Friday, 25 Jul 2008

2008/07/25 Lena Katturai

lena1.jpgநம் அலட்சியங்களின் விலைகள் ?

என் நெருங்கிய நண்பர் ஒருவர் உரிமையோடு என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். எவரும் கேட்டுவிட முடியாத கேள்வி அது.

”திடீரென்று சுனாமிப் பேரலை ஒன்று வர இருப்பதாகவும் உன் வீடு அதில் அடித்துப் போகப்படுவதாகவும், அந்த அலை இன்னும் ஏழே நிமிடத்தில் உன் வீட்டை நெருங்கிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம்.

இந்த ஏழு நிமிடங்களுக்குள் உன் லைசன்ஸ், பாஸ்போர்ட், வங்கிக்கணக்குகளின் புத்தகங்கள், இன்சூரன்ஸ் பேப்பர்கள், உன் உடமைப் பத்திரங்கள்; உன் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகச்சாவி, உன் கார்டு எனப்படும் வருமானவரி அடையாள அட்டை; உன் ரேஷன் அட்டை; உன் தேர்தல் அடையாளச் சீட்டு ஆகியவற்றை உன்னால் எடுத்துக் கொண்டு ஒரு பாதுகாப்பான, உயரமான இடத்திற்கு ஓடித் தப்பித்துவிட முடியுமா?”

”அடப் போப்பா! சுனாமி தாக்குற தூரத்துல நான் இல்லை. அதுவும் ஏழு நிமிஷம்தான் அவகாசமாம். எங்கே இருக்கு இப்படி ஒரு அறிவிப்பு வசதி?”

”தப்பிக்கப் பார்க்காதே! சரி உன் வீட்டின் பின்பகுதி பயங்கரமாத் தீப்பிடிச்சு எரியுது. இன்னும் ஏழு நிமிஷத்துல நான் சொன்ன அனைத்தையும் எடுத்துக்கிட்டு உன்னால பாதுகாப்பா வெளியேற முடியுமா?”

”ஏம்ப்பா! உனக்கு நல்லபடியாவே சிந்திக்கத் தெரியாதா? என் வீடு தீப்பிடிச்சு எரியும்; எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஓடு என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?”

”ஏய்! பேச்சைத் திசை திருப்புறே நீ! நான் கேக்குறதெல்லாம் ஏழு நிமிஷத்துக்குள்ளே முக்கியமான அம்சங்களை உன்னால் எடுத்துவிட முடியுமா என்பதுதான்.”

”முடியாதுப்பா! அதுஅது எங்கெங்கெயோ இருக்கு. தேடணும். அவசரத்திற்கு ஒண்ணும் ஆகாது.”

”இவ்வளவு அலட்சியம் கூடாது. இதுக்கு நீ நிறைய விலை கொடுக்க வேண்டிவரும். நான் சொன்னதையெல்லாம் தேடிப்பிடி. பாதுகாப்புப் பண்ணு. எந்த நேரத்துல எது அவசரமாகத் தேவைப்படுமோ தெரியாது. அதுக்காகத்தான் சொன்னேன்!”

இந்த ஒரு பக்கக் கட்டுரையாளனின் கண் திறந்த புண்ணியவான் அந்த நண்பன்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply