2008/08/01 Lenavin Payna Katturai

Posted on Thursday 31 July 2008

shanghai2.jpgசீனம் சென்று வந்தேன்!

கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

சீன மருந்துத் தயாரிப்பாளர் மையூன் சொன்ன அதிர்ச்சிச் செய்திகள் உண்மையா? என்று சென்னையின் பிரபல மருந்து விற்பனையாளர், வி.மீனாட்சி சுந்தரத்தைக் கேட்டேன்.

”அப்படியே உண்மை” என்றார்.

எனவே பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் விரைவில் இந்திய மருந்து உலகில் பெரிய விலையேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிற உண்மையை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

”மிஸ்டர் மை யூன் கேட்கிறேனே என்று தவறாக எண்ணாதீர்கள். இந்தியாவுக்கு என்றால் சற்று சுமாரான தரம்தான் அனுப்புவார்களாமே சீனாவில், உங்கள் விஷயத்தில் அப்படி இல்லையே?”

உடனே கால் மீது கனமான ஒரு பொருள் விழுந்தால் ஒரு குதிகுதிப்பார்களே அப்படி ஒரு குதி குதித்தார் மை யூன்.

”ஐயையோ! என்ன மிஸ்டர் லீனா! (யோவ்! லீனாங்குறவங்க ஒரு பொம்பளைய்யா!) இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இந்தியர்கள் காஸ்ட் கான்ஷியஸ் உள்ளவர்கள் என்பது தெரியும். அதற்காக மருந்து விஷயத்தில் விளையாடுவோமா? மருந்து விஷயத்தில் பல தரங்கள் கிடையாது. ஒரே தரம் மட்டும்தான். அதுவும் சிறந்த தரம்” என்று கண்கள் பனிக்கப் பேசினார். இன்னும் சற்று விட்டால் அழுதே விடுவார் போல் இருந்தது. எனவே, விஷயத்தைச் சற்று மாற்றிப் பேச வேண்டியிருந்தது.

”ஷாங்காயில் பார்க்க வேண்டியவை என்று நீங்கள் எதைச் சொல்வீர்கள்?”

”யுவான் தோட்டம் பாருங்கள் மிக அழகானது. கோயில் விஷயத்தில் ஆர்வம் இருந்தால் கன்பூஷியஸ் கோயிலுக்குப் போங்கள்.”

”கன்பூஷியஸா?” இந்தச் சொல்லைக் கேட்டதும் இருக்கையை விட்டு எழுந்திருக்காத குறைதான் நான்.

”தத்துவமேதை கன்பூஷியஸையா சொல்கிறீர்கள்?”

”அவரேதான்.”

”அவருக்குக் கோயிலா? அவர் என்ன கடவுளா?”

”கடவுளுக்குத்தான் கோயில் அமைக்க வேண்டுமா என்ன? சீனாவில் தோன்றிய இணையற்ற வாழ்வு நெறிகளை வகுத்த மேதை கன்பூஷியஸ்.”

”தெரியும். அவரது தத்துவங்களை எங்கள் கல்கண்டு இதழில் பலமுறை பிரசுரிக்கிறோம். அவரை மேடையில் குறிப்பிடாத எங்கள் தமிழகப் பேச்சாளர்களே மிகக் குறைவு.”

”அப்படியா? எங்கள் கன்பூஷியஸை உங்களவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே! பலே! இந்தியர்களைப் போல் சீனர்களும் கூட்டுக்குடித்தனத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். ஆசியாவில் சீனர்களும் இந்தியர்களும்தான் இன்னமும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். சீனாவில் கூட்டுக் குடித்தனத்திற்கு அடித்தளம் அமைத்தவரே கன்பூஷியஸ்தான். எனவே, இந்த ஆலயம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.”

அவசியம் பார்க்க வேண்டும் என அடையாளம் கேட்டுக் கொண்டேன். மை யூன் சொன்ன பெயர்களெல்லாம் எனக்கு வாயில் நுழைய மறுத்தன என்பதோடு, நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. எனவே ஒவ்வோர் எழுத்தாக ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.

