, Tamilnadu alert : Terrorist held in Nellai

சுதந்திர தினத்தன்று சென்னை, நெல்லையைத் தகர்க்கத் திட்டம்: தீவிரவாதி கைது

சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னை, நெல்லையைத் தகர்க்க தீட்டப்பட்டச் சதித்திட்டம முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக  நெல்லையில் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டான்.
 
பெங்களூரு, அகமதாபாத் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நாடு முழுக்க காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை அடுத்த பேட்டை பகுதியில் காவல்துறையினர் சோதனையில் அப்துல் கபூர் என்ற தீவிரவாதி பிடிபட்டார்.

39 வயதான அப்துல்கபூர் வருகிற சுதந்திர தினத்தன்று (15/08/08) சென்னையிலும் நெல்லையிலும் வெடிகுண்டுகளை வைக்க சதித்திட்டம் தீட்டிய கும்பலில் முக்கியமான நபர் என்பது தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக்கூடிய வெடிகுண்டு தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் கைப்பற்றப்பட்டன. இவருடைய கைது மூலம் மிகப்பெரிய சதித்திட்டத்தை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அப்துல் கபூர் கைது குறித்து தமிழக டி.ஜி.பி. அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்,

‘பெங்களூரு மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து,  தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி முதல்வர் ஆணையிட்டதன்பேரில் தமிழக காவல்துறை முடுக்கி ப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, பேட்டையைச் சேர்ந்த அப்துல் கபூர் (சேவுகானின் மகன்) என்பவர் வெடிகுண்டுகளை இயக்கும் டைமர் கருவிகளைத் தயாரித்து சென்னைக்குக் கொண்டுவர உள்ளார் என்ற தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் நெல்லை பேட்டை பகுதியில் உள்ள  மக்தூம் பள்ளி வாசல் தெருவில் உள்ள, அப்துல் கபூர் தங்கியுள்ள வீட்டில் சோதனையிட்டபொழுது வெடிகுண்டுக்கான கிளாக் மெக்கானிசம், மின்,சுற்றுக்கான வரைபடம், பேட்டரி செல்கள், இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்பட 21 உபகரணங்களை கைப்பற்றி அப்துல் கபூரை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட கூட்டாளிகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
 

Related Posts Title


Leave a Reply