Saturday, 26 Jul 2008
தொலைக்காட்சியில் திருமண சேவை!:
டாடா ஸ்கை - பாரத்மேட்ரிமோனி புது முயற்சி

சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் இனி நிச்சயிக்கப்படலாம். அதற்கான வசதியை டாடா ஸ்கை மற்றும் பாரத்மேட்ரிமோனி.காம் (www. bharatmatrimony.com). நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. டாடா ஸ்கை டி.டி.எச். (DTH) சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
டாடா ஸ்கை டி.டி.எச். இணைப்பு உங்கள் வீட்டில் இருந்தால் ஆக்டிவ் மேட்ரிமோனி (Actve matrimony)யை ரிமோட் மூலம் தேர்வு செய்யுங்கள். பல தரப்பட்ட மணமக்களின் விவரங்கள் அடங்கிய பெட்டகம் திறக்கும். பிறகென்ன, ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். தட்டினால் மணமகன், மணமகள் குறித்த விவரங்கள் கொட்டும். குறிப்பிட்ட நபர்களின் மொபைல் எண்கள் உங்கள் மொபைலுக்கு வரும். தொடர்பு கொண்டு நேரிடையாகவே பேசிக்கொள்ளலாம். திருமண விழாவை நோக்கிய பயணத்தை வகுக்கலாம்.
டாடா ஸ்கை - பாரத்மேட்ரிமோனி இணைந்து வழங்கும் இந்த சேவையைப் பற்றி அவர்களே கூற படியுங்கள்…
விக்ரம் மெஹ்ரா- தலைமை அதிகாரி, டாடா ஸ்கை, மார்க்கெட்டிங் பிரிவு
”டி.டி.எச். சேவையில் இண்ட்ராக்டிவ் சேவைகளே எங்களை தனித்துக்காட்டும் அம்சமாகும். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தேவையான தனிச் சிறப்புவாய்ந்த சேவையை வழங்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கல்வி, விளையாட்டு, ஆலய தரிசனம், சமையல் குறிப்புகள், குழந்தை நிகழ்ச்சிகள் உள்பட தற்போது, இத்துறையில் முதல்முறையாக தொலைக்காட்சியில் திருமண சேவை தகவல்களை தரவிருக்கிறோம். பாரத்மேட்ரிமோனி.காம் உடன் இணைந்து வழங்குவதால் (தற்போது, 23 லட்சம் வாடிக்கையாளர்கள்) எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும் என்று நம்புகிறோம்” என்றார்.
முருகவேல் ஜானகிராமன்- நிறுவனர்/ தலைமைச் செயல் அதிகாரி, பாரத்மேட்ரிமோனி.காம்
”இந்திய இல்லங்களுக்கு Actve matrimony திருமண சேவைகளை கொண்டுவருவதில் டாடா ஸ்கையுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி. எங்களது அடிப்படையான, 12 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் அல்லாது 2 மில்லியனுக்கும் அதிகமான இல்லங்களுக்கு நேரிடையாக சென்றடைவதன் மூலமாக திருமண இணைப்பு தொழில்துறையில் எங்கள் முன்னிலை இன்னும் வலுப்படும். இணையதள வசதி இல்லாதவர்களுக்கும், எங்கள் பாரத் மேட்ரிமோனி அலுவலகம் இல்லாத நகரங்களில் வசிப்பவர்களுக்கும் இந்த ஆக்டிவ் மேட்ரிமோனி பயனளிக்கும். டாடா ஸ்கை உடனான இந்தக் கூட்டு, ஏராளமானவர்களை மகிழ்ச்சிகரமான தம்பதியினராக உருவாக்கும் என நம்புகிறேன்” என்றார்.
மேற்கொண்டு விவரங்களுக்கு www.tatasky.com மற்றும் www. bharatmatrimony.com இணைய தளங்களில் அணுகலாம்.












