பிறகு நானும் செந்தில் குமாருமாகப் போனோம். சாலையோரம் இருந்த எளிய கோயில் அது. பிரமாண்டம் என்பதே இல்லை. ஓரளவு கூட்டம் இருந்தது. பலர் அமைதியாக செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு ஊதுபத்திகளை வாங்கிக் கொண்டு பற்ற வைத்துச் சொருகிவிட்டு வந்தனர். அமைதியும் கட்டுப்பாடும் அங்கே இலக்கணங்களாக இருந்தன. நிறையக் கேள்விப்பட்ட கன்பூஷியஸை நேரில் பார்த்தபோது, மனிதர் பல கதைகளையும் தத்துவங்களையும் சொல்லிச் சொல்லி பூகோள எல்லைகளைக் கூடத் தம் அறிவாற்றலால் கடந்திருக்கிறாரே என வியக்கத் தோன்றியது.

சிற்றுருவாய் இருந்தார் கன்பூஷியஸ். சில சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சீனக் கோயில்களுக்கும், இந்துக் கோயில்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. பூக்கள், ஊதுபத்திகள், அமைதி, இரு கைகூப்பிய வணக்கம், பூசாரி போன்ற ஒருவர் ஆகியவற்றையெல்லாம் இந்துக் கோயில்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

வாழும் வழிமுறைகளை நமக்கு நிறையச் சொல்லிக் கொடுத்த வள்ளுவருக்கு நாம் ஏன் இன்னும் முக்கியத்துவம் கொடுத்து வணங்கக் கூடாது என்கிற ஏக்கமே கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது.

உள்ளே நுழையும்போது பூக்களை விற்கிற கடையில் உள்ளவர்கள் வேணுமா என்பதுபோல் கண்களால் கேட்கிறார்களே தவிர, ”வாங்கம்மா! பூம்மா!” என்கிற குரல்களெல்லாம் இல்லவே இல்லை!

பெரிய பெரிய கடைகள் முதல், பூக்காரக் கடைகள் வரைக்கும் வாடிக்கையாளரை வற்புறுத்தாத இந்தக் கலாசாரம் எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று என்பேன்.

காலணிகளைப் பார்த்துக் கொள்ள எவரும் இல்லை. டோக்கன் இல்லை. ”அதெல்லாம் இங்கே யாரும் தொடமாட்டாங்க. சும்மா வாங்க” என்று நம்பிக்கையூட்டினார் செந்தில்.

”செருப்புகள், ஷூக்கள் மட்டுமல்லை, நம் பைகளை, நம் உடமைகளை விட்டுவிட்டுச் சென்றால்கூட எவரும் தொடமாட்டார்கள்” என்றார்.

பிச்சைக்காரர்களைத் தேடினேன். கோயிலில் இல்லாமல் வேறு எங்கே இவர்களைக் காண முடியும் என்கிற எண்ணம் எனக்கு. ஒருவரையும் காணவில்லை.

தன்மானத்துடன் பிழைக்க எண்ணுகிறார்களா? அல்லது சீன அரசு இவர்களை அப்படிப் பார்த்துக் கொள்கிறதா? அல்லது பிச்சையெடுத்தால் அடி, உதைதானா? தெரியவில்லை. செந்தில்குமாரிடம் கேட்க எண்ணினேன். விடுபட்டுப் போய்விட்டது.

ஷாங்காயில் யுவான் தோட்டம் மிக அழகானது. அவசியம் பாருங்கள் என்று சொன்னது நினைவுக்கு வரவே, அங்கேயும் சென்றோம்.

”மிங் மற்றும் குவிங் காலத்து முறையில் இத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றாள் ஒரு வழிகாட்டிப் பெண். ”யாருங்க மிங் குவிங்கெல்லாம்? எனக்குத் தெரியாதுங்க” என்றேன்.

“வாட்? வாட்?’ என்றவள் பிறகு சிரித்துக்கொண்டு அமைதியாக விட்டுவிட்டாள்.

