Thursday, 10 Jul 2008

2008/07/11 Lena Katturai

lena-tamilvanan.jpgசின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

சொட்டு நீர்ப் பாசனத்தைச் சாதாரணமாக நினைக்கிறோம். குறைத்து வைத்தால்கூட இது ஒரு நாளைக்கு 60 பாட்டில் தண்ணீரை ஒரு மரத்திற்கு ஆரவாரமில்லாமல் தந்துவிடுகிறது.

பார்வைக்கும், மனக்கணக்கிற்கும் புலப்படாத இச்செயலால் மரங்களுக்கு நன்மைதான், ஆனால், நம் சம்பாத்தியத்திலிருந்து வழியும் சிறுசிறு ஓட்டைகளால் நமக்கு ஏற்படும் அளவுகளைக் கணக்கிட்டால் தலைசுற்றும்.

என் நண்பர் ஒருவர் கோல்ட் ஃபிளாக் சிகரெட் பிரியர். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் பிடிப்பார். மனைவியின் பார்வையில் இல்லாத பயண நாள்களில் இரு பாக்கெட்டுகளைக்கூடக் காலி செய்துவிடுவார். கோல்ட் ஃபிளாக் பாக்கெட்டின் விலை 25.00. மாதம் 35 பாக்கெட்டுகள் எனக் கொண்டால் வருஷத்திற்கு 10,500 ரூபாய். கடந்த 20 வருடங்களாகப் பிடிக்கிறார் என்றால் 2,10,000.00 ரூபாய்.

எதையும் பெருங்கணக்காகப் பெருக்கிப் பார்க்க வேண்டும். சொட்டு நீர்தானே என்று அலட்சியமாக எண்ணிவிட முடியாது.

சிகரெட் என்றல்ல, இப்படித் தவிர்க்கக்கூடிய செலவினங்கள் ஒவ்வொன்றையும் முரட்டு எண்களால் பெருக்கிப் பெருக்கிப் பாருங்கள். இந்த மதிப்பில் ஒரு மனை வாங்கிப் போட்டிருந்தால்? இதற்குப் பதிலாக மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கிச் சேர்த்திருந்தால்? (இயலாதவர்கள் மாதம் ஒரு வெள்ளிக்காசு வாங்கிச் சேர்த்திருந்தால், என்று சிந்திக்கலாம்).

ஓர் உண்டியலை போட்டு நாம் ஒவ்வொரு சிறு தவறு செய்யும் போதெல்லாம் அதில் மதிப்புமிக்க ஒரு தொகையை சுயஅபராதமாக விதித்துக்கொண்டு போட்டு வந்தால் தவறுகள் குறைவதோடு மிகப் பெரிய தொகையும் சத்தமில்லாமல் சேர்ந்துவிடும்.

விலைவாசிகள் பெருத்துவிட்ட நிலையில், வருமானம் பெருகாத நிலையில் (அல்லது குறைந்துவிட்ட நிலையில்) சிறு ஓட்டைகளை அடைத்தால் இதுவே ஒரு புது வருமானம்; கூடுதல் வருமானமும் கூட!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


One Response to “2008/07/11 Lena Katturai”

  1. Stephen

    Fantastic. Very well said Lena

Leave a Reply