யுவான் தோட்டம் மகாப் பெரிசு. நடந்து நடந்து கால்கள் வலிக்க, ஆனால் தோட்டத்தின் அழகும், நேர்த்தியும், பசுமைகளும் வண்ணங்களும் அந்த வலியை மறக்கடிக்க வைத்தன. கி.பி.1559இல் உருவாக்கப்பட்டதாம் இந்தத் தோட்டம். அப்பாடா? எப்போதோ தமிழில் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் வந்துவிட்டது.

எப்படி இப்படி நானூற்று ஐம்பது ஆண்டுகளையும் கடந்து இதைப் பாழடிக்காமல் பாதுகாக்கிறார்கள் என்று வியக்கத் தோன்றியது.

அதைவிட வியப்பு, எப்படி பதினாறாம் நூற்றாண்டுக்காரர்களுக்குப் பூங்காக்களின் அருமை தெரிந்தது? என்று எண்ணத் தோன்றியது.

”30 விதமான சீனிக் (scenic) ஸ்பாட்டுகள் இங்கே உள்ளன. நாம் நான்கைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை” என்று சீன வழிகாட்டி சொல்ல,

”என்னது இன்னும் இது போல் 26 இடங்களா? என்னால் முடியாது. இங்கே பாட்டரி கார் சைக்கிளெல்லாம் கிடையாதா? நான் வரலை இந்த விளையாட்டுக்கு” என்றேன் வழிகாட்டியிடம்.

”என்ன இப்படி இளைஞராக (!?) இருந்து கொண்டு கிழவன் மாதிரி பேசுகிறீர்கள்? வாருங்கள் என் பின்னால்! நான் இந்தப் பூங்காவைத் தினமும் எத்தனை முறை வலம் வருகிறேன் தெரியுமா?”

‘நடப்பதே உங்கள் தொழிலம்மா. நாள் முழுக்க உட்கார்ந்த இடத்திலிருந்தே எழுதுவது எங்கள் தொழிலம்மா’ என்று சொல்ல நினைத்தவன் கப்சிப் ஆனேன். என்னைக் கப்சிப் ஆக்கியது என்னை அந்தம்மா ‘இளைஞன்’ என்று கருதிக் கொண்டது என நினைக்கிறேன்.

உணவுத் துகள் போன்ற ஒரு பொருளை வாங்கக் சொல்லி, ”அந்தக் குளத்தில் வீசுங்கள்” என்றாள் வழிகாட்டிப் பெண்.

”ஏன் ஏதும் நம்பிக்கையா? ஏதும் நல்லது நடக்குமா?” என்றேன்.

”அதெல்லாம் இல்லை. மீன்கள் வரும் தின்ன” என்றாள். போட்டதும் வந்தன பாருங்களேன் கூட்டங்கள், அசந்து போனேன். போடப் போட, கொசக்கொசவென ஒன்றின்மேல் ஒன்று தாவி நொடியில் வீசிய அனைத்தையும் காணாமலடித்தன.

”இன்னும் வாங்கிப் போடுங்கள்.” ‘உனக்கென்னம்மா! நீ பாட்டு சொல்லிடுவே! நாங்கள் வந்த இடத்து ஏழைகள். நோட்டைத் தேய்த்துத் தேய்த்துதான் எங்களால் விட முடியும்’ என்று சொல்ல நினைத்து இதையும் அடக்கிக் காத்தேன்.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

 2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 11:59 pm
Filed under: Uncategorized
2008/08/01 Lena Katturai

Posted on Thursday 31 July 2008

lena2.jpgவார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்துவிட முடியாது.

நம் பொருளாதாரக் கஷ்டங்களைச் சொன்னால் அவை குறித்து இரக்கப்படுகிறவர்கள், உதவ முன்வருபவர்கள் மட்டுமல்ல உள்ளூர மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் நாம் ஏன் புலம்ப வேண்டும்? விழுங்க வேண்டியதுதான்.

ஊரறியப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகத் தங்களது வசதி வாய்ப்புகளை, வளங்களைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இதில் மகிழ்பவர்கள் சில சதவிகிதமே. பொறாமைப்பட்டுச் சாகிறவர்களும்; அப்படியா சேதி? உன்னை இனியும் வளர விடுவேனா பார் என்று கெடுதல் வேலையிலும் அவதூறு பிரசாரத்திலும் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் குடையும்போது வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான், நாம் பிறரைப் பற்றி எத்துணையோ இரகசியங்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவை வெளிப்பட்டால் அவர்களுக்குச் சிறுசிறு பாதிப்பிலிருந்து தலைதூக்க முடியாத பாதிப்புகள் வரை ஏற்படலாம் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். ”சும்மா சொல்லுங்க; இருக்கிறதைத்தானே சொல்லப் போறீங்க? கூட்டிக் குறைச்சுப் பேசுகிறவர் இல்லையே நீங்க” என்று தாஜா செய்கிற பாணியில் பேசி விஷயத்தைக் கறக்க நினைப்பவர்களிடமும் வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான்.

பிறரைப் பற்றிய புகார்ப் பட்டியலை வேறு வழியின்றி நாமே முன்வந்து வாசிக்க நேரும்போது, அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் வீரியத்தை மனத்தில் கொண்டு வார்த்தைகளைச் சற்று விழுங்கலாம். நம் நோக்கம் பழிவாங்குவது அல்ல. இனி அத் தவறு மறுபடி நிகழக்கூடாது என்பது. அதற்கு ஏற்றவாறு அடக்கி வாசிக்கலாம். அதுமட்டுமல்ல, கண்டிச்சு வையுங்க. தண்டிச்சிராதீங்க என்றும் நான்கு வார்த்தை சேர்த்துச் சொல்லலாம்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 11:46 pm
Filed under: Uncategorized
2008/08/01 Lenavin Parvayil

Posted on Thursday 31 July 2008

manmohan-singh.jpgகாங்கிரசின் புதுக் கணக்கு

மத்திய அரசு கவிழாமல் தப்பித்தது, கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்களைப் பொறுத்தவரை மிக நல்ல செய்தி.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்பாராத ஒரு தேர்தல் வலிந்து திணிக்கப்படுவதை எந்த ஓர் உண்மைக் குடிமகனாலும் ஏற்க முடியாது.

நாடும், விலைவாசியும் போகிற போக்கில் குடியரசுத் தலைவராக இருக்கும் அம்மணியால் எதையும் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இரு சிறந்த நிதி நிர்வாகிகள் இருந்தே சாதிக்கமுடியாத இந்த நிலைமையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மட்டும் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இரு சிறந்த நிதி நிர்வாகிகள் இருந்தே சாதிக்கமுடியாத இந்த நிலைமையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மட்டும் சமாளிக்க முடியுமா? என்பது நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்களின் ஆழ்மனக் கேள்வியாகும்.

பாவம் கம்யூனிஸ்டுகள், இறக்குமதி செய்யப்பட்ட, இந்த நாட்டிற்குச் சற்றும் பொருந்தாத ரஷ்ய, சீனக் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிப் பார்த்தார்கள். நடக்கவில்லை என்றதும், அதைப் பாதியில் கைகழுவிவிட்டு அடிப்படை கம்யூனிச சித்தாந்தங்களை ஒரு கலப்படமான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

சீனக் கம்யூனிசமும் ரஷ்யக் கம்யூனிசமும் அடிப்படைகளில் நிறைய வேறுபடுபவை. ஆனால், இடதுசாரிகளும் வலது சாரிகளும் கூட்டணி அரசைக் கவிழத்து நாட்டின் நிலைமையைக்கூட நிற்கதியில் நிறுத்தத் தயாரானார்கள். ஆனால் ஜம்பம் சாயக் காணோம்.

மன்மோகன் சிங் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தார். எங்கள் அரசுக்கு ஆபத்து இல்லை என்று ஜப்பானியப் பயணத்தின்போதே உறுதிபடப் பேசினார்.

இதிலிருந்து மற்றவர்கள் போட்ட கணக்கு வேறு. காங்கிரஸ் போட்ட கணக்கு வேறு என்பது தெளிவாகத் தெரிகிறது.

குதிரைப் பேரம் மாநிலங்களில் நடக்கும். கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசில் நடந்ததாக அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை. எதிர்க்கட்சிகள் என்னதான் பாராளுமன்றத்தின் மேசையில் பணக்கட்டுகளைக் கொண்டுவந்து கொட்டிக் காட்டினாலும், மன்மோகன்சிங் கேட்டதுபோல் நிரூபணங்கள் இல்லை.

அதே நேரத்தில் -

பாராளுமன்ற உறுப்பினர்களை வசீகரிப்பதில் தவறுகளே நடக்கவில்லை என்று உறுதிபட கூறவும் முடியவில்லை.

பலரை வாக்களிக்காமல் பார்த்துக் கொண்ட சாமர்த்தியமும் காங்கிரசுக்கே உரியது.

ஒரு வழியாக கம்யூனிஸ்டுகளின் மிரட்டல்களுக்குத் தீர்வு ஏற்பட்டுவிட்டது. நித்தியகண்டம் பூரண ஆயுசு என்கிற அத்தியாயம் ஓய்ந்துவிட்டது.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் போட்ட இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தவறில்லை; ஆனால், சில அம்சங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பாரதிய ஜனதா, காங்கிரசை கவிழ்க்கத் தம் அரசியல் எதிரிகள் உருவாக்கிய சந்தர்ப்பத்தை நன்கும், தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது. பாவம் கனவு தகர்ந்ததுதான் மிச்சம்.

அரசியல் நெருக்கடிகளிலிருந்து வெளிவந்துள்ள காங்கிரஸ், இனி அணு ஒப்பந்தத்தைத் திட்டமிட்டபடி நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாட்டு மக்கள் இதற்கு நிச்சயம் ஆட்சேபிக்கப் போவது இல்லை.

ஆனால், இவர்களது அக்கறையெல்லாம் விலைவாசிகளைக் குறைக்கும் முயற்சியில் காங்கிரஸ் புதுக்கணக்குப் போடுமா என்பதுதான்!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 11:32 pm
Filed under: Uncategorized
2008/08/01 Chettinadu Samayal

Posted on Thursday 31 July 2008

brinjal-fry2.jpgகத்தரிக்காய் காரக்கறி - அலமேலு ரங்கநாதன்

சுட்ட கத்தரிக்காய் துவரம்

4 பெரிய கத்தரிக்காயை காம்புடன் சுட்டு, தோலை உரித்து பூச்சி இல்லாமல் பார்த்து பிசைந்து, நெய் இரண்டு தேக்கரண்டி, துவரம் பருப்பு இரண்டு தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 2 கிள்ளிப்போட்டு தாளித்து, பெருங்காயப்பொடி 1/2 தேக்கரண்டி உப்பும் சேர்த்து கலக்கவும். ரசம் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடலாம். தயிர் கலந்து தயிர் பச்சடியாகவும் சாம்பார், குழம்பு சாதத்துடன் சாப்பிடலாம். இதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து தயிரில் கலந்து மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு சுட்ட கத்தரிக்காயைப் பிசைந்து கலந்தும் பரிமாறலாம்.

பருப்பு கத்தரிக்காய்

தேவையான பொருட்கள்

சின்னக் கத்தரிக்காய் - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 4
பெருக்காயப்பபொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1கப்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி துருவி அதில் பாதியை எடுத்துக் கொள்ளவும்

செய்முறை:

பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடியவைக்கவும். பின்பு மிளகாய் வற்றல் தேங்காய் துருவல் உப்புடன் கெட்டியாக அரைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து அரைத்த பருப்பு, மஞ்சள் தூள், வெல்லம் கலந்து வைக்கவும். 1/2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து கத்தரிக்காயை நான்காக முக்கால் பாகம் வகுத்து அதில் இந்தக் கலவையை அடைக்கவும். எல்லாக் கத்தரிக்காயையும் இதே போல் செய்த இண்டாலியம் சட்டியில் எண்ணெய் முழுவதும் விட்டு, காய வைத்து, கத்தரிக்காயைப் போட்டு, ஒரு கை தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடிக்கடி திருப்பிவிடவும். கனமான கரண்டியால் கிளறினால் கத்தரிக்காய் கூழாகிவிடும். கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.

இரண்டாவது பக்குவம்

முன் பக்குவப்படி பருப்பை கத்தரிக்காயில் அடைத்த, இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க வைத்து, காயை ஆவியில் வேக வைத்து எடுத்துத் தாளிக்கலாம். இதற்கு எண்ணெய் அதிகம் செலவாகாது. தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் கத்தரிக்காயை இட்லித் தட்டில் வேகவைக்கவும். தண்ணீர் கொதிக்காமலிருந்தால் லேசான ஆவியில் கத்தரிக்காய் கன்னிப் போய் பிறகு வேகாது. கல் போல் ஆகிவிடும்.

Chettinadu Samayal

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி - அலமேலு ரங்கநாதன்

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 11:25 pm
Filed under: Uncategorized
2008/08/01 Healthy Life

Posted on Thursday 31 July 2008

onion.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

பெண்களுக்கு வரும் எலும்பு மெலிவு நோயான ஆஸ்டியோ போரோஸிசைக் குணமாக்கும் அரிய உணவு எது? வெங்காயம்தான்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகம் இடுப்பு எலும்பு மெலிவு, முறிவு நோயையும், எளிதில் உடையக்கூடிய எலும்பு மெலிவு நோய்களையும் நன்கு குணமாக்கவல்லது இந்த வெங்காயம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

பெர்ன் பல்கலைக் கழகத்தினர் நான்கு வாரங்கள் எலிகளுக்கு உணவாக வெங்காயத்தைக் கொடுத்து வந்தனர். ஆய்வில் இந்த எலிகளின் எலும்புகள் கனமாகவும் உறுதியாகவும் மாறி இருந்தன. பார்ஸ்லே, லெட்டூஸ், தக்காளி, வெள்ளரி, பூண்டு, மஞ்சள் நிறமான டில் போன்றவையும் எலும்புகளை உறுதியாக்க வல்லவை. ஆனால், வெங்காயத்தை ஒப்பிடும்போது இவையெல்லாம் சாதாரணமானவை.

எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்திச் சிபாரிசு செய்யப்படும் பாலும், சோயாவும் எலிகளின் எலும்புகளில் மிகச் சிறிய அளவில்தான் பயனை விளைவித்தன.

”எலும்பு மண்டலத்தின் வளர்ச்சி மாற்றத்தில் எல்லாக் காய்கறிகளும் எந்த அளவு பயன் தருகின்றன என்று ஆராய்ந்தோம். எலிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் மனித உடலிலும் இதே போன்ற விளைவை ஏற்படுத்த வல்லவை என்பது தெரியவந்தது. எலும்பு மெலிவு நோயைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான, கனமான, உறுதியான எலும்புகளை உடல் பெற்றிட மிகமிகச் சிறப்பான, இதைச் சரியாகவும், குறைந்த செலவிலும் குணப்படுத்தும் வெங்காயத்தையே பெண்களும் ஆண்களும் சேர்த்து வந்தால் போதும்” என்கிறார் இந்த ஆய்வுக் குழுவின் பொறுப்பாளரான டாக்டர் ரோமன் முகல்பெனர், ‘நேச்சர்’ பத்திரிகை பேட்டியில்.

”எலும்பு மெலிவைத் தடுக்கும் முக்கியமான கூட்டுப் பொருள் வெங்காயத்தில் இருக்கிறது. அது, ‘இந்தப் பொருள்தான்’ என்று சரியாகக் கூறமுடியவில்லை. மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவு முறையில் ஆரோக்கியத்தைப் பெருக்கும் சொத்து, தினமும் வெங்காயம் சாப்பிடுவதே என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆலிவ் ஆயில், பூண்டு, மீன், சிவப்பு நிற லெட்டூஸ், முட்டைக்கோசு இவற்றுடன் வெங்காயத்தை பச்சையாக நன்கு சேர்த்துக் கொள்கின்றனர்” என்கிறார் டாக்டர் ரோமன்.

எல்லா வகையான வெங்காயங்களிலும் சல்ஃபர் உப்பு வகைகள் உள்ளன. இவைதாம் இரத்தம் கட்டிப்படாமல பார்த்து கொள்கின்றன. சிவப்பு நிற வெங்காயத்தில் குயிர்சிட்டின் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் வீக்கம், அலர்ஜி ஏற்படாமலும் மாரடைப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது. சிறிய வெங்காயங்களில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்புச் சத்து பொட்டாசியம், பீட்டா காரட்டின் போன்றவை உள்ளன. இவை இளமை, கண்பார்வை, இரத்த விருத்தி முதலியவற்றைப் பாதுகாப்பத்தில் சிறப்பான பணியைச் செய்கினறனவாம்.

ஆஸ்துமாவா! பூனையைக் குளிப்பாட்டுங்கள்!

டாம்-பிளாட்ஸ்-மில்ஸ் என்பவர் வர்ஜீனியா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளிப் பேராசிரியர். ஆஸ்துமா, ஒவ்வாமை பற்றி ஆராய்ந்த இவர், உங்கள் வீட்டுப் பூனைகளை வாரம் ஒருமுறைக் குளிப்பாட்டுங்கள். ஆஸ்துமா உங்களை அண்டாது என்கிறார். கேள்வி கேட்காதீர்கள். பூனையைக் குளிப்பாட்டுங்கள் என்று மட்டும் பதிலுக்குச் சொன்னார். படுக்கையில் இருந்துகொண்டே பத்து முதல் பதினைஞ்சு ஆண்டுகள் டிவி பார்க்கிறார்கள், அமெரிக்கர்கள். தங்கள் வாழ்நாளில் இவ்வளவு நேரம் வீட்டிலேயே இருப்பதால், படுக்கையிலிருந்தும், வீட்டுக்குள்ளும் பழைய தூசிகள், சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அதனால், குறைந்த பட்சம் பூனையையாவது குளிப்பாட்டினால், தூசி, அசுத்தக்காற்றைச் சுவாசிப்பது குறைந்து ஆஸ்துமா குறையும் என்கிறார். பூனை வளர்க்காதவர்கள் யாரைக் குளிப்பாட்டுவது? வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 11:17 pm
Filed under: Uncategorized
2008/08/01 Beauty Tips

Posted on Thursday 31 July 2008

beauty.jpgஅழகுக் குறிப்புகள் - புவனா

நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

விஜயகாந்த்

தினமும் அதிகாலையில் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். ‘ஹெல்த் கிளப்’பில் அல்லது என் வீட்டில் இருக்கும் ‘மினி ஹெல்த் சென்டரில்’ உடற் பயிற்சிக் கருவிகள் மூலம் பயிற்சி செய்வேன். முன்பெல்லாம் ஜாகிங் போய்க்கொண்டிருந்தேன். இப்போது முடிவதில்லை.
காலை நேரங்களில் அலுவலகத்திற்கு வரும் போது அங்கு சில உடற்பயிற்சிகளையும், அங்கிருக்கும் சில கருவிகளையும் கொண்டு சில பயிற்சிகளையும் செய்வேன். அவுட்டோரில் நேரம் இராது. அப்படி ஒரு மாதம், இரண்டு மாதம் கூட உடற்பயிற்சி செய்யாமல் இருக்க நேரிடும். அந்தச் சமயங்களில் உணவில் கொஞ்சம் கட்டுப்பாடாய் இருந்து விடுவேன். என் உடல்வாகு எல்லாவிதச் சூழ்நிலைக்கும் வளைந்து கொடுக்கக்கூடியது. யோகாவிலுள்ள பிரணாயமும், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை மட்டும் தினமும் செய்வேன்.

உணவைப் பொறுத்தவரை, காலையில் எலுமிச்சம்பழம் ஜூஸ், தேன் கலந்து சாப்பிடுவேன். பிறகு, பயிற்சிகளைச் செய்துவிட்டு, காலை உணவாகப் பெரும்பாலும் நிலக்கடலை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, கோதுமை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட, உப்புத் தண்ணீர் சேர்ந்த கஞ்சியே சாப்பிடுவேன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. மதியம் இரண்டு சப்பாத்தி, காய்கறி, கொஞ்சம் சாதம், அதிகமாக எண்ணெய் சேர்க்காத நான் வெஜ் அயிட்டங்களைச் சாப்பிடுவேன். இரவு எப்போதுமே லைட் டிபன்தான். நடுவே இரண்டு, மூன்று தடவை சர்க்கரை சேர்க்காத காப்பி, இளநீர் சாப்பிடுவேன்.

அவுட்டோரில் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு உடல் வெயிட் அதிகமாகும் போது, உடற்பயிற்சிகள் செய்து குறைத்துக் கொள்வேன்.

அர்ஜுன்

உடற்பயிற்சி செய்வது என்பது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ஒரு பயிற்சியும் விடமாட்டேன். சிறு வயதிலிருந்தே இப்படித்தான். புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பேன். தரையில் செய்யும் பயிற்சிகள் மட்டுமல்லாமல் வீட்டிலேயே வைத்திருக்கும் உடற்பயிற்சிக் கருவிகளையும் உபயோகிப்பேன். அவுட்டோர் போனாலும் பயிற்சிகளை விடமாட்டேன். காலை நேரங்களில் பயிற்சி செய்ய முடியாமல் போனாலும் மதியம் அல்லது மாலையில் வயிறு காலியாக இருக்கும்போது, ஷூட்டிங்கில் ‘பிரேக்’ கிடைக்கும்போது பயிற்சி செய்வேன்.

உணவைப் பொறுத்தவரை, காலையில் பயிற்சிகளை முடித்த பின் கேழ்வரகுக் களிதான் என் பிரேக்ஃபாஸ்ட். காபி, டீ, ஆகியவற்றைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். மதியம் கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி சாப்பிடுவேன். வெயில் காலமாய் இருந்தால் நடுவில் இளநீர், மோர் சாப்பிடுவேன். எண்ணெய்ப் பொருள்களை அதிகம் சாப்பிட மாட்டேன். இரவு இரண்டு சப்பாத்திகள், தென்னிந்திய நடிகர்களுள்ளே வயிற்றில் கொஞ்சங்கூட சதை போடாமல் கரெக்டாக வைத்திருப்பவன் நான்தான் என்று நினைக்கிறேன். அந்த அளவு பாடி பில்டிங்கில் ஆர்வம் உள்ளவன்!

குஷ்பு

நான் கவர்ச்சியாகக் காணப்படுவதற்குக் காரணம், எனது உடலமைப்பு அந்த மாதிரி அமைந்திருக்கிறது.

மாதம் முழுவதிலும் இடைவிடாத படப்படிப்புகள் இருந்த போதிலும் தினமும் கொஞ்ச நேரமாவது தேகப் பயிற்சி செய்யாமல் இருக்க மாட்டேன். அதிக அவகாசம் கிடைத்தால், இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரங்கூட தேகப் பயிற்சிகள் செய்வேன். சாப்பாடு விஷயத்தில் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். முன்பெல்லாம் நொறுக்குத்தீனி தின்பதென்றால் பிடிக்கும். இப்போது டயட் விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிக்ட்.

படப்பிடிப்பில் ஓடியாடி நடிப்பது, நடனம் ஆடுவது, இவையெல்லாங்கூட ஒரு வகையில் நல்ல எக்ஸர்சைஸ்தான்! படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் கூட சோம்